இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!!
இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!! இராமநாதபுரத்தில் ஒரு களபணி நிலுவையில் இருந்தது அதனை முடித்துவிட இராமநாதபுரம் சென்றேன். காலை இராமநாதபுரம் அரண்மனையை பார்க்க விருப்பம் நமது நில வரலாறு புத்தகத்திற்கு தரவுகளுக்காக !அதனால் காலையில் ஒரு ஆட்டோவில் கிளம்பி அரண்மனை சென்றோம். ஆட்டோகாரரிடம் இராமநாதபுரம் என்ற சிறப்பு அண்ணே என்றேன். அரபுநாடுகளும் இஸ்லாமிய சகோதரர்களும் இல்லை என்றால் இராம்நாடு இல்லை என்று சொல்லி விட்டார். அரண்மனைக்கு கொண்டு வந்து விட்டார்! நானும் நண்பர் இரவீந்திரனும் இராம்நாடு அரணமனையை சுற்றி வந்து அங்கு இருக்கும் இராஜாவை சந்திக்க முடியுமா என்று அரண்மணை ஊழியர்களை கேட்டேன் நான் ஒரு எழுத்தாளர் நிலம் சம்மந்தமாக ஆய்பவன் யூடியுபர் என்று அறிமுகபடுத்தி கொண்டேன். அதன்பிறகு ஒரு அரண்மணை நிர்வாகி இராஜாவிடம் பேசினார்! உடனடியாக அனுமதி கிடைத்து விட்டது! நீங்கள் அவரை சந்திக்கலாம் என்று சொன்னார்கள்! நாங்கள் இருவரும் அரண்மனையில் இராஜா அமர்ந்து இருக்கும் முற்றத்திற்கு சென்றோம்.எங்களை ஆசனம் கொடுத்து அமர சொன்னார்! கேள்விகளை கேட்க சொன்னார் !நான் ஏற்கனவே பேராசிரியர் கமால் அவர்களின் புத்த...