அம்மையநாயக்கனூர் கம்பளத்து ஜமீன்தாரின் கடன் வழக்கு தீர்ப்பு
அம்மையநாயக்கனூர் கம்பளத்து ஜமீன்தாரின் கடன் வழக்கு தீர்ப்பு 1)விஸ்வநாத நாயக்கர் (கி.பி. 1529-1564) விஜயநகர பேரரசின் கீழ் மதுரையின் முதல் நாயக்கராக நியமிக்கப்பட்டார். அவர் தனது ஆட்சி பகுதிகளை 72 பாளையங்களாகப் பிரித்து, பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார் மதுரையில் அவர் ஸ்தாபித்த கோட்டையில் 72 கொத்தளம் இருந்தன அதில் 50வது கொத்தளத்தை அம்மையநாயக்கனூர் வீரர்கள் காவல் காத்ததாக சொல்வார்கள் 2)அம்மைய நாயக்கனுர் பாளையம் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் வலிமையான பாளையமாக இருந்தது. விஜயநகர அரசில் தேவராயருக்கு பெரும் தளபதியாக இருந்த விஸ்வநாத நாயக்கர் அவருக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்தவர் பெஞ்சாமாநாயக்கன் விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கு முடி சூட்டி கொண்ட பொழுது பெஞ்சாம்மா நாயக்கன் அவர்களை திண்டுக்கல் நிலக்கோட்டை பக்கத்தில் இருக்கிற அம்மையானாயக்கனுர் சுற்றுவட்டாரத்தை பாளையமாக அறிவித்து பெஞ்சாம்மா நாயக்கர் முதல் பாளையக்கறாரார் ஆனார் 3)அம்மையநாயக்கனூரில் ஒரு செப்பு பட்டயம் கிடைத்து இருக்கிறது. அதில் திருமலை நாயக்கர் அரசர் மதுரை to திருச்சி மிக அவசரமாக 3 பயண நாட்களுக்குள் பல்லக்கில் ப...