Proprietary Estate Village இல்லாத Shrotriem Inam Village இனாம்தாரர்கள் ஆனபிராமணர்களுக்கு மண்ணுக்கடியில் உள்ள Mica சொந்தமாகுமா?
Proprietary Estate Village இல்லாத Shrotriem Inam Village இனாம்தாரர்கள் ஆனபிராமணர்களுக்கு மண்ணுக்கடியில் உள்ள Mica சொந்தமாகுமா? 1)ஆந்திராவில், அழகான வட பெண்ணையாற்றங்கரை நகரமான Potti Sriramulu Nellore-இலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில், தென்மேற்கு நோக்கி அமைந்துள்ள ஒரு அழகான கிராமம் தான் Anand Madugu. இந்த கிராமம் ஒரு Shrotriem Inam Village. வேதம் கற்றறிந்த பிராமணர்களுக்கு, அரசர்களால் இனாமாக வழங்கப்பட்ட கிராமமாகும். 2)அந்த கிராமத்தில் குடி வார உரிமையில் உள்ள விவசாயிகளிடம் விளைந்த பொருட்களில் மேல்வாரி பங்காக விளை பொருட்களை பெற்றுக் கொண்டு, நூற்றாண்டுகளுக்கு மேல் அதனை அனுபவித்து வந்ததால், அந்தப் பிராமணர்களுக்கு அந்தக் கிராமத்தின் “உரிமையாளர்கள்” என்ற எண்ணம் ஆழ்மனதில் உருவாகிவிட்டது. அவர்கள் தங்களை அந்தக் கிராமத்தின் “Owners” என எண்ணத் தொடங்கினார்கள். 3)அந்த கிராமத்தின் மண்ணின் அடியில் Mica என்ற மதிப்புள்ள கனிமம் இருந்தது. அதனை Duvvuru Balarami Reddy உள்ளிட்ட சிலருக்கு, 'Mica Mining Right” என்ற பெயரில், ஒரு Mining Lease, அந்த ஸ்தோத்திரியம் இனாம் பிராமணர்கள் வழங்கியிருந...