நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!!
நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!! பாண்டிசேரி -செந்தில் முருகன் பிறந்து வளர்ந்தது விழுப்புரம் நகரத்தில் செட்டில்ஆனது பாண்டிசேரியில் !அரசு ஊழியாராக இருந்து ஓய்வு பெற்றவர்! மிகவும் பக்குவபட்டவர்! மனிதர்களை கையாளுவதில் திறனாளர்விழுப்புரத்தில் நடந்த நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கலந்து கொண்டவர் அதன்பிறகு என்னை இரண்டு மூன்று முறை சந்தித்து அன்பை பரிமாறிகொண்டோம்! அடுத்து கடலூரில் நடந்த வழிகாட்டுதல் முகாமிற்கு நேரடியாக வந்து தன்னார்வலாராக சிரம தானம் செய்தார் .நிகழ்ச்சிக்கு தேவையான சால்வைகள் நன்கொடையாக எடுத்து வந்தார்அன்னாருடன் ஒரு வேலையாக விழுப்புரம் பயணபடும் பொழது விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தேனிர் அருந்தினோம். அப்பொழுது அவர் பேச்சு வாக்கில் பழைய விழுப்புரத்தை படம் பிடித்து காட்டினார்!விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்,கலெக்டர் ஆபிஸ்,கோர்ட் என்று இருக்கின்ற இந்த பெரிய வளாகம் முழுதும் வழுதரெட்டி ஏரி இந்த ஏரியில் நான் குளித்து இருக்கிறேன்! இதோ நாம் இன்று டீ குடிக்கும் இந்த டிரெயினேஜ் பாதை ஒரு காலத்தில் வாய்க்கால்! இந்த ...