பெருஞ்சிறப்பான திண்டுகல் நகரும்! வைரகல் மனிதன் ஹைதர் அலியும்

பெருஞ்சிறப்பான திண்டுகல் நகரும்! வைரகல் மனதான் ஹைதர் அலியும்!! அவுரங்க சீப் காலத்தில் அவரின் ஆட்சியின் கீழ் ஒரு மாகண தலைவர்களாக இருந்த ஆற்காடு நவாபு, ஹைதராபாத் நிஜாம் எல்லாம் 1707 களில் அவுரங்க சீப் மறைவிற்கு பிறகு தனி அரசுகளாக அறிவித்து கொண்டன. பெரிய கட்டமைப்போடு ஆட்சி கட்டிலில் இருந்த நவாபு நிஜாம் எல்லாம் வெள்ளையர்களோடு இணக்கமாகவே இருந்தனர். அதனால் இன்று வரை இளவரசர் பட்டத்தோடு அவர்களின் வாரிசுகள் போக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் ஹைதர் அலி அவர்கள் நவாபு நிஜாம் போல மன்னர்குடி அல்ல! அவர் மக்களில் இருந்து வந்தவர். அவர்கள் தந்தையார் பாமினி சுல்தான்கள் படையில் போர் வீரர். இவர் மைசூர் கன்னட உடையார் அரசில் ஒரு காலாட் படை வீரா் அப்படியே பல போர்களில் பங்கெடுத்து படி படியாய் பெரிய தளபதியாகி பிறகு மைசூர் இராஜ்ஜியத்தையே தன் அரசாட்சியின் கீழ் கொண்டு வந்துவிட்டார். 1750 இல் இருந்து 1800 வரை இந்தியா முழுதும் போர் போர் போர் என்று ஆளுவதற்காக அடித்து மாண்டு கொண்டார்கள். சினிமாவில் எப்படி கடைசி சண்டை காட்சி பிறகு சுபம் போடுவார்களோ. அதே போல இந்த கால கட்டங்களில் பிரெஞ்சு, பிரிட்டிஷ், மராத்தி...