தமிழகத்தின் பல வீட்டு மனைகளுக்கு பதில் சொல்லாத அரசு ஆணை 78 இல் உள்ள 5 முரண்பாடுகள் :

அங்கீகாரம் இல்லாத மனைகளை மற்றும் மனை பிரிவுகளை வரைமுறை படுத்த 04.0-5.2017 அன்று வீட்டு வசதி துரையின் மூலம் போடப்பட்டுள்ள G.O(MS) 78 இல் இன்னும் பதில் சொல்ல முடியாத 5 முரண்பாடுகள் இருக்கிறது. இவற்றிற்கு தீர்வு காணாமல் G.O(MS) 78 நடைமுறை படுத்துவதன் மூலம் மிக பெரிய பயன் எதுவும் உருவாகாது.
DTCP உருவாவதற்கு முன்னரே இருக்கும் மனைகள்:
1971-ம் ஆண்டு முதல் DTCP அங்கீகார அமைப்பு தமிழகத்தில் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பே பல வீட்டுமனைப்பிரிவுகள் தமிழகத்தில் உருவாகி இருந்தது, அவற்றை அங்கீகார DTCP வரைமுறைக்குள் கொண்டுவர முடியாததால் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டன.
சென்னையை சுற்றி இப்படி அலமேலு மங்காபுரம், கணபதி சிண்டிகேட் என்று பல மனைப்பிரிவுகள் 1960-களிலேயே உருவாகி இருந்தன, அவற்றில் தற்பொழுது குடியிருப்புகளாக மாறி இருக்கிறது.
நத்தம் வீட்டு மனைகள்:
இவை இல்லாமல் பழைய ஊர்களில் ஊர்களுக்கு அருகிலேயே எதிர்கால வீட்டுமனை தேவைகளுக்காக கிராம நத்தம் என்று வகைப்படுத்தி நிலங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன அவற்றிற்கெல்லாம் இன்றுவரை கிராம நத்த தூய நிலவரி திட்டத்தின் அடிப்படையில் வருவாய் துறையில் பட்டா முழுமையாக வழங்கபடாமல் இன்றுவரை இருக்கின்றது.
கிராம நத்த வீடுகள் :

கிராம நத்த நிலங்கள் கிராம மக்களின் பெருக்கத்திற்க்கு ஏற்றவாறு இன்று தமிழகம் முழுவதும் குடியிருப்புகளாக மாறிவிட்டன. அவை இன்று பலர் கைமாறி அதாவது விற்பனை, கிரையம், தானம் செய்யப்பட்டு பத்திரங்கள் வைத்திருக்கின்றனர்.
இந்த கிராம நத்த இடங்களில் தூய நிலவரி திட்ட பட்டாக்கள் இன்னும் பெரும்பான்மையாக மேனுவலாகவே இருக்கிறது. இன்னும் சில இடங்களில் பட்டா என்ற ஆவணமே இல்லாமல் இருக்கின்றது. பழைய ஊர்கள், தாய் கிராமங்கள் ஆகியவற்றில் இருக்கும் குடியிருப்புகளுக்கு பட்டா இருக்கும், DTCP அங்கீகாரம் என்பதே இருக்காது, அப்படி ஏராளமான மனைகள் தமிழகத்தில் இருக்கின்றது.
ஒப்படை மனைகள் :
[gallery ids="1576,1575" type="rectangular"]
அரசு கொடுக்கும் வீட்டு மனை பிரிவுகளின் ஆணை மற்றும் வரைபடம்தமிழகம் முழுவதிலும் பல வீட்டுமனைகளுக்கான இடங்களில் அரசு Assignment பட்டா (நில ஒப்படை) ஏழை எளிய மக்களுக்கு வழங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு அரசு வீட்டு மனைகளை உருவாக்கி ஒப்படைக்கிறது , அதற்கு இதுவரை எந்த அங்கீகாரமும் இல்லை. அந்த மனை வைத்திருப்பவர்களுக்கு DTCP என்றாலே என்னவென்று இப்பொழுது வரை தெரியாது
.
அரசு உதவியால் கட்டப்படும் வீடுகள் :
மத்திய அரசின் இந்திரா வீட்டு வசதி திட்டம், தமிழக அரசின் பசுமை வீட்டு திட்டம் போன்றவற்றிற்கெல்லாம் 2 செண்ட் 3.5 செண்ட் வரை பட்டா மனை இருந்தால் மட்டுமே போதும் என்றே அரசு உதவி செய்து பல குடியிருப்புகளை உருவாக்கி இருக்கிறது. இன்னும் பல வீடுகள் உருவாகி கொண்டு தான் இருக்கிறது.
இந்திரா வீட்டு வசதி திட்ட வீடு

பசுமை வீட்டு திட்ட வீடு

DTCP இல்லாத மனைகளுக்கு கடன் வசதி :
மேற்கண்ட இடங்களுக்கெல்லாம் அடிமனை DTCP –ல் மனைப்பிரிவு விதிமுறைக்குள் பொருந்தாமலேயே இருக்கின்றது. ஆனால் மேற்கண்ட இடங்கள் பொதுமக்களின் கணிசமான வீட்டுமனை தேவையை நிறைவு செய்து வருகிறது.
மேலும் இந்த மனைப்பிரிவுகளுக்கெல்லாம் ஐ.டி.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி போன்ற தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனங்கள் ரூரல் Housing – காக வீட்டுமனை கட்ட கடன் கொடுத்திருக்கிறது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கிராம வங்கிகள் மேற்கண்ட இட்த்திற்கெல்லாம் கடன் உதவி செய்து கொண்டிருக்கின்றன.
DTCP அங்கீகாரத்திற்கு மட்டும் தான் கடன் கிடைக்கும் என்று ஒரு வதந்தி ரியல் எஸ்டேட்டில் இன்னும் நிலவி வருகிறது. இனி DTCP இல்லாத அடிமனைகளுக்கு கடன்கள் கொடுக்க கூடாது என்று பாலிசி கொண்டு வரப்படுமா அல்லது தொடர்ந்து வழங்கப்படுமாயின் மேற்படி அங்கீகாரம் இல்லாத குடியிருப்புகள் வளர்ந்து கொண்டே தானே இருக்கும்.
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#அங்கீகாரம் #Housing #வீட்டுமனை #ஒப்படைமனை #நத்தம் #பட்டா #Assignment #கிரையம் #தானம் #இந்திராவீடு #ரியல் #எஸ்டேட் #நிலவரி #dtcp #approved #gift #real #estate #land #tax #deed #tamil #தமிழகம்
Comments
Post a Comment