Posts

வளரும் வழக்கறிஞர் திருவைகுண்டம் மீரான்!!!

Image
  வளரும் வழக்கறிஞர் திருவைகுண்டம் மீரான்!!! வழக்கறிஞர் மீரான் அவர்கள் திருவைகுண்டத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். நிறைய வாசிப்பு, நிறைய தேடுதல் நிறைந்தவர். நிலம் உங்கள் எதிர்காலம் டெலிகிராம் குழுவில் நிறைய நேரம் முதலீடு செய்து இலவச ஆலோசனை வழங்கி வருகிறார். தூத்துகுடி பக்கம் களபணியாற்றும் பொழுது அவரையும் அவரின் சொந்த கிராமமான பேட் மாநகரம் கிராமத்திற்கு சென்று சந்தித்து நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்1 பாகம் 2 வழங்கினேன். எதிர்காலத்தில் மக்களுக்கான நல்ல வழக்கறிஞர் உருவாகிறார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #advocate #thiruvaikundam #meeran #free_consulting #telegram #invest #writer #consulting #author #trainer #village #town #survey #problem #issue

 நெல்லை சிலிகான் சிட்டி சைட்விசிட்!!

Image
   நெல்லை சிலிகான் சிட்டி சைட்விசிட்!! மருத்துவர் விவேக் திருநெல்வேலியை சேர்ந்தவர். எங்களது தவணைமுறை மனைபிரிவு திட்டங்களில் நம்பிக்கையான வாடிக்கையாளர். பஞ்சாயத்து அங்கீகாரம் நிறுத்தபட்டவுடன் மனைபிரிவு வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வது அநியாய தாமதம் செய்து வருகிறோம் அதனால் அதிருப்தியாய் இருந்தார். நெல்லை களபணி பொழுது சந்தித்து நிலைமையை விளக்கி சைட் விசிட் கூட்டி சென்றேன். இதுகாறும் நம்பிக்கையுடன் பொறுத்து இருக்கும் தவணைதிட்ட வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #Issue #customer #field #trainer #writer #consulting #tirunelveli #customer #deliver #plot #RealEstateServices #EMI #scheme #sitevisit

 கனியிடை ஏறிய சுளையும் மனங்களில் ஏறிய களையும்!

Image
   கனியிடை ஏறிய சுளையும் மனங்களில் ஏறிய களையும்! நாகர்கோவில் அகத்தீசுவரம் அருகில் இயற்கை வளங்கள் நிறைந்த கனிவிருட்சங்கள் பொலிந்த கிராமத்தில் வழி தகராறு சிக்கல்! கள ஆயவுக்கு சென்றேன். ஒருவர் பதினைந்து ஆண்டுகளாக பாடுபட்டு அனைத்து மரங்களும் வளர்த்து தொடர் பலன் கொடுக்க ஆரம்பிக்கிறது. அட அடா இந்த விவசாயி எவ்ளோ உழைத்தான் அதனால் மரங்கள் பல கொடுக்கிறது என்று பாராட்டாமல் அடுத்து அந்த விவசாயியை எப்படி கீழே இழுப்பது என்று யோசித்து நில சிக்கலை உருவாக்குகிறார்கள் பக்கத்து நிலத்துகாரர்கள் ! காடி கஞ்சினாலும் மூடி குடிங்கப்பா! நிலம் பலன் தந்து மரமாகி மரம் கனி தந்து சுளையாகி அதனால் பக்கத்து மனிதர்களின் மனங்கள் களையாகி ஒரே இம்சையை அனுபவிக்கிறார்கள்! இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #fruit_climbing #Nagercoil #Agathisuvaram #village #natural #resources #field #survey #Landlords #paranjothipandian #land #problem #issue #author #trainer #writer #consulting

 ஆதிச்சநல்லூர் பராமரிக்கபடுகிறது!!

Image
   ஆதிச்சநல்லூர் பராமரிக்கபடுகிறது!! தமிழகம் முழுதும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கபட்டு இருக்கிறது பாண்டிசேரி -அரியாங்குப்பம் அரிக்கமேடு -நாமக்கல் மோகனூர்-போன்ற பல இடங்களில் நான் பார்த்து இருக்கிறேன். இருப்பதலேயே மிகவும் பழமையானதாக இருப்பது ஆதிச்சநல்லூர்தான்! நல்ல வேளை இதையெல்லாம் வெள்ளையர் காலத்திலேயே வெளி கொண்டு வந்து விட்டார்கள். இல்லையென்றால் கீழடி போல் உள்ளடி வேலை பார்த்துவிடுவார்கள் வேத கால அறிவுஹீவிகள். சமீபமாக ஆதிச்சநல்லூர் மேட்டில் பெயர் பலகைகள் விரிவான விளக்கங்களுடன் வைக்கபட்டு மேட்டை சுற்றி கம்பிகளால் காம்பவுண்ட் சுவர் போடபட்டு பாதுகாக்கபட்டு் இருப்பது பாரட்ட படவேண்டியது இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #tamilnadu #paranjothipandian #land #problem #asset #issue #old #realestate #service #properties #author #trainer #writer #consulting #aathichchanallur #compunt #banner #board #explain #Name_board #Praptham

ஒரு நிழற் குடையில் ஒரு மணி நேரம் தூக்கம்

Image
    யூடியுப் மூலமாக தமிழக எல்லா மாவட்டங்களில் இருந்தும் அழைப்பு வருகிறது. எல்லா இடங்களையும் பார்த்து விட்டு உடல் அசதியாக இருக்கும் பொழுது பைக்கை ஓரம் கட்டி விட்டு பைபாஸில் ஒரு நிழற் குடையில் ஒரு மணி நேரம் தூக்கம் போட்டாலும் அவ்வளவு சுகம்பா! இந்த பயணத்தில் என் மகனையும் கூட்டி சென்றேன் அவன் எனக்கு தெரியாமல் எடுத்த படம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்மோனைவர் 9841665836/9962265834  #paranjothipandian   #agent   #realestate   #rest   #bypass   #bust_stop   #consulting   #training   #writer   #author   #fieldஒரு நிழற் குடையில் ஒரு மணி நேரம் தூக்கம் 

 ஸ்பென்சர் பிளாசாவில் இருந்து வேளச்சேரிக்கு சென்னை அலுவலகம் மாற்றம்!!!

Image
   ஸ்பென்சர் பிளாசாவில் இருந்து வேளச்சேரிக்கு சென்னை அலுவலகம் மாற்றம்!!! போன வருடம் ஸ்பென்சர் பிளாசாவில் அலுவலகம் எடுத்து ஒரு வாரம் தொடர்ந்து அலுவலகம் சென்று இருப்பேன். கொரானா அலை 1 வந்து விட்டது. முதன் முதலில் mall கள் தான் மூடபட்டது. அப்படியே தள்ளாடி தாள்ளாடி அலுவலகம் நடத்தி வந்த வேளையில் மீண்டும் கொரானா அலை 2வந்து mall கள் மூடபட்டு விட்டது. இப்படியே போன என்னுடைய தொழில் வீணாகி விடும் என்று கருதி வேளச்சேரி ஹவுசிங் போர்டில் ஒரு அலுவலகம் போட்டு இருக்கிறேன். ஸ்பென்சர் பிளாசாவால் சில இலட்சம் நஷ்டம்! தடைகள் பல தொழில் முனைவர் பயணத்தில் ஸ்பென்சர் பிளாசா அலுவலகம் எனக்கு ஒரு favorite failure ,விரைவில் மதுராந்தகம் அலுவலகத்தையும் பாண்டிசேரி கொண்டு செல்ல விருக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்மோனைவர் 9841665836/9962265834 #soencer #office #shift #paranjothipandian #RealEstateServices #agent #author #writer #trainer #consulting #maduranthakam #pondichery #housing_board