கூட்டுறவு மூலம் வீட்டுமனை புரட்சியில் கரம் கோர்ப்பீர்!!

நடுத்தர அடிதட்டு மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் ரியல் எஸ்டேட் விலைவாசியில் ஒரு வீட்டு தேவைக்காக உங்களுடைய பொருளாதார வாழக்கையை இழக்க வேண்டிய நிலைதான் எதிர்காலத்தில் வரும் . பல பன்னாட்டு நிறுவனங்கள் ரியல் எஸ்டேட்டில் வீடுகள் சந்தையில் இறங்கி விட்டன . அவர்களுக்கு வங்கிகளும் ஏன் அரசே கூட உதவிகள் செய்யும் . அப்படி பன்னாட்டு ரியல் எஸ்டேட் வியாபரிகள் விரிக்கிற மாயவலையில் சிக்கி உங்கள் சேமிப்பை இழக்காமல் இருக்கவும் ( பெங்களூரு சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த போலி விலைஉயர்வால் பலர் இன்னும் கடன் கட்டி கொண்டு இருக்கிறார்கள் ) விலை உயரும் என்ற நீர்குமிழிகளில் பல முதலீடுகள் உங்கள் மீது திணிக்கப்பட்டு விற்கப்பட்டு இருக்கின்றன . இவற்றை எல்லாம் சரி செய்ய முடியாது . ஆனால் விவரம் தெரிந்தவர்கள் இதில் இருந்து எதிர்காலத்தில் தப்பித்து கொள்ளலாம் என்னாலும் என் அனுபவத்தினாலும் இதற்கு வழிகாட்டலாம் . அதற்கான life boat தான் நாம் உருவாக்க போகும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் . மேலும் தற்சார்புடைய நமக்...