கார்வெட்டி நகர் ஜமீன் "அமரம் இனாம்" திரும்ப பெற்ற பிரைவி கவுன்சில் வழக்கு!
கார்வெட்டி நகர் ஜமீன் "அமரம் இனாம்" திரும்ப பெற்ற பிரைவி கவுன்சில் வழக்கு! 1) இந்தக் கட்டுரையில் நான் எழுதுகின்ற வழக்கு சொத்து அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் கார் வெட்டி நகர் ஜமீன் பகுதியில் புத்தூர் அருகில் இருக்கின்ற கிராமத்தில் இருந்தது. காவேட்டி நகர் ஜமீன் விஜயநகர பேரரசு காலத்தில் இருந்து பாளையமாக இருந்து 1802 முதல் ஜமீன் எஸ்டேட் ஆக குறைக்க பட்ட பகுதி ஆகும். இன்று தமிழ்நாட்டில் இருக்கிற திருவாலங்காடு, திருத்தணி, ஆர் கே பேட்டை ஆகிய ஊர்கள் என தென்பகுதி எல்லையாகவும் வடக்கே காலஹஷ்தி தாண்டியும் கிழக்கே வங்க கடலும் மேற்கே சித்தூர், திருப்பதி இடையில் இருக்கின்ற பகுதிகள் என எல்லைகள் ஆக கொண்ட ஜமீன் ஆகும். 2) தமிழ்நாட்டில் திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் இருக்கின்ற மறவர் பாளையங்களுக்கு மூதாதையர்கள் ராமநாதபுரம் சேதுபதி எப்படி அந்த குடும்பத்தின் ஒரு முன்னோர்களாக இருக்கிறார்களோ அதே போல் கார் வெட்டி நகர் ஜமீந்தாரியை ஆட்சி செய்த பொம்மராஜு (Bommaraju) குடும்பம், கி.பி. 8 நூற்றாண்டில் கோதாவரி டெல்டாவில் உள்ள பித்தாபுரம் சமஸ்தானாத்தை முன்னோர்களாக கொண்ட குடும்பம்...