சொத்தினைப் பயன்படுத்தி வருவதற்காக (Use and Occupation) வைப்பீடாகச் தொகை செலுத்த உத்தரவு பிறப்பித்தல் (பதிவு-8)
சொத்தினைப் பயன்படுத்தி வருவதற்காக (Use and Occupation) வைப்பீடாகச் தொகை செலுத்த உத்தரவு பிறப்பித்தல் (பதிவு-8) ஆக்கிரமிப்பு தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் காலத்தில், ஆக்கிரமிப்புதாரர் கோயில் சொத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதனால், சமய நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும். இந்நிலையைத் தவிர்க்க, **பிரிவு 78(5)**ன் கீழ், ஆக்கிரமிப்புதாரருக்கு கோயில் சொத்தை பயன்படுத்தி வருவதற்கான தொகையை வைப்பீடாக செலுத்துமாறு, இணை ஆணையர் உத்தரவிட வேண்டும். அத்தகைய உத்தரவை வழங்க, அறங்காவலர் தரப்பில் தனி மனுவை தாக்கல் செய்து, விசாரணையின் போது வாதங்களை முன்வைக்க முடியும். இது, சமய நிறுவனத்தின் நியாயமான வருவாயைத் தக்கவைத்து, கோயில் சொத்துகளின் உரிமையையும், நீதிமுறைகளையும் பாதுகாக்க உதவும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை தொடர்புக்கு+91 86100 6341 #hrnce #Hindu #religious #Charitable #Endowments #Department #hindureligiousandcharitableendowments