சார்பதிவகத்தில் தடை மனு எப்படி வழங்க வேண்டும்!!
1)உங்களுக்கு உரிமை இருக்கிற அல்லது உரிமை பட்டம் இருக்கிற அல்லது உரிமையில் ஒரு கூறு இருக்கிற பங்கு இருக்கிற ஒரு சொத்தை வேறு யாரோ போலி ஆவணங்கள் அல்லது தவறான ஆவணங்கள் மூலமோ ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமோ நீதிமன்றம் வங்கி வருவாய்துறை போன்ற வேறு ஏதாவது அமைப்பகள் மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் மூலமோ புதிதாய் பத்திரங்கள் உருவாக்கி மேலும் சட்ட குழப்பங்கள் உருவாக்கும் நோக்கில் பத்திரப்பதிவு செய்ய தாக்கல் செய்வார்கள் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் அதனை தடுத்து நிறுத்த சார் பதிவாளருக்கு உங்கள் தரப்பு நியாயத்தை எழுதி தடை மனு என்று எழுதிக் கொடுக்கலாம். 2)தடை மனுவில் சொத்து விவரங்களை தெளிவாக எழுதி அதற்கான உங்கள் தரப்பு உரிமைக்கான ஆவணங்களை இணைத்து எதிர்தரப்பினர் பத்திரப்பதிவு தாக்கல் செய்வதை ஆட்சேபித்து மனு எழுதி அதனை நேரில் கொடுக்க வேண்டும்.சார்பதிவாளரை சந்தித்து நேரடியாக முறையிட வேண்டும். 3)பிறகு அன்றைக்கு மாலையே பதிவு தபாலில் அதே மனுவை சார்பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். நேற்று நேரடியாக வந்து பேசி மனு கொடுத்த நபர் இன்று பதிவு தபால் அனுப்பி இருக்கிறார் என்று சார்பதிவாளர் ...