பிராப்தம் ரியல்டர்ஸ்ன் நிலம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள்….!

கடந்த ஒரு வருட காலமாக நிறைய நிலம் சம்பந்தமான களப்பணி வேலைகளை செய்திருக்கிறோம். மேற்படி வேலைகளை எங்களது குழுவினரை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், DTCP அலுவலகம் என எங்களது குழுவினர் அலைந்து திரிந்து செயல்பட்டாலும் அரசு எந்திரத்தில் இருக்கின்ற கும்பரகரன தூக்கத்தினாலும் அதனுடைய தாமதபடுத்துதலாலும் வாடிக்கையாளரிடம் அதிருப்திகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. மேலும் கள பணி ஆற்றுவதற்கு ஏற்றவாறான பிரதிபலன் எங்களுக்கும் கிடைக்கவில்லை என்பதால், தமிழகம் முழுவதும் சென்று களப்பணி ஆற்றும் சேவைகளை நிறுத்தி கொள்கிறோம். இனி கீழ்க்கண்டவற்றிற்க்கு மட்டும் ஆலோசனைகள் தேவைபட்டால் மனு செய்தல்களும் செய்து தரப்படும் , 1. MANUAL / ONLINE EC போடுதல். கிரைய பத்திரம் முதலான ஆவணங்களை சார்பதிவகத்தில் ஆய்வு செய்தல், ஆவணங்களை சரிபார்த்தல், மற்றும் ஆலோசனை கொடுத்தல். 2. உயில் எழுதுதல், உயிலை பதிவு செய்தல், உயிலை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தல், ரகசிய உயில் எழுதுவதற்கு துணை இருத்தல், இதற்கான ஆலோசனை மற்றும் சேவைகளை அளித்தல். 3. அரசு நில ஆர்ஜிதம் சம்பந்தமா...