பத்திரங்களை எங்கெல்லாம் பதியலாம் தெரிந்து கொள்ள வேண்டிய 14 விஷயங்கள்!!
1)ஒரு கிரய பத்திரதையோ அல்லது வேறு ஏதாவது பத்திரங்களையோ பதிய வேண்டும் என்றால் சொத்து இருக்கும் ஆட்சி எல்லைக்குட்டபட் சார்பதிவகத்தில் பதியலாம் என்பது அனைவருக்கும் தெரியும்அதில் சில விதிவிலக்குகளும் சிறப்பு விசயங்ளும் உள்ளன அவற்றை பார்ப்போம். 2)இரண்டு வெவ்வேறு கிராம சொத்து, இரண்டும் வேறு வேறு சார்பதிவக ஆட்சி எல்லையில் வருகிறது என்று வைத்து கொள்வோம்.உதாரணமாக செங்கல்பட்டு மாவட்ட திருக்கழுகுன்றம் சார்பதிவக எல்லைக்குள் இருக்கிற வசுவசமுத்திரம் கிராமத்திலும் 2இரண்டு ஏக்கர் நிலமும் மதுராந்தகம் சார்பதிவக எல்லைக்குள் இருக்கிற முருகம்பாக்கம் கிராமத்தில் 3ஏக்கர் நிலமும் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அதனை அப்படியே இன்னொருவருக்கு விற்கிறார் என்றால் 3)இரண்டு சொத்தையும் ஒரே கிரயபத்திரத்தில் எழுதி அதனை மேற்கண்ட இரண்டு சார்பதிவகத்தில் ஏதாவது ஒன்றில் மதுராந்தகமோ அல்லது திருகழுக்குன்றம் சார்பதிவகத்தில் பதியலாம் இப்படி ஒரு விதி பதிவு துறையில் இருக்கறது.நிறைய சொத்து வைத்து இருப்பவர்கள் சார்பதிவகம் சார்பதிவகமாக அலைய கூடாது என்பதற்காக இந்த விதி இருக்கிறது என்பது என் புரிதல் 4)பொது அதிகார பத்திரம் ...