Posts

Showing posts from July, 2024

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 17-வது பாகம்) 16. யாரோ ஒருவர் பதிந்த பகட்டு மதிப்பை வைத்து MVG நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? 17. இணையதளத்தில் இருக்கும் MVG அலுவலகத்தில் உள்ள MVG பதிவேட்டிற்கும் வித்தியாசம் உள்ளதா? 18. ஒரு புலத்தில் மனை! நிலம் இரண்டும் வந்தால் அவை உட்பிரிவு செய்து தனித்தனியாக MVG செய்யப்பட்டுள்ளதா? 19. மனை வகைபாடுகளுக்கு நில மதிப்பும், நில வகைபாடுகளுக்கு மனை மதிப்பும் இருக்கிறதா? 20. குறைந்தபட்சமான விவசாய நிலத்திற்கு ஹெக்டர்ஸ்க்கு என்ன மதிப்பு நிர்ணயித்து இருக்கிறார்கள்? 21. அதிகபட்சமாக விவசாய நிலத்திற்கு ஹெக்டர்ஸ்க்கு என்ன மதிப்பு நிர்ணயித்திருக்கிறார்கள்? 22. குறைந்தபட்சமான மனைக்கு சதுர மீட்டர் எவ்வளவு அதிகமாக சதுர மீட்டர் எவ்வாறு நிர்ணயித்திருக்கிறார்கள்? 23. விவசாய நில மதிப்புகள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, ஊராட்சி சாலைகள் ஒட்டி உள்ள நிலங்களுக்கு முதல் அடுக்கு மற்றும் அதற்கு பின்னரான லேயர்ஸ் இவைகளுக்கு ஏற்றவாறு வகைப்பாடுகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 24. நகரை ஒட்டி வி

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 16-வது பாகம்) 5. சந்தை மதிப்பு வழிகாட்டி வரைவில் கவனிக்க வேண்டிய முரண்பாடுகள்: 26.04.2024 பதிவு துறை தலைவர் தமிழ்நாடு முழுவதும் மதிப்பீட்டுக் குழுவை உருவாக்கி கொடுத்து விட்டார் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் மதிப்பீட்டுத் துணை குழுவும் MVG வரவை தயாரித்துக் கொண்டிருக்கிறது அப்படி தயாரிக்கப்பட்ட வரைவு ஒவ்வொரு சாமானியனுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும் எனவே ஒவ்வொருவரும் MVG வரைவை பரிசோதிக்க வேண்டியது சமூக பொறுப்பாகும் அது மட்டுமில்லாமல் MVG யில் உள்ள 7 விதிகளில் 4-வது விதி பொது மக்களுக்கு MVG வரைவை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். ஒவ்வொரு சாமானியனும் அந்த வரைவை பார்த்து கருத்துரைகளை கொடுக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறது சார்பதிவகம் அலுவலகம் சென்று MVG வரவை பெற்று அடியில் சொல்கின்ற விவரங்களை எல்லாம் சரி பார்த்து வரைவை மேம்படுத்துவதற்கான காரியங்களை செய்ய வேண்டிகிறேன். 1. சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பிற்கும் வெளியில் நிலவும் சந்தை மதிப்பும் சம்பந்தம் இல்லாம

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 15-வது பாகம்) 4. முரண்பாடான MVG நல்லாட்சிக்கு ஏற்படும் இழப்பாகும் இப்பொழுது 2024 ஆம் ஆண்டு நடந்து கொண்டு இருக்கின்ற MVG நிர்ணயிக்கும் நடைமுறை போல் 2012 ஆம் ஆண்டும் நடந்தது அப்படி 2012 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட MVG சாமானிய மக்கள் பலரையும் துன்புறுத்தியது, பத்திர அலுவலகத்திற்கே வந்தால் மொத்த சொத்தையும் முத்திரை கட்டணம் என்று வாங்கி விடுவார்கள் என்று பயம் வந்து விட்டது அதனால் அப்பொழுது இருந்த மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் ஆட்சியின் மீது அதிருப்தியும் அவப்பெயரும் உருவாகியது அந்த அதிருப்தி அதற்கு அடுத்து வந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்தது ஜெயலலிதா அம்மையார் படு தோல்வியை சந்தித்தார்கள் அதன் பிறகு தான் அன்றைய அரசு 09.06.2017 தேதி MVG யை 33% சதவீதம் குறைத்தார்கள் என்பது நாடறிந்த வரலாறு அதே போல் இப்பொழுது நடக்கின்ற MVG வரைவை பொதுமக்களின் அதிருப்தி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நல்லாட்சி நடத்தும் அரசின் கடமை ஆகும் மேலும் மக்களிடம் இருந்து வரியை பெரும் முறையை சங்க காலத்தி

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 14-வது பாகம்) உதாரணமாக 31.07.2011ஆம் ஆண்டு 39812 பத்திரங்கள் நிலுவை, அதற்கு மதிப்பு நிர்ணயிக்கப்படாமல் 924 கோடி ரூபாய் முடங்கி இருந்தது, அதில் 125 கோடி “CASH FLOW” எடுக்க வேண்டும் என்று லட்சியம் வைத்து, தொலைகாட்சி, உள்ளூர் செய்தி தாள்கள், நேரில் சென்று வீட்டு வீடாக பிரச்சாரம் என்று பதிவுதுறை 39 கோடி வரை வசூல் செய்தார்கள், இப்படி சமாதன திட்டம் வைத்து நஷ்டத்தில் வசூல் செய்வதற்கு பதிலாக முரண்பாடு இல்லாத MVG யை மெனக்கெட்டு நிர்ணயித்தால் பதிவு துறையும் சிறப்பாக இருக்கும் அரசும் நலத்திட்டங்களை செயலாற்றுவதற்கு வசதியாக இருக்கும். அதற்கு அடுத்ததாக 47(A) யின் கீழ் வரும் பத்திரங்களை சட்ட விரோத ஆதாயம் பெற்று கொண்டு பத்திரம் பதிந்த சம்சாரிகளுக்கு சாதகமாக பத்திரங்களை விடுவிக்க இறுதியானை பிறப்பிக்கிறார்கள் என்று ஒரு வதந்தி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது அது உண்மையாக இருந்தால் பதிவு துறைக்கு வருவாய் கசிவு நிச்சயம் அதே போல் 47A(3) யின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய பத்திரங்கள் கால வரையறை சட்ட

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 13-வது பாகம்) இது இல்லாமல் 47(A) சம்மந்தமாக உயர் நீதி மன்றம் போய் அதுவும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்கள் தாக்கல் செய்து போரடி போராடி பத்திரங்களை திரும்ப பெற வேண்டி இருக்கிறது. ஒரு சம்சாரி ஒரு சொத்தை வாங்கினார், அதன் MVG முரண்பாடக இருக்கிறது அதனை 47(A)யின் முறையீடு செய்கிறார் அதுவும் ஆகவில்லை என்றால் 47A(3) யில் மேல் முறையீடு செய்கிறார் அதுவும் ஆகவில்லை என்றால், உயர் நீதி மன்றம் போகிறார் அதுவும் ஆகவில்லை என்றால் உச்ச நீதி மன்றம் போகிறார் ஆக இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் போராட்டம் போல போராடினால் தான் பத்திர ஆபிஸில் இருந்து பத்திரம் திரும்ப பெற முடியும் என்ற நிலை இருப்பது நல்ல நிர்வாகமா? மேலே சொன்ன நிகழ்வு எல்லாம், கொஞ்சம் விவரம் தெரிந்த சம்சாரிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள் சில சாது பிராணி சம்சாரிகள் எல்லாம் என்ன கட்டணம் விதிக்கிரீர்களோ அதனையே கட்டி விட்டு போகிறோம் என்று கட்டிவிட்டு பதிவு துறையை சபித்துக் கொண்டே செல்கிறார்கள் ஆக பத்திரம் பதிய வரும் சம்சாரிக்கு பேதி

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 12-வது பாகம்) என்ன சகோதரா? பதிவு சுழற்சி நிறுத்துகிறார்கள் என்று எழுதி இருக்கிறீரே! அதற்கு உதாரணம் சொல்ல முடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது இதோ இப்படி 2019 ஆம் ஆண்டில் இவ்வளவு பத்திரங்கள் 47(A)யின் கீழ் நிலுவையில் இருக்கிறது இந்த பத்திரங்கள் எல்லாம் MVG யில் உள்ள முரண்பாடுகளில் தான் நடந்து இருக்கிறது இதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை. இதுவரை 47(A) பதிவு சுழற்சி பாதிப்பு பற்றி பார்த்தோம் இந்த 47(A)யில் சார்பதிவாளர்கள் செய்கின்ற கோளாறுகள் அதிகம் 2012 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட MVG சட்ட அந்தஸ்து உடையது 2017 யில் 33% குறைத்தார்கள் அப்படி குறைக்கப்பட்ட பின்பு பின்பற்ற வேண்டிய MVG பின்பற்றி சம்சாரிகள் பத்திரம் தாக்கல் செய்தாலும், சார்பதிவாளர்கள் சட்ட ரீதியான MVGயை விட அதிக மதிப்பு நிர்ணயிக்க வேண்டும் என்று உரிய காரணங்கள் இல்லாமல் 47(A) ற்கு அவர்களே அனுப்புகிறார்கள் இப்படி சார்பதிவாளர் சட்ட அந்தஸ்து பெற்ற MVG யை மாற்ற காரணம் இல்லாமல் பரிந்துரைப்பதால் பத்திரம் திரும்ப பெறாமல் சம்சாரிகள் தவ

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 11-வது பாகம்) இப்படி பதிவு சுழற்சியை அதிகரிக்காமல் அதிக 47(A) பத்திரங்களை பதிந்து அந்த பத்திரங்களை சீக்கிரம் விசாரித்து சம்சாரிக்கு திருப்பி கொடுக்காமல் ஆண்டாண்டு காலமாக இழுத்தடித்து பதிவு நடவடிக்கை இயங்கியல் (REGISTRATION DYNAMICS) சிதைப்பதையே பதிவு துறை செய்து கொண்டு இருக்கிறது ஏன் பதிவு துறை மேல் குறை சொல்லி கொண்டே இருக்கிறீர்கள் என்று என்னை கேட்க கூடும் 47(A) அதிகமாக சம்சாரிகள் தானே தாக்கல் செய்கிறார்கள் அவர்களை தானே குற்றம் சொல்ல வேண்டும் இருக்கின்ற வேலை பளுவில் 47(A) கோப்புகளை நகர்த்துவது பதிவுத்துறை பணியாளர்களுக்கு அதிக சுமை அல்லவா ? என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் இதெற்கெல்லாம் உண்மையான காரணம் 2012 ஆம் ஆண்டு MVG யை நிர்ணயிக்கும்பொழுது முரண்பாடுகள் இல்லாமல் குழப்பங்கள் இல்லாமல் அள்ளி தெளித்த அவசர கோலம் இல்லாமல் நின்று நிதானமாய் பொறுமையுடன் ஆழமான களப்பணி மெனெக்கெட்டு செய்தால் இப்படி அதிகமான 47(A) பத்திரங்களை சம்சாரிகள் தாக்கல் செய்ய போவது இல்லை! எனவே முரண்பாடுகள் முற்றிலும் இல்லாமல

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 10-வது பாகம்) பல கிராமங்கள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து இடங்களிலும் சர்வே எண்களுக்கு தெரு மதிப்பு காண்க என்று MVG யில் பதிவு செய்து இருப்பார்கள் ஆனால் அந்த சர்வே எண் எந்த தெருவிலும் இல்லாத நிலமாக இருக்கும் இந்த நிலையில் ஒரு சம்சாரி வழிகாட்டி மதிப்பை குறைவாக மதிப்பிட்டு பதிவுக்கு 47(A) யின் கீழ் தாக்கல் செய்வார்கள் இதனை பதிவுத்துறை DIG நேரில் வந்து தலத்தை ஆய்வு செய்து இதற்கு MVG நிர்ணயம் செய்ய வேண்டும் இந்த பத்திரத்தை திரும்ப பெறுவது “கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்தது போல” பாடாய் பட வேண்டும் இப்படி நிலத்தை மனையாக மதிப்பிடுவது மனைப்பிரிவாக மாற்றப்படாத நிலங்களுக்கு மனை மதிப்பு நிர்ணயிப்பத்து மனைபிரிவை அங்கீகாரம் பெற்றவைக்கும், அங்கீகாரம் பெறாதவைக்கும் வித்தியாசம் இல்லாமல் MVG நிர்ணயிப்பது விவசாய நிலங்களில் உள்ள பத்து வகைப்பாடுகளையும் மாற்றி மாற்றி நிர்ணயிப்பது மனை மதிப்பில் உள்ள 5 வகைப்பாடுகளை மாற்றி மாற்றி நிர்ணயிப்பது என்று எல்லா குழப்பங்களும் பழைய MVG யில் செய்

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 9-வது பாகம்) 3. பதிவுத்துறையின் MVG யால் பதிவுத்துறைக்கு ஏற்படும் இழப்புகள் பதிவுத்துறை நிர்ணயிக்கும் MVG யால் பதிவுத்துறைக்கே இழப்பு என்பதை கேட்கின்ற சாமானியனுக்கு விந்தையாகத் தான் இருக்கும். பாம்பு தன் வாலையே இன்னொரு பாம்பு என்று நினைத்து விழுங்கும் என்று கதைகளில் படித்திருக்கிறேன் அதே போல பதிவுத்துறை தனது லாபத்தை தானே உண்ணுகின்ற கதை தான் இனி நான் சொல்லப்போவது பதிவு துறையில் 47(A) என்று நடைமுறை ஒன்று இருக்கிறது அப்படி என்றால் ஒரு சம்சாரி தனது சொத்தை பதிய போகும் பொழுது சந்தை மதிப்பு வழிகாட்டியை விட அடிமனையின் மதிப்பு குறைவாக குறிப்பிட்டு ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்படுவது ஆகும். இப்படி ஒரு சம்சாரி தாக்கல் செய்தால் ஆவணப்பதிவு நாளன்றே மேற்படி 47A(1) இல் நடவடிக்கை உட்படுத்தப்பட்டது என்று குறிப்பு சேர்த்து பத்திரங்களை ஒளி வருடல் செய்ய வேண்டும் அதன் பிறகு 7 நாட்களுக்குள் 47A(1) நடவடிக்கைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்திரை, துணை ஆட்சியர் முத்திரை என்ற சட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டு அ

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 8-வது பாகம்) பதிவுத்துறை அலுவலகம் (சுற்றறிக்கை எண் : 37375 / எல் 1 / 2018 நாள் : 10.10.2016) இது போல் தமிழ் நாடு முழுவதும் பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது. மேலும் அரசாணை (நிலை) எண் 136 வருவாய் நி.மு 5 (2) துறை நாள் 25.04.2017 என்ற மேலும் வருவாய் துறை அரசாணையின் படி அரசு, அரசின் பிற துறைகளான வீட்டு வசதி வாரியம், குடி நீர் வாரியம், குடிசை மாற்று வாரியம், பொது பணி துறை போன்ற துறைகளுக்கு வணிகப்பயன்பாட்டிற்காக புறம்போக்கு நிலங்களை வருவாய் நிலை ஆணை எண் 24 ன் படி நில உரிமை மாற்றம் (ALIENATION) செய்யும் பொழுது அரசாணை நிலை எண் 136 வருவாய் துறை நி.மு 5 (2) நாள் 25.04.2017 அதன் படி சந்தை மதிப்பு வழிகாட்டியின் படி கிரய தொகை வசூலிக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறது அதன் படி அரசின்புறம் போக்கு நிலங்களை அரசின் பிற துறைகள் வாங்கும் பட்சத்தில் இந்த MVG யை வைத்து தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டிருக்கிறது. எனவே MVG முரண்பாடாக இருந்தால் பிற அரசு நிறுவனங்களும் பாதிக்கப்படும் செயற்கையாக உயர்த்தப்பட்ட அதி

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 7-வது பாகம்) 2. முரண்பாடான சந்தை மதிப்பு வழிகாட்டியால் (MVG) அரசின் பிற துறைகளுக்கு ஏற்படும் இழப்புகள்! பதிவுத்துறையும்! மதிப்பீட்டுக் குழுவும் MVG யை நேர்மையாகவும், மெனக்கெட்டும் களப்பணி செய்து உருவாக்காமல் சும்மா இதனை 15%, 20% சதவீதம் கூட்டி வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தால் தமிழ்நாடு அரசிற்கு பெரும் நஷ்டம் ஏற்படும்! அது எப்படி நஷ்டம் ஏற்படும்? பதிவுத்துறைக்கு அதன் மூலம் வரி வருமானம் தானே அதிகமாக வரும் என்று நீங்கள் நினைக்கலாம், அது உண்மைதான் பதிவுத்துறைக்கு அதிக வருமானம் வரும்! அதே நேரத்தில் நில நிர்வாக துறைக்கு பெரும் நஷ்டம் வரும், அது எப்படி என்றால் நில நிர்வாக துறை தான் வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நெடுஞ்சாலை, சிப்காட், SEZ, சிட்கோ, ஏர்போர்ட், ரயில்வே உள்ளிட்ட பல துறைகளின் அபிவிருத்தி வளர்ச்சிக்கு தேவையான நிலங்களை நில ஆர்ஜிதம் செய்து கொடுக்கிறது. அப்படி நில ஆர்ஜிதம் செய்யும்பொழுது அதற்கு நிலத்தை இழந்த பொதுமக்களுக்கு நஷ்ட ஈடாக தர வேண்டிய தொகை இந்த MVG வைத்த

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 6-வது பாகம்) 20. இந்த வரைவு வெளி வருவதற்கு முன்பு உங்கள் பகுதிகளில் நில ஆர்ஜிதம் முன்மொழிவு நோட்டீஸ் கொடுத்திருந்தால் அந்த நிலத்திற்கெல்லாம் உண்மையான சந்தை மதிப்பு போடாமல் அதற்கு குறைவாகவே MVG நிர்ணயிக்க வாய்ப்பிருக்கிறது 21. பஞ்சம நிலங்களை மீட்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களுக்கு சொல்வது என்னவென்றால் பஞ்சம நிலங்களுக்கு “0” ZERO மதிப்பு போட வேண்டும் அங்கு MVG பகட்டு மதிப்பாக போடுவதால் அல்லது ஏதோ ஒரு மதிப்பு போடுவதால் அது பஞ்சம நிலம் இல்லை என்று சாதாரண பொது மக்கள் நினைத்து விட்டு அதனை வாங்க விற்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே அதனை தடுப்பதற்கு பஞ்சம நிலம் ஆதாரம் உங்களிடம் இருந்தால் அதனை வைத்து இந்த MVG வரைவை ஆட்சயபனைகள் செய்ய வேண்டும் 22. இந்து அற நிலையத்துறை மற்றும் வக்ப் போர்டு நிலங்களில் வீடுகளில் வசித்து வருகின்ற மக்கள் வாடகையில் வாழ்ந்து வருகிறார்கள் . இந்த MVG உயர்ந்தால் அதன் அடிப்படையில் வாடகையும் உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு உருவாக்கிய MVG யை வைத்து இந்து

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 5-வது பாகம்) 3. தொழில் முனைவர்கள் இறால் பண்ணை அமைக்க அரசு நிலங்களை குத்தகைக்கு எடுத்தாலோ உப்பு தயாரிக்கும் பொருட்டு உப்பளங்களை குத்தகைக்கு எடுத்தாலோ அரசு நிலத்தின் மேல் குழாய் பதித்து நீர் கொண்டு செல்வதற்கும் குத்தகை எடுத்தாலோ அந்த குத்தகை நிர்ணயம் செய்வதை இந்த MVG யை பொறுத்து அமையும். 4. MVG கள ஆய்வு செய்து சிரத்தை எடுத்து மெனக்கெட்டு அறிவியல் பூர்வமாக நிர்ணயித்தால் யாரும் பாதிக்கப்பட போவதில்லை ஆனால் “சும்மா அடிச்சி விடலாம்” என்று தமிழ்நாடு முழுவதும் 15% 20% என்று உயர்த்தி நிர்ணயித்தால் உண்மையிலேயே 15% 20% உயர்ந்து விட போவதில்லை நிலத்தின் விலை என்னவோ அது தான் வழிகாட்டி மதிப்பாக இருக்க வேண்டும் ஆனால் பதிவுத்துறை வழிகாட்டி மதிப்பை உயர்த்தி நிலத்தின் மேல் உயர்ந்து விட்டதை போல ஒரு மாயை தோற்றத்தை ஏற்படுத்தினால் அப்பாவி பொது மக்கள் பலர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் உண்மைமயாகத்தான் நிலத்தின் விலை உயர்ந்து விட்டது அதனால் தான் வழிகாட்டி மதிப்பும் உயர்ந்து விட்டது என்று நம்ப ஆரம்பித்து நீர

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 4-வது பாகம்) 13. அரசு, பொது மக்களின் நிலங்களை ஆஜிர்தம் செய்யும் பொழுது அதற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அந்த இழப்பீடு MVG யை அளவு கோலாக வைத்து தான் நிர்ணயிப்பார்கள். 14. இந்த வரைவு வெளி வருவதற்கு முன்பு உங்கள் பகுதிகளில் நில ஆர்ஜிதம் முன்மொழிவு நோட்டீஸ் கொடுத்திருந்தால் அந்த நிலத்திற்கெல்லாம் உண்மையான சந்தை மதிப்பு போடாமல் அதற்கு குறைவாகவே MVG நிர்ணயிக்க வாய்ப்பிருக்கிறது. 15. பஞ்சம நிலங்களை மீட்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களுக்கு சொல்வது என்னவென்றால் பஞ்சம நிலங்களுக்கு “0” ZERO மதிப்பு போட வேண்டும் அங்கு MVG பகட்டு மதிப்பாக போடுவதால் அல்லது ஏதோ ஒரு மதிப்பு போடுவதால் அது பஞ்சம நிலம் இல்லை என்று சாதாரண பொது மக்கள் நினைத்து விட்டு அதனை வாங்க விற்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே அதனை தடுப்பதற்கு பஞ்சம நிலம் ஆதாரம் உங்களிடம் இருந்தால் அதனை வைத்து இந்த MVG வரைவை ஆட்சயபனைகள் செய்ய வேண்டும். 16. இந்து அற நிலையத்துறை மற்றும் வக்ப் போர்டு நிலங்களில் வீடுகளில் வசித்து வருகின்ற மக்கள் வாடகையில் வா

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 3-வது பாகம்) 8. நகர்ப்புற நில உச்சவரம்பு வரன்முறைப்படுத்துதல் மூலமாக அறியா கிரயம் பெற்றவர்கள் அரசிடம் பட்டா வாங்க வேண்டும் என்றாலும் நகர்புற நில வரி ULT கட்ட வேண்டும் என்றாலும் அதற்கு பணம் கணக்கிடும் பொழுது இந்த MVG யை வைத்து தான் கணக்கிட வேண்டும். 9. ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசிக்கின்ற மக்களுக்கு வருவாய் நிலை ஆணை 21-ன் படி வீட்டு மனை பட்டா கொடுக்கிறார்கள் என்றால் நிலத்தின் விலைக்கு பணம் கட்ட சொன்னால் அதற்கும் MVG அடிப்படையில் தான் கணக்கிட வேண்டிய வரும். 10. அரசு நிலங்களில் விவசாயம் செய்து கொண்டு இருந்தால் அதற்கு வருவாய் நிலை ஆணைய எண் 15 இன் படி விவசாய நில பட்டா கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு பணம் கட்ட வேண்டும் என்றால் அதற்கும் MVG அடிப்படையில் தான் கட்ட வேண்டிய தொகையை கணக்கிட வேண்டி வரும். 11. நில சீர்திருத்த துறையில் கீழ் DISPOSAL OF SURPLUS LAND விதிகளின் படி நிலத்தை விவசாயிகளுக்கு ஒப்படைக்கும் பொழுதும் அரசிற்கு கட்ட வேண்டிய கிரய தொகையை இனி இந்த MVG யை அள

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 2-வது பாகம்) 3. மேற்படி MVG மதிப்பீட்டை வைத்து தான் சாமானியன் சாதாரண பொது ஜனம் தனது குடும்பத்துக்குள்ளையோ அல்லது குடும்பம் அல்லாத நபரிடம் பாராதீனம் செய்யும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய முத்திரை கட்டணம் பதிவு கட்டணம் போன்றவற்றை செலுத்த வேண்டும். அதனால் MVG அதிகமாக நிர்ணயித்தால் விலை ஏறாத சொத்துக்களுக்கும் அதிக அளவு முத்திரை கட்டணங்களை கட்டி பொது மக்கள் தன் சேமிப்பை இழப்பார்கள். 4. நில உடமையாளர்கள் வங்கிக் கடன், நிலத்தின் மீதான தொழில் கடன், வீடு கட்டும் கடன், பிற அபிவிருத்தி கடன் வாங்க சொத்தை மதிப்பீடு செய்யும்பொழுது இந்த MVG யை வைத்து தான் கணக்கிடுகிறார்கள். அதனால் MVG யில் முறைபாடுகளும் பகட்டு மதிப்பும் இருந்தால் வங்கி கடன் வாங்குகின்ற பொது மக்கள் அதிகம் பாதிப்பு அடைவார்கள். 5. வருமான வரி, மூலதன ஆதாய வரி, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற வரிகளை விதிப்பதற்காக இந்த MVG ஒரு அளவீடாக இருக்கிறது. அதனால் ஏற்கனவே 2012இல் பதிவுத்துறை நிறைய பகட்டு மதிப்பை பதிவுத்துறை நிர்ணயித்து இருக்கிறார்கள்

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 1-வது பாகம்) மாண்புமிகு முதலமைச்சர் ஐயா மு.க. ஸ்டாலின் அவர்களின் பதிவுத்துறையை நடத்திவரும் மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி அவர்கள் முயற்சியால் வழிகாட்டி மதிப்பு சீராய்வு தற்பொழுது மாநிலம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலின் “வரைவு” DRAFT யை 15 நாட்களுக்கு ஒவ்வொரு சார்பதிவு அலுவலகத்திலும் பொது மக்களின் பார்வைக்கு வைத்திருப்பார்கள். அதனை பொதுமக்கள் வாங்கி பார்த்து அதில் தங்கள் சொத்துக்களின் சந்தை மதிப்பு வழிகாட்டியை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும், அதில் முரண்பாடுகள் இருந்தால் அதனை மனுவாக எழுதி மாவட்ட மதிப்பீட்டு குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும், இந்த கடமையை அனைவரும் செய்ய வேண்டும் என்று சாதாரண பொது ஜனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நம்மைப் போன்ற தன்னார்வலர்களின் கடமை அதனால் இந்த கட்டுரையை எழுதுகிறேன். 1. ஏன் சந்தை மதிப்பு வழிகாட்டி (MVG) சாமானியனுக்கு முக்கியம். 1. MVG என்கிற மதிப்பு சட்ட அந்தஸ்து உடையது. இது தமிழகத்தில்

ஏற்காட்டில் நில அளவை

Image
ஏற்காட்டில் நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினர் 100 ஏக்கர் நில அளவை செய்து கொண்டு இருக்கின்ற தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Yercaud #land #100 #acres #100 #land_survey #survey #landsurveying #landsurveyor #surveying #surveyor  #survey #geomatics #realsurveyors #landsurvey  #surveyors #gps #nilamungalethirgalamteam #team