Posts

கள்ளக்குறிச்சி முதல் திருவள்ளூர் வரை களப்பணி

Image
  சேலம் -ஓமலூர் பக்கம் சுற்றிகொண்டு இருக்கிறேன். பணி முடிந்ததும் அப்படியே கள்ளகுறிச்சி -திருக்கோவிலூர் -திருவண்ணாமலை-ஆரணி-சோளிங்கர் திருவள்ளுர் என இந்த வாரம் திட்டமிடுகிறேன் ! புதிய நபர்களை புதிய நில சிக்கல்களை பார்க்க தயாராய் உள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 #paranjothipandian #KallakurichiSouthDMK #Thiruvannamalai #aarani #sholinganallur #field #land #problem #issue #trainer #consulting #author #writer

தங்கள் நில சிக்கலை கூட தொகுத்து சொல்ல முடியாத மக்கள் பலர் இருக்கிறார்கள்!

Image
   தங்கள் நில சிக்கலை கூட தொகுத்து சொல்ல முடியாத மக்கள் பலர் இருக்கிறார்கள்! பெருமாள்-பெங்களூரில் கட்டிட தொழிலாளி , மாற்று திறனாளி கள்ள குறிச்சி பக்கம் ஒரு கிராமத்தில் தந்தை வாங்கிய ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் கூட்டு கிணறு பாத்யதை சிக்கல்கள் இருக்கிறது. அது அடிதடி போலிஸ் பஞ்சாய்த்து வரை போயிருக்கிறது. கடந்த மாதம் ரூ 1000 போட்டு வீடியோ கால் ஆலோசனை வந்து இருந்தார். அவரால் நில சிக்கலை சொல்லவே முடியவில்லை ! எதிர்மனுதாரர்களின் குணங்களையும் இப்படி சொல்றாங்க அப்படி சொல்றாங்க என்று பிரச்சனையை சுத்தி சுத்தி நடக்கிற விஷயங்களை சொல்கிறார் பிரச்சினையை சொல்ல தெரியவில்லை! ஆவணங்கள் மெயிலில் அனுப்ப சொன்னேன் அனைத்தையும் ஒரு டிடிபி சென்டரில் இருந்து அனுப்பினார் .ஒரு இரவு முழுவதும் படித்து எனக்கு தோன்றுகின்ற எழு வினாக்களையும் போனில் கேட்டேன் அப்பொழுதும் சொல்ல தெரியவில்லை! ஆனால் அவர் ஐயா!ஐயா! என்று புலம்பதான் செய்கிறார்.கள்ள குறிச்சியில் கருத்தரங்கம் திட்டமிட்டவுடன் பெருமாள அண்ணனுக்கு போன் செய்து பெங்களூரில் இருந்து வாருங்கள் என்று சொல்லி நேரடியாக களத்திற்கு சென்றேன்.அந்த இடத்திற்கு சென்றவ...

பெருந்துறையில் சீனியர் ஆவண எழுத்தர் முருக பூபதி அவர்களின் ஆதரவுக்கு உளமாற நன்றிகள்!

Image
   பெருந்துறையில் சீனியர் ஆவண எழுத்தர் முருக பூபதி அவர்களின் ஆதரவுக்கு உளமாற நன்றிகள்! தொழில் முறை வழக்கறிஞர்கள்! ஆவண எழுத்தர்கள் பெரும்பாலும் சக தொழில் சகாக்களை எளிதில் அவகரிப்பதில்லை! ஆனால் அண்ணன் முருக பூபதி அவர்கள் பல ஆண்டுகளாக பெருந்துறை சார்பதிவகத்தில் ஆவண எழுத்தராக பத்திரம் பதிவுக்கு மக்களுக்கு உதவி புரிகின்ற வேலைகளை செய்து வருகிறார்! பெரிய அலுவலகம் நிறைய ஊழியர்கள் என்று பத்திர பதிவில் பிஸியாக இருப்பவர்! சில யுடியூப் வீடியோக்களை பார்த்து விட்டு என்னை மனமார அங்கீகரித்து 15 செட் புத்தகங்களை வாங்கி என்னை ஊக்கபடுத்தி இருக்கிறார்! அதனை அவரின் அலுவலகத்தில் வைத்து அவரின் முக்கிய வாடிக்கையாளருக்கு கொடுக்க விரும்பதாக சொன்னார்!முருக பூபதி போன்ற பக்குவப்பட்ட சீனியர் தொழில் முனைவர்களின் பாராட்டுகள் அதிக உழைப்பை கொடுக்க தூண்டுதலாக இருக்கிறது! சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 #document_writer #author #trainer #consulting #auditor #copy_of_the_document #nilam_ungal_ethirkalam

நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை இனி மாவட்டந்தோறும் பயணம்!

Image
  நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை இனி மாவட்டந்தோறும் பயணம்! நிறைய குக்கிராமங்களில் இருந்து நிலத்தை காணோம்!பட்டாவில் பெயரை காணோம்! உறவாடி மோசடி பத்திரம் போட்டுடாங்க! சமய நிறுவனங்கள் நோட்டீஸ் கொடுத்துட்டாங்க! காலம் காலமாக இருக்கிறோம் ஆனால் நிலத்தை அனாதீனம் ஆக்கிட்டாங்க என்றெல்லாம் மக்கள் போனிலும் முகநூல் வாட்ஸ்அப் டெலகிராம் கதைத்தலிலும் சொல்லும் பொழுது நேரடியாக கண்ணுக்கு கண் முகத்திற்கு முகம் பேசி பிரச்சினைகளின் தீர்வுகளை வழிகாட்டுதல்களை செய்வது போல வராது! ஆலோசனை கட்டணம் அறிவித்தும் எனக்கு நிறைய அழைப்பு வருகிறது. இத்தனைக்கும் நான் முழுநேர ஆலோசகர் அல்ல! வீட்டுமனை வியாபரம், தொழில்முனைவோருக்கான சாபங்களுக்கான பரிகார வேலைகள்! அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டிய எழுத்தாளர் கடமை!வியாபார உறவுகளை நட்புகளை டீம்களை அன்பு பேணுதல்! இவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் இரவு 2மணி வரை ஆவது தினமும் அன்றைய வேலைகள் முடிய ஆகிறது! அதனால் கிராம பகுதிகளுக்கு பிரத்தியோக நேரம் ஒதுக்க முடியாமல் தள்ளி போகிறது! வெளிநாடுவாழ் மக்கள்! வியாபார பெருமக்கள் தனவந்தார்கள் நிறுவனங்கள்! அரசு நிறுவனங்கள் என அ...

பெருந்துறையில் இனாம்நில சிக்கல் சம்மந்தமாக கிராம முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை!!!

Image
   பெருந்துறையில் இனாம்நில சிக்கல் சம்மந்தமாக கிராம முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை!!! பெருந்துறை அருகில் ஒரு கிராமத்தில் பல பேருக்கு இனாம் நில சிக்கல் பழைய நில நிர்வாக வரலாறு தெரியாமல் பிரச்சனை அடிநாதம் தெரியாமல் இதை சாப்பிட்டால் ஜுரம் நிற்கும் அதை சாப்பிட்டால் ஜுரம் நிற்கும் என்று ஆளாளுக்கு ஒன்று சொல்ல அதனை எல்லாம் செய்து பார்ப்பவர்கள் போல் எல்லா உபாயங்களையும் செய்து கொண்டு இருந்தனர். நண்பர்கள் மூலம் கிராமத்தின் முக்கியஸதர்கள் அனைவரும் என்னை பெருந்துறையில் ஒரு விடுதியில் என்னை சந்தித்தனர்! பலவிதமான சந்தேகங்கள் பலவிதமான கேள்விகள் என்று ஒவ்வொருவரும் கேட்டனர்! அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக புரியும் வகையில் பதிலளித்து எப்படி போகனும் என்று ரூட் போட்டு கொடுத்தேன். அனைவரின் கண்களிலும் மன நிறைவு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #issue #problem #field #asset #sales #doubt #realestate #service #author #trainer #writer #consulting