
என்னை அரசர்கள் வரலாறுகளில் இருந்து அடிமைகள் வரலாற்றை பார்க்க வைத்த சீகன் பால்கு !! 1830 ற்கு முன்பு தமிழகத்தில் நடைமுறையில் இருந்த சாதிய விவசாய பண்ணைய தோட்ட தொ ழிலாள அடிமைமுறையின் தமிழக அடிமைகளை பற்றி ஒரு கட்டுரையை தமிழநாடு பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்று நான் எழுதி கொண்டு இருக்கும் புத்தகத்தில் சேர்க்க விருக்கிறேன்.வெளிநாடுகளான கரீபியன் தீவு பிஜி தீவு, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் கரும்பு தோட்டங்கள்,கஞ்சா தோட்டங்களில் கொத்தடிமைகாளக வேலை பார்க்க தமிழகத்தின் கடைநிலை மக்கள் பலர் அடிமைகளாக டச்சு போர்ச்சுகீயர்,டேனிஷ் கார்ர்களால் விற்கபட்டு கப்பலில் பண்டங்கள் போல ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தார்கள்.அந்த அடிமை வியாபாரத்தை பற்றி பற்றி இந்தியாவிற்கு வந்த முதல் புராட்டஸ்டாண்டு சாமியார் பார்த்தலோமியு சீகன்பால்கு தன் கப்பல் பயணத்தில் பார்த்த அடிமை வியாபரத்தையும் அடிமைகள் கொல்லபடுதலையும் பற்றி அகடமி ஆஃப் டெத் என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் .அந்த புத்தகத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு ஏதேட்சையாக வாசித்தேன் .அதன்பிறகு தமிழகத்தின் அடிமை முறை ,கூலி முறை ,படியாள் முறை, கொத்தடிமை ...