ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களுக்கு வணக்கம். பொன்னான எதிர்காலத்தை அனைத்து தரப்பு மக்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் நூலின் அட்டை பக்க தலைப்பெழுத்தின் பொன்னெழுத்துக்களில் வெளிப்படுவதாய் உணர்கிறேன். தலைப்பும், அதன் எழுத்தின் வடிவமும், வண்ணமும், தாளின் தரமும் சிறப்பு! மேலும், இந்த நூலினை அப்படியே தங்களின் ஆசிரியருக்காக அர்ப்பணித்தது இன்னும் போற்றுதலுக்குரியது. ஒரு சொத்தை வாங்கவோ, விற்கவோ அல்லது அதன் ஆவணங்களை முறைப்படுத்திடவோ இக்காலகட்டத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு தெளிவுபடுத்தியதோடல்லாமல் அதனை களைந்திட சீர்மிகு தீர்வுகளையும், சிறந்த நெறிமுறைகளையும், மிக நேர்த்தியுடன் வழங்கியுள்ளீர்கள். இன்னும் ஒருபடி மேலே போய் மேற்படி பிரச்சனைகளின் தொடக்கத்தை பல கோணங்களில் கூராய்வு செய்து அதனை மக்கள் மற்றும் அரசு என இரு தரப்பிலும் சீரமைத்து கொள்ள வேண்டிய விஷயங்களை தொகுத்ததன் மூலம் தங்களின் அனுபவம் ஆழ்ந்தகன்றது என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளீர்கள். இந்நூலின் மூலம் நிலத்தின் / சொத்தின் பயனை அடையும் மக்களுக்கு, நம்மிடம் உள்ள சொத்தில் என்ன இருக்கி...