சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 4 அதில் தெரிந்து விடும், அதனை வைத்து அந்த பத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்துகொள்ள வேண்டும். மேலும் DIG உத்தரவு போட்டு அந்த MVG உயர்ந்து இருந்தால் அந்த உத்தரவை த.பெ.உ.ச – 2005 ன் மூலம் கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நில எடுப்பு தாசில்தாரருக்கு! பதிவுத்துறை தலைவர், பதிவுத்துறை துணை தலைவர், மாவட்ட பதிவாளார், சார்பதிவாளர் ஆகியோருக்கு நிலம் இழக்க போகும் சாமானியர்கள் நஷ்ட ஈட்டுக்கு தொகை நிர்ணயிக்கும் பொழுது பதிவு நடவடிக்கையில் மாற்றப்பட்ட உயர் மதிப்பைதான் எடுத்துகொள்ள வேண்டும் என்று மனு செய்ய வேண்டும். பென்சிலில் MVG இருப்பது சொல்லமாட்டோம்! அச்சில் இருப்பதுதான் சொல்வோம் என்று சார்பதிவாளர் மறுத்தால் பென்சிலில் இருக்கின்ற மதிப்பை வைத்து பதியப்பட்ட பத்திரத்தின் நகலை வைத்து அனைவருக்கும் மனு செய்ய வேண்டும். இப்படி செய்வதின் மூலம் பதிவுத்துறை...