தஞ்சாவூர் பள்ளத்தாக்கில் நில உச்சவரம்பு சட்டம் ஆரம்ப கால நிலை “கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை” என்று சான்றோர்களால் புகழ்ந்து பாடப்பட்ட ஆறு. “காவிரி ஆறு” அந்த ஆற்றின் புனலும் அதில் இருந்து இணைந்து செல்லும் வாய்க்கால்கள், சிறு சிறு குளங்கள் அதற்கிடையே பச்சை பசேல் நெற்பயிர்கள், பூத்து குலுங்கும் பலவகை மலர்கள், செடிகள் என்று கண்ணிற்கினிய எண்ணற்ற காட்சிகளை காணலாம். மேலும் தஞ்சை என்று இப்பொழுதுதான் பொதுவாக சொல்வது தற்போதைய தஞ்சை மாவட்டம், திருவாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், இன்னும் பிரிய போகும் கும்பகோணம் மாவட்டம் என அனைத்து ஒருங்கிணைந்த “தஞ்சை பள்ளத்தாக்கு” என்று சொல்கிறேன். இந்த பகுதியில்தான் அதிக அளவில் நிலங்களை கைப்பற்றிகொண்டு இருந்த மிராசுகளும், மிட்தாக்களும், சுரோத்திரியர்கள், ஜமீன்களும், நில சுவான்தார்களும் அதிகம். அந்த பகுதியில் நில சீர்திருத்தம் சட்டம் இயற்றி நிலங்கள் சாமானியர்களுக்கு நிலத்தை பகிர்கின்ற முயற்சி 1960ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாட்டு நிலசுவான்தார்களிலேயே தஞ்சையில்தான் பொது அறக்கட்டளை...