Posts

சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு

Image
  சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு தாத்தா சொத்துக்களை அப்பா அம்மாக்கள் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இடங்களுக்கு எந்த எந்த சர்வே எண்கள் எங்கு எங்கு இருக்கிறது போன்ற விவரங்கள் எதுவும் தெரியாது. மேற்படி கண்டுக்காமல் விட்ட இடங்கள் எல்லாம் புதிய ஆவணங்களை உருவாக்கி சம்மந்தமில்லாதவர்கள் ஆண்டு அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் என்ற நிலையில் தாத்தா பாட்டி பெயர்கள் அ பதிவேட்டில் இருக்கிறதா என்று தேடிபார்க்க RTI யில் 2j மனு போட்டு இருந்தோம் .இரண்டு மணி நேரம் முழு கணக்கையும் தீர பார்த்து நமக்கு தேவையான குறிப்புகளை எடுத்து கொண்டோம். இப்பொழுது இதிலிருந்து நூல்பிடித்துகொண்டே சென்றால் கிடைக்கும் உறுதியான தகவல்கள் அடிப்படையில் சொத்து மீட்கும் படலம் ஆரம்பித்துவிடும். இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் தொழில்முனைவர், www.paranjothipandian.in. #rti #2j #vao #nanthiyambakkam #asset #சொத்துமீட்டல் # property

கருப்புசட்டை -தனித்து நிற்கும் வீரம்!!!

Image
 கருப்புசட்டை -தனித்து நிற்கும் வீரம் அண்ணன் திருநெல்வேலி இராமகிருஷணன் அர்பணிப்புள்ள ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் அடிக்கடி தொடர்பிலேயே இருப்பார். அனைத்து தொழில் சார்ந்த விஷயங்களை பகிரந்து கொள்வார். கருப்பு சட்டை பற்றியும் ஒரு வாட்ஸப் செய்து போட்டு இருந்தார். உங்களுக்கு கருப்பு சட்டை சிறப்பாகதான் இருக்கறது. கருப்பு சட்டை ஒரு தனி அடையாளம் பிஸினஸ் உலகில் ஸடீவ் ஜாப்ஸ் தன்னை கருப்பு சட்டையிலே காண்பிப்பார். ஆப்பிள் கம்பெனியில் கருப்பு வண்ணம் இல்லாமல் இருக்காது. கருப்பு richness மற்றும் stand alone, brave போன்ற தன்மைகளை பிரதிபலிக்கும். அதனால் தொடர்ந்து கருப்பணியுங்கள் தலைமைத்துவத்துடன் தொழில் செய்யுங்கள். இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் www.paranjothipandian.in

மனிதர்கள் பல விதம்!!!

Image
    மனிதர்கள் பல விதம் கடந்ந வாரம் கடலூருக்கு கீழே தஞ்சை பள்ளதாக்கில் அதிராம்பட்டினம் வரை சென்று வந்ததில் திரு. நாகேஸ்வரம் -கும்பகோணம் பகுதிகளில் சொத்து சிக்கலகளுக்காக களபணி செய்தேன் அனைவருமே நல் விருந்தோம்பி வழி அனுப்பி வைத்தனர்.சந்தித்த ஒவ்வொருவரும் சமூகத்தின் ஒவ்வொருவிதமான வார்ப்பு ஒவ்வொருவருக்கும் வேறு வேறு வகையான நில சிக்கல்கள், ஆனால் சிக்கலை அணுக தெரியாமல் உணர்ச்சி கொந்தளிப்புகளால் தங்கள் மனதை குழப்பிகொள்கின்றனர். மனிதர்களின் அடிப்படை பலவீனமான பண்புகள் அப்படியே இருக்கிறது. நிலசிக்கல் தாண்டி அவர்களின் மன தெளவிற்காகவும் பேச வேண்டி இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in #man #different #social #service 

தேடிவந்து மனை வாங்கும் வாடிக்கையாளர்!!

Image
 தேடிவந்து மனை வாங்கும் வாடிக்கையாளர்!! திரு .பக்ருதீன் -சென்னை என்னை தேடி வந்து உங்கள் எழுத்துக்கள் வீடியோக்கள் எல்லாம் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். உங்களிடம் தான் முதலீட்டிற்கான மனை வாங்க வேண்டும் என்று ஆறு இலக்க அளவில் தொகையை கட்டிவிட்டு சென்று இருக்கிறார். அன்னாரின் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு அதிக ஊக்கத்தை அளிக்கன்றன மேலும் இவை போன்ற நிகழ்ச்சிகள் என்னுடைய கடந்த கால பிஸினஸ் காயங்களை ஆற்றிவிடும் நன்றி வாடிக்கையாளர்களே!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் /தொழில்முனைவர் www.paranjothipandian.in 9962265834

நிலசீர்திருத்தம் -முழுமையடையாத திட்டம்

Image
   நிலசீர்திருத்தம் -முழுமையடையாத திட்டம் நிலசீர்திருத்த துறையில் மூலம் அரசு உச்சவரம்பு தரிசாக்கி அதனை நிலமற்றவர்களுக்கு ஒப்படைக்கின்ற F பத்திர ஆணை நிலமற்ற மக்களுக்கு அரசு வழங்கியது. தமிழகத்தில் பலர் F பத்திர ஆணையை வைத்து இருக்கிறார்கள் தவிர நிலத்தை சுவாதீனம் எடுத்து கொள்ள முடியவில்லை. இப்படி பல இடங்களில் unfinished Task ஆக நில சீர்திருத்த துறை செயல்பாடுகள் இருந்து இருக்கின்றன.இப்படி நில ஒப்படையாக பேப்பரை மட்டும் பெற்று நிலத்தை பெறாத பயனாளிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நிலங்களை பெறுவதற்கான வேலையை நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையினர் மூலமாக செய்வோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் www.paranjothipandian.in

பழைய சிலபஸ் - தொழில் அலுவலகமும் அதன் பயனும்

Image
    பழைய சிலபஸ் தொழில் அலுவலகமும் அதன் பயனும் குடும்பம் வேறு வணிகம் வேறு இல்லாத காலத்தில் வீட்டோடு ஒட்டிய அலுவலகம் வீடு வியாபரம் குடும்பம் என்று அனைவரும் சேர்ந்து பங்களிக்கின்ற பாரக்கின்ற வாழ்க்கை அமைப்பு.இப்படி பழைய சிலபஸ் இல் இன்றும் வியாபாரத்தை பலர் நடத்திகொண்டு்இருக்கின்றார்கள். முன்பக்கம் வராந்தா அதில் நுழைந்தவுடன் பாய் விரிந்து வைத்து இருக்கும் அலுவலகம் அதன் உட்புரம் ஒரு அறையில் சரக்கு இருக்கும ஒரு குடோன்,அதன் பிறகு வீட்டிற்கான வரவேற்பரை அதன் பிறகு இல்வாழ்க்கைகான வீடு என்று ஒரு கட்டமைப்பு வியாபரத்தில் அதிக புற நெருக்கடிகள் திடீர் எதிரிகள் அந்த வியாபர தலைவரை ஆட்டும் பொழுது குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் எடுக்கின்ற முடிவுகளுக்கு அந்த வியாபார தலைவனின் உணர்ச்சிகள் (Emotion) மிக முக்கிய பங்கு வகிக்கிறது நல்ல தூக்கம், நல்ல உணவு, நல்ல செக்ஸ் தரமான அன்பு சூழ் குடும்பம் இருந்தால் வியாபார தலைவன் வெற்றி மேல் வெற்றி அடைவார்கள். மேற்சொன்ன பழைய சிலபஸில் இவையெல்லாம் இயல்பாகவே அமைந்து விடும். இப்பொழுது இருக்கின்ற பிஸ்னஸ் சூழல் அப்படி இருப்பது இல...

ரியல்எஸ்டேட் தொழில்முனைவோருக்கு பாடபுத்தமாக நிலம் உங்கள் எதிர்காலம்

Image
  ரியல்எஸ்டேட் தொழில்முனைவோருக்கு பாடபுத்தமாக நிலம் உங்கள் எதிர்காலம் நன்றி வாசகர்களே! நண்பர்களே! சென்ற வருடம் நிலம் உங்கள் எதிர்காலம் இண்டாவது பதிப்பு வெளியிட்டு இருந்தேன். முழுதும் உங்கள் அன்பால் விற்று தீர்ந்தது. என்னை போல ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்ற முகவர்களுக்கு ஒரு கோனார் விளக்க உரை போல பலருக்கு உதவி இருக்கிறது. புத்தகம் மூலம் தெளிவு கிடைத்து இருக்கிறது. நிறைய நிலம் சம்மந்தபட்ட முடிவுகள் உருப்படியாக எடுத்து இருக்கிறோம். அக்கறை எடுக்காமல் வைத்து இருந்த நிலங்களுக்கு இப்பொழுது தான் பட்டா வாங்கினேன் என்றெல்லாம் பின்னூட்டம் வரும்பொழுது ஒரு நல்ல வேலையை தொழிலில் செய்து கொண்டு இருக்கின்றோம் என்ற மனநிறைவு வந்துவிட்டது. இந்த ஆயுத பூஜையில் பாடபுத்தகங்களோடு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தையும் படைத்து இருக்கும்.திருநெல்வேலி ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் இப்படிக்கு சா.மு.பஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in