பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!

பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!! அப்ரூவ்டு மேட்டர் தான் டிடிசிபி க்கு போயிடுச்சே இனி என்ன ஜோலி ரியல்எஸ்டேட் காரங்ககிட்ட வீட்டு மனை உருவாக்கும் தொழிலில் வட்டிக்கு முதல் திரட்டி மனைப்பிரிவுகள் விற்பனை செய்து நாலு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அயராது உழைக்கின்ற ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர்களின்வழிப்பறி செய்வது போல் செய்யலாமா! கடந்த 20 வருடமாக உங்களிடம் பஞ்சாயத்து தலைவர்கள் வார்டு மெம்பர்கள் என்று ஒவ்வொருவருக்கும் கப்பம் கட்டித் தானே பஞ்சாயத்து NOC மனைகளைப் போட்டோம் அப்பொழுது அங்கீகாரம் பற்றி அரசே ஒழுங்கா கொள்கை முடிவு எடுக்கவில்லை! அப்பொழுது உருவாக்கிய மனைகளை இன்று விதி மீறல்கள் ஏன் போர்டு வைக்கிறீர்கள்! இப்பொழுது டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் வாங்க ஓலை அனுப்பி இருக்கிறார்கள்!! அதற்கு அவர்களுக்கு கப்பம் கட்டத் தானே நாங்கள் கடன் வாங்கி பணம் பிரட்டிக் கொண்டு இருக்கிறோம். வேலை புராசாஸ்ல இருக்கும்பொழுதே நீங்கள் அறிவிப்பு போர்டு வைத்து பொதுமக்களை பயமுறுத்தலாமா!! டிடிசிபியில் அங்கீகாரம் அரசுக் கட்டணம் மட்டும் கட்டச் சொல்லி வேலையை ஒரு வருடம் இழுக்காமல் ...