ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 2
ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 2 அதே போல் கீழ்வாரம் உரிமையை விற்கும் உரிமையும் ராயத்துகளுக்கு இந்த சட்டம் மூலமே கிடைத்தது இருந்தாலும் ஜமீன்கள் நம் தம் எஸ்டேட்டுகளின் ராஜாக்களாகவே ஜமீன்தார்கள் திகழ்ந்தனர் தங்களது நிலபிரபுவத்துவ சுரண்டலைத் தங்கு தடையின்றி நடத்த அவர்களுக்கு அதிகாரமும் செல்வாக்கும் இருந்தன. இந்த நிலையில் ரயத்துக்கள் மத்தியில் நஷ்டஈடின்றி ஜமீன் எஸ்டேட் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது 1930 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியும் 1936ம் ஆண்டு தோன்றிய அகில இந்திய கிசான் சபையும் காலம் காலமாக மரபு வழியாக இருக்கும் ஜமீன் உரிமையை ஒழிக்க கோஷம் போட்டது. 1937–ம் ஆண்டு சென்னை மரகானத்தில் ஜமீன் முறையை ஒழிக்க பிரகாசம் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது அந்த குழுவாரியாக விசாரணை நடத்தி ஒரு அறிக்கை தயாரித்து அரசாங்கத்திடம் சமர்பித்தது 1942 ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1908 ம் ஆண்டின் எஸ்டேட் சட்டபடி எவையெல்லாம் எஸ்டேட்டுகள் என நிர்ணயிக்கப்பட்டதோ அவையெல்லாம், 1948 எஸ்டேட் ஒழிப்பு (ரயத்துவாரி முறைக்கு மாற்றம்) சட்டம் கொண்டு வரப்பட்டு ஜமீன் முறை ஒழ...