உங்கள் வீட்டுமனை பார்க் ஒதுக்கபட்ட இடத்தில் வருகிறது என்ற குழப்பமா?
1) ஒராண்டாக பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகளை டிடிசிபி அப்ரூவ்டு மனைகளாக வரன்முறைபடுத்துதல் செய்ய அரசு உத்தரவிட்டு இருந்தது.அந்த வரன்முறைபடுத்துதலுக்கு பொதுமக்கள் செல்லும் பொழுதுதான் பலருக்கு இந்த பார்க் சிக்கல் குழப்பம் தெரிந்தது. 2) பலருடைய வீட்டுமனைகள் உங்கள் இடம் பூங்காவில் அதாவது பார்க்குக்கு ஒதுக்கபட்ட இடத்தில் வருகிறது. அதனால் டிடிசிபி வரன்முறைபடுத்துதல் செய்ய முடியாது என்று அங்கீகாரம் கேட்ட மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யபட்டன. 3) தனது சேமிப்பை போட்டு மனையை வாங்கிய மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் டிடிசிபி ஆபிஸ்கிற்கும் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.அரசு நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இதற்கு மாற்று என்ன செய்வது என்று தெரியாமல் சென்னை டிடிசிபி அலுவலகத்திற்கு சென்று சரி செய்துகொள்ள சொல்லி திருப்பி அனுப்பி கொண்டு இருக்கிறார்கள். 4) மேலும் வீட்டுமனைகளை வாங்கி போட்டுவிட்டு பல வருடங்கள் கழித்து இப்பொழுது அதில் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து அதற்கு கட்டிட அனுமதி (Building Plan)வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தி...