#Meetoo தேவதைகள்
இணையதளம் முழுவதும் சமூக ஊடகங்கள் முழுவதும் இந்த #Meetooஇயக்கத்தை பற்றி பேசுகின்றனர். ஒரு பக்கம் சிலர் விமர்சிக்கின்றனர். ஒரு பக்கம் சிலர் ஆதரவு அளிக்கின்றனர். ஒரு சிலர் அமைதியாகவே இருக்கின்றனர். கடந்த இருபது நாட்களாக #Meetoo சமூக ஊடகங்ளில் பட்டைய கிளப்பிகொண்டு இருக்கின்றது. சரி நாமும் நம் அனுபவங்கள் வாயிலாக நமக்கு கிடைத்த புரிதல்களை எழுதலாம் என்று நினைத்து கொண்டே இருந்தேன். பெரும்பாலும் என் எழுத்துகள் ஒன்று என் செயல்கள் வேறொன்று இருந்தால் அதனை நானே அனுமதிப்பதும் இல்லை! ஏற்றுகொள்வதும் இல்லை.எழுதுவதும் செயல் படுவதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்னையில் இருப்பதனால் இந்த #Meetoo விஷயத்தில் பரஞ்சோதிபாண்டியன் என்பவனுக்குள் இருக்கின்ற கெட்ட பையன், நீ அமைதியாக வேடிக்கை மட்டும் பார்! இதில் நீ கருத்து சொல்ல சரியான ஆள் இல்லை. அதற்கு பெண்கள் பக்கம் நின்று ஆதரவு அளிக்க யோக்கியவனும் இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தான். இருந்தாலும் இப்பொழுது 37வயதாகி ஓரளவு ஊரெல்லாம் சுற்றி பலதரபட்ட மனிதர்களை சந்தித்து பழகி கெட்டு நொந்து கிழிந்து போய் நா...