செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் !!
1. செட்டில்மென்ட் பத்திரம் என்பதும் குடும்ப ஏற்பாட்டு பத்திரம் என்பதும் ஒன்றுதான். 2. ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு தன் வாழ்நாள் காலத்திலேயே பிரித்து கொடுக்கும் பத்திரம் செட்டில்மெண்ட் பத்திரம் (அ) தான செட்டில்மெண்ட் பத்திரம் ஆகும். 3. மேற்படி செட்டில்மெண்ட் பத்திரம் குடும்ப உறவினருக்கு மட்டும்தான் போட முடியும். தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை ஆகியோர் மட்டும் உறுப்பினர்களாக பத்திர அலுவலகம் ஏற்று கொள்கிறது.. 4. குடும்ப உறுப்பினர் இல்லாதவருக்கு கொடுக்க நினைத்தால் அதற்கு “ தானப் பத்திரம்” போட வேண்டும். ( GIFT DEED) இறந்த பிறகு செட்டில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உயில் எழுத வேண்டும். 5. செட்டில்மெண்ட் பத்திரம் கொடுத்து விட்டு பிறகு மனம் வருத்தப்பட்டு செட்டில்மெண்டை ரத்து செய்கின்றனர். இப்படி ரத்து செய்வது சட்டப்படி செல்லாது என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது. 6. பத்திர பதிவு அலுவகத்தில் செட்டில்மெண்ட் பத்திரத்தை கடந்த 5௦ ஆண்டுகளாக ரத்து செய்கின்ற செட்டில்மெண்ட் ரத்து பத்திரம் போடுகின...