அம்மையநாயக்கனூர் கம்பளத்து ஜமீன்தாரின் கடன் வழக்கு தீர்ப்பு


 அம்மையநாயக்கனூர் கம்பளத்து ஜமீன்தாரின் கடன் வழக்கு தீர்ப்பு 1)விஸ்வநாத நாயக்கர் (கி.பி. 1529-1564) விஜயநகர பேரரசின் கீழ் மதுரையின் முதல் நாயக்கராக நியமிக்கப்பட்டார். அவர் தனது ஆட்சி பகுதிகளை 72 பாளையங்களாகப் பிரித்து, பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார் மதுரையில் அவர் ஸ்தாபித்த கோட்டையில் 72 கொத்தளம் இருந்தன அதில் 50வது கொத்தளத்தை அம்மையநாயக்கனூர் வீரர்கள் காவல் காத்ததாக சொல்வார்கள் 2)அம்மைய நாயக்கனுர் பாளையம் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் வலிமையான பாளையமாக இருந்தது. விஜயநகர அரசில் தேவராயருக்கு பெரும் தளபதியாக இருந்த விஸ்வநாத நாயக்கர் அவருக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்தவர் பெஞ்சாமாநாயக்கன் விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கு முடி சூட்டி கொண்ட பொழுது பெஞ்சாம்மா நாயக்கன் அவர்களை திண்டுக்கல் நிலக்கோட்டை பக்கத்தில் இருக்கிற அம்மையானாயக்கனுர் சுற்றுவட்டாரத்தை பாளையமாக அறிவித்து பெஞ்சாம்மா நாயக்கர் முதல் பாளையக்கறாரார் ஆனார் 3)அம்மையநாயக்கனூரில் ஒரு செப்பு பட்டயம் கிடைத்து இருக்கிறது. அதில் திருமலை நாயக்கர் அரசர் மதுரை to திருச்சி மிக அவசரமாக 3 பயண நாட்களுக்குள் பல்லக்கில் போக வேண்டும். அந்த சவாலுக்கு அம்மையநாயக்கனுர் பல்லக்கு தூக்குபவர்கள் ஒத்து கொண்டு அதே போல சாதித்தும் காட்டினார்களாம். அதற்க்கு ஈடாக நிலங்களை வழங்க திருமலை நாயக்கர் முன் வந்தார். ஆனால் பல்லக்கு தூக்குபவர்கள் நிலங்கள் வேண்டாம் அது எங்களால் நிர்வாகம் செய்ய முடியாது. அதற்கு பதிலாக நீர்நிலைகளில் மீன்பிடி உரிமகளை கேட்க!திருமலை நாயக்கர் கொடுத்ததாகவும் அந்த செப்பேடு சொல்கிறது 4) இந்த பாளையம் கம்பளத்து நாயக்கர்களின் பாளையம் ஆகும். பாளையம் என்பது ஆர்மி, ஜூடிசியல், ரெவின்யூ என அனைத்தையும் நிர்வாகம் செய்வார்கள். 1802 ம் ஆண்டுக்குப் பிறகு வெள்ளையர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் ரெவென்யு மட்டும் பார்க்கின்ற ஜமீன்தாரராக தரம் குறைக்கப்பட்டார்கள். ஜமீன் என்றால் ரெவென்யு மட்டும் பார்ப்பார்கள் என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும் இப்படி ஜமீன்காலத்தில் வரவு செலவு சம்பந்தமான ஒரு வழக்கு பிரிவி கவுன்சிலில் நடந்தது அந்த வழக்கினை தற்பொழுது கீழே எழுதுகிறேன் 5) 1846 ம் ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அம்மையநாயக்கனூர் ஜமீனின் ஜமீன்தார் கமல நாயக்கர் என்பவர் இருந்து இருக்கின்றார். அவருக்கு கடுமையான கடன் நெருக்கடி, கடனால் மன அழுத்தத்தில் சிக்கியிருந்தார். அவர்மீது தீர்ப்பளிக்கப்பட்ட நீதிமன்றக் கடன்கள், execution pending debts, மற்றும் வாரண்டுகள் நடைமுறையில் இருந்தது. இதனால் உடனடியாக ஒரு மிகப்பெரிய தொகையைச் கடன்காரர்களுக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தத் தொகை அன்றைய காலகட்டத்தில் ரூபாய் 1,00,035 – 2 அ ணா – 7 பை ( ஒரு லட்சத்து முப்பத்து ஐந்து ரூபாய் இரண்டு அனா ஏழு பைசா )ஆகும். 6) இந்தத் தொகையை அவரே ஒரு ஒப்பந்தத்தில் சொல்லி இருக்கின்றார். இந்தக் கடன் பொறுமையாக அடைத்து கொள்ளக்கூடிய கடன் அல்ல அன்றைய தினமே தீர்க்க வேண்டிய நெருக்கடியான கடன். இந்த நெருக்கடியை சமாளிக்க அவர் ஒரு வெளிநாட்டு வணிகரான ஜி. எப். பிஷர் (G. F. Fischer) என்பவரை நாடினார். ஆனால் பிஷர் அந்த நேரத்தில் மதுரையில் இல்லை. வெளிநாட்டில் இருந்தார். அவருக்குப் பதிலாக அவரது முகவர் நரசிம்ம செட்டியார் செயல்பட்டார். 7) நரசிம்ம செட்டியார் தான் கடன் கொடுப்பதற்கான வேலைகளை செய்து வந்தார் . அவர்தான் சிஸ்டருக்கு பதிலாக அந்த ஒப்பந்தத்தில் நரசிம்ம செட்டியார், “சேலம் வாசி, பட்டு நூல் வியாபாரி, Mr. Fischer-ன் முகவர், தற்போது ராமநாதபுரம் சர்க்யூட்டில் உள்ளவர்” என்று குறிப்பிட்டு இருந்தார், செட்டியார் பிஷரிடமிருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி கொஞ்சம் மார்ஜின் வைத்து ஜமீந்தாருக்கு கடன் கொடுப்பவர் கிடையாது. அவர் பிஷரின் பணத்தை கடன் வாங்கி ஜமீந்தாருக்கு கொடுக்கவல்ல முகவர்(ஏஜென்ட்) மட்டுமே; 8)1846 ஆம் ஆண்டு அக்டோபர் 25 தேதி ஜமீன்தார் அவர்கள் ஒரு குத்தகை பத்திரத்தை செட்டியாருடன் உருவாக்கிக் கொள்கிறார் அதில் மேற்ச்சொன்ன ஒரு லட்ச ரூபாய் கடனை அடைக்க அதற்கு தேவையான பணத்தை ஜமீன்தாருக்கு கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக ஒரு முழு கிராமத்தை அடமானம் வைப்பதாக அதில் எழுதப்பட்டிருந்தது. அந்த அடமான பத்திரத்தில் ஜமீன்தாரின் கடன் பட்டியல் முழுவதும் காட்டப்பட்டிருந்தது இதனை சமாளிப்பதற்காகத்தான் இந்த அடமானம் வாங்கப்படுகிறது இதனை நவம்பர் 1ஆம் தேதி 1846 ம் ஆண்டு கொடுப்பதற்கு ஜமீன்தாருக்கு கெடு இருக்கிறது எனவே அந்த தேதிக்குள் பணத்தை கொடுக்க வேண்டும் என்று செட்டியாரிடம் கண்டிஷன் போடுகிறார் 9) செட்டியாரும் ஃபிஷர் அதற்குள் வெளிநாட்டில் இருந்து மதுரைக்கு வந்து விடுவார் அந்த தேதியில் கண்டிப்பாக பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று செட்டியார் உறுதி அளித்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் இந்த குத்தகை பத்திரம் எழுதப்படுகிறது. அதற்கு முதல் கட்டமாக செட்டியார் ரூபாய் ஆயிரத்தினை(ரூ 1000) ஜமீன்தாரிடம் கொடுக்கிறார் ஜமீன்தாரும் பெற்றுக் கொள்கிறார். மேற்படி ஆயிரமும் ஜமீன்தாரில் கடன் பட்டியலில் உள்ள ஒரு கடனுக்காக தான் வாங்குகிறார். அந்த ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ள வேண்டிய கடன் காரரும் அந்த லீஸ் அக்ரீமெண்டின் பொழுது இருந்திருக்கிறார் 10) மேற்படி லீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு பணத்தை பெற்றுக் கொண்டு மீதி பணத்தை நவம்பர் 1ஆம் தேதி மதுரையில் பெற்றுக் கொள்வதாக ஜமீன்தார் சொல்லி இருக்கிறார் ஆனால் மேற்சொன்ன பிஷர் அவர்கள் மதுரைக்கு நவம்பர் 1ம் தேதி வரவில்லை, நவம்பர் 13 ம் தேதி தான் மதுரைக்கு வந்தார் அதுவரை ஜமீந்தார் அவர்கள் பொறுக்கவில்லை. அவர் பிளான் பி ஒன்று வைத்திருந்தார் பிஷர் வரவில்லை என்றால் இன்னொரு பைனான்சியர் Mr. Fondclair என்பவரை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அதன்படி Mr. Fondclair அவர்களுக்கு அந்த கிராமத்தை லீசுக்கு கொடுத்து தன்னுடைய சொந்த கடன்களை சரி செய்து கொண்டார். 11) பிஷர் அவர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அவர் எனக்கு அக்ரீமெண்ட் படி வரவேண்டிய கிராமத்தை வேறு ஒருவருக்கு கொடுத்தது செல்லாது என்றும் நவம்பர் 1ஆம் தேதிக்குள் கொடுக்கவில்லை என்றால் என்ற கண்டிஷன் எதுவும் அக்ரிமெண்டில் கிடையாது என்று நீதிமன்ற படிக்கட்டுகளுக்கு செல்கிறார். அந்த வழக்கு மதுரை முடிந்து சென்னை முடிந்து லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்கு செல்கிறது 12) Privy Council தீர்ப்பில்: ஜமீந்தார் தன் கடன்களை உடனே அடைக்க வேண்டிய அவசர நிலையில் இருப்பதால், சட்டம் இயல்பாகவே “reasonable time” – அதாவது சில நாட்களுக்குள் வர வேண்டும் என்று பொருள் கொடுக்கும். மேலும், நரசிம்ம செட்டியாருக்கு முன்கூட்டியே பிஷரின் முழு அதிகாரம் இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை; அந்த ஆவணமே அவர் பிஷர் வந்து அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று காட்டுகிறது. எனவே, ஜமீந்தார் பிஷர் எத்தனை எத்தனை நாள் கழித்து வந்தாலும் காத்திருக்க வேண்டிய அவசியம் அல்ல ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது ஒரு நியாயமான குறுகிய காலம் வரை மட்டுமே காத்திருக்க வேண்டும். ஜமீந்தார் தரப்பில், ஒரு வாய்மொழி ஒப்பந்தம் மூலம் “எட்டு நாட்கள்” அல்லது “நவம்பர் 1” வரை மட்டுமே காத்திருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டதாக சாட்சிகள் சொன்னார்கள். 13)பிஷர் தரப்பில், “நியாயமான காலத்திற்குள் வந்தேன்” என்ற வாதம் இருந்தது. Privy Council அந்த வாய்மொழிச் சாட்சிகளையும் நம்பத்தகுந்ததாகக் கருதியது. ஆனால், அவர்கள் கூறியது: இந்த வழக்கை தீர்க்க அதில் நின்று தீர்மானிக்க வேண்டிய அவசியமே இல்லை; ஏனெனில் ஆவணங்களே போதுமானது.ஏன் என்றால், இரு தரப்பும் பிஷர் நவம்பர் 1க்கு முன் மதுரைக்கு வருவார் என்று தான் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? நவம்பர் 9 அல்லது 10 அன்று ஜமீந்தார் அந்த ஜமீனை மற்றொருவரான Fondclair என்பவருக்கு லீஸ் கொடுத்தார். 14)பிஷர் மதுரைக்கு வந்தது நவம்பர் 13. இது ஒப்பந்தத்திலிருந்து 19 நாட்கள் கழித்து. Privy Council சொன்னது: இந்த தாமதம் நியாயமான காலம் அல்ல. இது அந்தக் கடன் ஏற்பாட்டின் முழு நோக்கத்தையே தோல்வியடையச் செய்யும் அளவுக்கு அதிகமான. தூரம், பயண சிரமம், அல்லது சர்க்யூட் வேலை போன்ற எந்த காரணமும் 19 நாள் தாமதத்தை ஜமீன்தார் முன்பு நியாயப்படுத்த முடியாது இதனால், ஜமீந்தார் Fondclair-க்கு லீஸ் கொடுத்தது ஒப்பந்த மீறல் அல்ல. என்று தீர்ப்பளித்தது ( Fischer vs Kamala Naicker (Privy Council, 1860) ) இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை தொடர்புக்கு +91 86100 63410

Comments