கார்வெட்டி நகர் ஜமீன் "அமரம் இனாம்" திரும்ப பெற்ற பிரைவி கவுன்சில் வழக்கு!
கார்வெட்டி நகர் ஜமீன் "அமரம் இனாம்" திரும்ப பெற்ற பிரைவி கவுன்சில் வழக்கு!
1) இந்தக் கட்டுரையில் நான் எழுதுகின்ற வழக்கு சொத்து அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் கார் வெட்டி நகர் ஜமீன் பகுதியில் புத்தூர் அருகில் இருக்கின்ற கிராமத்தில் இருந்தது. காவேட்டி நகர் ஜமீன் விஜயநகர பேரரசு காலத்தில் இருந்து பாளையமாக இருந்து 1802 முதல் ஜமீன் எஸ்டேட் ஆக குறைக்க பட்ட பகுதி ஆகும். இன்று தமிழ்நாட்டில் இருக்கிற திருவாலங்காடு, திருத்தணி, ஆர் கே பேட்டை ஆகிய ஊர்கள் என தென்பகுதி எல்லையாகவும் வடக்கே காலஹஷ்தி தாண்டியும் கிழக்கே வங்க கடலும் மேற்கே சித்தூர், திருப்பதி இடையில் இருக்கின்ற பகுதிகள் என எல்லைகள் ஆக கொண்ட ஜமீன் ஆகும்.
2) தமிழ்நாட்டில் திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் இருக்கின்ற மறவர் பாளையங்களுக்கு மூதாதையர்கள் ராமநாதபுரம் சேதுபதி எப்படி அந்த குடும்பத்தின் ஒரு முன்னோர்களாக இருக்கிறார்களோ அதே போல் கார் வெட்டி நகர் ஜமீந்தாரியை ஆட்சி செய்த பொம்மராஜு (Bommaraju) குடும்பம், கி.பி. 8 நூற்றாண்டில் கோதாவரி டெல்டாவில் உள்ள பித்தாபுரம் சமஸ்தானாத்தை முன்னோர்களாக கொண்ட குடும்பம் ஆகும்.பித்தபுரம் சமஸ்தாதானம் சாளுகிய வம்சா வழியினர் என்று வரலாற்று நிறுவுகிறார்கள். சோழர்களும் 12 ம் நூற்றாறாண்டுகளில் இந்த பகுதியை ஆளு கை செய்து இருக்கிறார்கள் இவர்களை தெலுங்கு சோழர்கள் என்றும் ஆய்வாளர்கள் நிறுவுகிறார்கள். இந்த ஜமீன் குடும்பம் இன்றுவரை இருக்கிறார்கள். சாலுவ பட்டம் போட்டு கொள்கிறார்கள் இந்த வம்சத்தில் 1850 ம் ஆண்டுகளில் இருந்த.ராஜா ராஜே வெங்கடப்பெருமாள் ராவ். அவர்கள் தான் இந்த வழக்கின் வாதி.
3) "அமரம்" என்று ஒரு மானியம் இருந்தது, அது ஒரு வகையான ராணுவ மானியம், அரசரை காப்பதற்கு தன் உயிரை கொடுக்கின்ற அமரபடை ஆகும். அவர்களுக்கு அமரம் என்ற மானியம் (இனாம்) கொடுப்பார்கள். அந்த இனாம் பெரும்பாலும் முழு கிராமங்களாக இருக்கும். அப்படி சில கிராமங்களை பெற்ற அமரத்தார்கள் தான் இந்த வழக்கின் பிரதி வாதிகள்.
4) "அமரம்" இனாம் நான் முந்தையை பதிவுகளில் பதிவு செய்து இருக்கின்ற தர்மிளா இனாம் போல் ஜமீந்தாரி கொடுத்த அமரம் இனாமை திரும்ப பெற்று கொள்ளலாம். அதன் அடிப்படையில் .ராஜா ராஜே வெங்கடப்பெருமாள் ராவ். அவர்கள் அமரம் இனாமை அனுபவித்தவர்களை அழைத்து பல தலைமுறைகளாக நீங்கள் இனாம் அனுபவிக்கிறீர்கள். ஆனால் எனக்கு விவரம் தெரிந்து அமர படை சேவை செய்யவில்லை. அதனால் இனாமை திரும்ப பெற்றுக்கொண்டு (Resumption) வரி உள்ள நிலமாக மாற்றுகிறேன் என்று சொன்னார்.
5) அதற்கு அமரதாரர்கள் ஒத்துக்கொள்ள வில்லை. உங்கள் முன்னோர்கள் எங்கள் முன்னோர்களுக்கு இந்த அமரம் இனாமை நிரந்தரம் ஆக்கி செப்பு பட்டயம் கொடுத்து விட்டார்கள். அதனால் இதனை நீங்கள் Resumption செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார்கள். அதற்க்கு ஜமீந்தார் ஆவணத்தை காட்டும்படி கேட்டும் அதனை காட்டாமல் இருந்தார்கள்.
6) அதன் பிறகு ஜமீந்தார் நீங்கள் அமர்தார்கள்.நீங்கள் சேவைக்காக நிலம் வைத்திருக்கிறீர்கள். இப்போது அந்த சேவை தேவையில்லை ஆகவே நான் இந்த அமரம் மானியத்தை மீட்கிறேன் (Resumption).
இனிமேல் இந்த நிலத்திற்கு முழு வரி (assessment) கட்ட வேண்டும்.”என்று சொல்லியும் இதுவரை கட்டாத வரி பாக்கி
₹13,597 (ரூபாய் பதிமூன்றாயிரத்து ஐநூற்று தொன்னூற்று ஏழு) வரிப்பாக்கி கேட்டார். அது சம்மந்தமாக வழக்கு மதாரஸ் நீதிமன்றத்தில் நடந்து மேல்முறையீடு இலண்டனில் உள்ள privy council க்கு சென்றது.
7) அமர்தார்கள் கோர்ட்டில் “எங்கள் முன்னோர்கள் ஜமீந்தாருக்கு பெரிய சேவைகள் செய்தார்கள். அதற்காக இந்த கிராமம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. எங்களிடம் சன்னத் (பட்டயம்) இருக்கிறது.
நாங்கள் நிரந்தர உரிமையாளர்கள். ஜமீந்தாருக்கு மீட்க உரிமை இல்லை.”அதற்கு நீதிமன்றம் அப்படி என்றால் அந்த சன்னத்தை காட்டுங்கள்.”ஆனால்…ஒரு சன்னத்தையும் அவர்கள் காட்டவில்லை.
8. அவர்கள் காட்டிய ஒரே ஆவணம் அவர்கள் காட்டிய ஒரே காகிதம் அதில் அது என்ன ஆவணம்? யார் கொடுத்தார்? தெரியாது யாருக்கு கொடுத்தர்கள்? என்று தெரியாது. “நிலம் உனக்கு கொடுக்கப்பட்டது” என்று எந்த வார்த்தையும் இல்லை இனாம் வாசகங்கள் இல்லை அதில் வெறும் “இந்த கிராம எல்லைகள் இவை”என்ற ஒரு உத்தரவு மட்டுமே இருந்தது.
9) அதற்க்கு பிரைவி கவுன்சில் சொன்னது: ஒருவர் தன் உரிமையை ஒரு ஆவணத்தின் அடிப்படையில் கூறினால், அந்த ஆவணத்தை அவனே நிரூபிக்க வேண்டும். காட்டவில்லை என்றால் அவனுக்கு எதிராக முடிவு செய்ய வேண்டும்.” என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் இனாம் திரும்ப பெறப்பட்டது. வரி பாக்கிக்காக கிராமத்தை கோர்ட் அட்டாச்மெண்ட் செய்யப்பட்டு விட்டது.
(Privy Council Judgment, dated 16 February 1858, Unidi Rajaha Raje Venkataperumal Rauze Babadoor, Zemindar of Karvetinagar Vs Pemmasamy Venkatadry Naidoo and Others, Appeal from the Sudder Dewanny Adawlut of Madras.)
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு:+91 86100 63410
#Amaraminam #privycouncil #case #Karvettinagar #land #jamine #jamineamararinam #inam #inamland #privy #resumption #assessment

Comments
Post a Comment