பயிரிடும் குத்தகைதாரர் என்ற உரிமை பற்றி அந்த சம்சாரிக்கு தெரியாது மைனர் இனாம் நிலம் பற்றி தெரியாது UDR என்றால் தெரியாது. நத்தம் என்றாலும் தெரியாது எதுவுமே தெரியாது ஆனால் கோவில் நிலத்தில் எந்த சிரத்தையும் எடுக்காமல் வசிப்பேன் என்று போன மாதம் சொல்லி விட்டு போனார் என்னிடம்!
இன்று அவர் ஊரான திருப்பாம்புறம் கிராமத்தில் HRNCE அதிகாரிகள் police படை சூழ தீயணைப்பு படை வீரர்கள் அணி சூழ காலி செய்யுறியா? அல்லது பயன்பாட்டு தொகை (use and occupation amonut) ஒன்னரைலட்சம் கட்ட சொல்லி இருக்கிறார்கள்!அந்த பகுதி சட்ட மன்ற உறுப்பினர் போன் செய்து பேசியதால் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று அந்த சம்சாரி தெளிஞ்சு இருக்கிறார்.இன்று தப்பிச்சாச்சு!ஆனால் தலைக்கு மேல் hrnce சட்ட கத்தி தொங்குது ன்னு உணர ஆரம்பிச்சுட்டாரு!இப்பொழுது எனக்கு போன் அடித்து ஒழுங்கா நிலம் பற்றிய அறிவை கற்று கொள்கிறேன் அண்ணா!கூடவே இருந்து கற்று கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறார். பட்டால் தான் சுறுசுறுப்பு வருகிறது. அந்த சம்சாரிக்கு!
நிலம் பற்றிய அறிவே சாமானியரகளை காக்கும்!அறிவே அரண் சகோதரா!
Comments
Post a Comment