முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 24-வது பாகம்) இந்த சந்தை மதிப்பு வழிகாட்டிக்கு தான் முறையான சட்ட அந்தஸ்து இருக்கிறது இனி மதிப்பின் அடிப்படையில் பதிவுத்துறையில் பதிவு கட்டணம், முத்திரை கட்டணம், நீதி மன்றத்தில் வழக்கு கட்டணம், நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது, மற்றும் பல்வேறு நில நிர்வாக நடைமுறைக்கு நிலத்தின் மதிப்பு என்றால் இதனையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த மதிப்பு தான் இனி சட்ட படி செல்லும் என்று வந்து விட்டது. நீதி மன்றங்கள் மூலமும், இந்த மதிப்பை நடைமுறைப்படுத்த சொல்ல முடியும் என்ற அளவுக்கு இந்த மதிப்பிற்கு சட்ட அந்தஸ்து உள்ளது. மேலும் இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியை நிர்ணயிக்கும் பொழுது அப்படி 2005 ஆம் ஆண்டு மாநில கமிட்டி, மாவட்ட கமிட்டி எல்லாம் போட்டு நிர்ணயித்தார்களோ அதே போல் இந்த 47AA சட்டபடி உள்ள MVGயை மாநில கமிட்டி மற்றும் மாவட்ட கமிட்டி போட்டு நிர்ணயிக்க வேண்டும் என்று சட்டமும், விதிகளையும் பதிவுத்துறை உருவாக்கியது. அந்த...