நாளை முதல் அமலுக்கு வருகிறது பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் புதுதில்லி : நாடாளுமன்றத்தில் 2016 ஆகஸ்ட் மாதம் பினாமி பரிவர்த்தனை தடை மசோதா நிறைவேற்றப்பட்டது . இந்தச் சட்டம் , 2016 நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது . இந்தப் புதிய சட்டத்தில் பினாமி பரிவர்த்தனை புரிவோர்க்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் . பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 3 ஆண்டுகளாக இருந்த சிறை தண்டனை , 7 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது . சிறை தண்டனை போக சொத்தின் சந்தை மதிப்பில் 25% - ஐ அபராதத் தொகையாக வசூலிக்கப்படும் . பினாமி சொத்துகளை இழப்பீடு எதுவும் அளிக்காமல் பறிமுதல் செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது . வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான சொத்துகளுக்கு , பினாமி சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . பினாமி சொத்துகளை விசாரனை செய்யும் நீதிமன்றங்களும் , அதிகாரிகளும் விவரிக்கப்படுள்ளது . கறுப்பு பண நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் புழங்க...