Posts

மதுரையில் ஒரு அன்பு தம்பி அருண்!!!

Image
  மதுரையில் ஒரு அன்பு தம்பி அருண்!!! மதுரைகாரங்க ரொம்ப பாசகாரங்க!அடோன் அண்ணன் ,சேகர் அண்ணன்,சின்ன மருது என்று என்னை நேசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் !அண்ணன் அருணும் அப்படிதான் கூர்ந்த அறிவு நில சிக்கல்களை பகுத்தாயும் திறன் நல்ல வாசிப்பு பழக்கம் என்று நிறைய கற்று கொள்ள வேண்டி இருக்கிறது அருண் அண்ணிடம்! மதுரை வந்து இறங்கியதும் அன்பு வரவேற்பும் விருந்தோம்பலும் கொடுத்தார். அருண் அவர்களுக்கு சில பொது செய்திக்கான ஆர்டிஐ மனுக்களை செய்து கொடுக்க சொன்னேன். செய்து கொடுப்பதாகவும் சொல்லி அதன் மாதிரி எனக்கு அனுப்பியும் வைத்தார்! ஐடி நிறுவன உத்தியோகம் போதுமான நடுத்தர வருமானம் என்று இருக்கிறார். மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் நிலம் சம்மந்தமாக செய்ய உங்களை நெறிபடுத்தி கொள்ளுங்கள் அண்ணா!அதில் தான் கற்றுலும் இருக்கிறது வரலாறும் எதிர்காலும் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன் கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834/9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #field #experience #madurai #real...

வழிசிக்கலில் மனதை தவிக்க விடும் தரும்புரி தம்பி!

Image
  வழிசிக்கலில் மனதை தவிக்க விடும் தரும்புரி தம்பி! வழி தேவைபடுகிறது!அதற்கான சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளை ஒரு கால்பந்தாட்டம போல் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லி கொடுக்க ஆள் இல்லாததால்! ஒரு உணர்ச்சி கொந்தளிப்பான போராட்டமாக மாற்றி வைத்து இருந்தார் என்னை பாண்டிசேரியல் வந்து சந்தித்தார் பிறகு நான் தரும்புரி அருகே இருக்கும் அவர் கிராமம் சென்று அனைத்தையும் பார்வையிட்டு் குறிப்பெடுத்து செய்ய வேண்டியதை விளையாட்டு போல் அணுகவும் தோற்றாலும் ஜெயித்தாலும் அதனை இரசித்து அடுத்து எப்படி அடுத்த ஆட்டம் ஆட வேண்டும் என்று யோசித்து செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834/9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #filed #experience #realestate #agent #land #problem #issue #solve  

 ஹக்கீம் அண்ணன் ஒரு தகவல் மருத்துவர்!

Image
  ஹக்கீம் அண்ணன் ஒரு தகவல் மருத்துவர்!   அண்ணன் ஹக்கீமை சில ஆண்டுகாளாக நேரடியாக சந்தித்த பொழுது அவரின் பெயரை Google இல் தேடினேன் அதற்கு அர்த்தம் என்னவென்று!!   கற்று தேர்ந்த மனிதன் உடல் சார்ந்த மருத்துவர் என்றெல்லாம் வந்தது! உண்மையில் பெயருக்கு ஏற்றார் போல் அண்ணன் கற்றறிந்தவர் தான்   நான் ஆவண எழுத்தர்கள் சொத்து சிக்கலை தீர்க்க ஆர்டிஐ எப்படி பயன்படுத்தலாம் என்று வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறேன்.அதேபோல் அண்ணன் ஹக்கீம் அவர்கள் எப்படி ஆர்டிஐ ஆர்வலர் களுக்கு வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறார்   அவரின் பல ஆர்டிஐ மனுக்கள் மதுரை கார்ப்ரேசன் முதல் டெல்லி பாராளுமன்றம் வரை பட்டைய கிளப்பி இருக்கிறது.மதுரை எயிம்ஸ் அடிகல் நாட்டல் அண்ணனின் ஆர்டிஐ யின் பயன்!   அண்ணன்னும் நானும் கடந்த ஒரு வருடமாக சேர்ந்து மேடை ஏறுகிறோம் !பல்வேறு செய்திகளை மக்களிடையே கொண்டு செல்கிறோம் அண்ணனும் தன்னுடைய மேடைகளை பரஞ்சோதி தம்பிக்கு கொடுக்க வேண்டும் என்று உறுதுணை செய்கிறார்   அன்னாருக்கு என் அன்பும் நன்றியும்!!!   இப்படிக்கு   சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9...

இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!!

Image
  இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!! இராமநாதபுரத்தில் ஒரு களபணி நிலுவையில் இருந்தது அதனை முடித்துவிட இராமநாதபுரம் சென்றேன். காலை இராமநாதபுரம் அரண்மனையை பார்க்க விருப்பம் நமது நில வரலாறு புத்தகத்திற்கு தரவுகளுக்காக !அதனால் காலையில் ஒரு ஆட்டோவில் கிளம்பி அரண்மனை சென்றோம். ஆட்டோகாரரிடம் இராமநாதபுரம் என்ற சிறப்பு அண்ணே என்றேன். அரபுநாடுகளும் இஸ்லாமிய சகோதரர்களும் இல்லை என்றால் இராம்நாடு இல்லை என்று சொல்லி விட்டார். அரண்மனைக்கு கொண்டு வந்து விட்டார்! நானும் நண்பர் இரவீந்திரனும் இராம்நாடு அரணமனையை சுற்றி வந்து அங்கு இருக்கும் இராஜாவை சந்திக்க முடியுமா என்று அரண்மணை ஊழியர்களை கேட்டேன் நான் ஒரு எழுத்தாளர் நிலம் சம்மந்தமாக ஆய்பவன் யூடியுபர் என்று அறிமுகபடுத்தி கொண்டேன். அதன்பிறகு ஒரு அரண்மணை நிர்வாகி இராஜாவிடம் பேசினார்! உடனடியாக அனுமதி கிடைத்து விட்டது! நீங்கள் அவரை சந்திக்கலாம் என்று சொன்னார்கள்! நாங்கள் இருவரும் அரண்மனையில் இராஜா அமர்ந்து இருக்கும் முற்றத்திற்கு சென்றோம்.எங்களை ஆசனம் கொடுத்து அமர சொன்னார்! கேள்விகளை கேட்க சொன்னார் !நான் ஏற்கனவே பேராசிரியர் கமால் அவர்களின் புத்த...

வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!

Image
  வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!   கலந்துரையாடல் வரும் நில சிக்கல் வாடிக்கையாளர்களிடம் முன் கூட்டியே சொல்லி விடுவேன் அண்ணே வேலைக்கான சேவைகட்டணம் கூட முன்னே பின்னே பார்த்துக்காலம் ! நல்ல சோறு நல்ல தூக்கம் எனக்கு முக்கியம் கடும் அலைச்சலில் வருவேன் சோறும் ரூமும் கொடுத்திடுங்க என்று   இதெல்லாம் முதலில் சொல்லாமல் இருந்த பொழுது அன்பு வாடிக்கையாளர்கள் என்னை பஸ் ஸ்டாண்டில் படுக்க வைத்து விடுவார்கள்! சுகாதாரமற்ற உணவுகளில் விட்டு விடுவார்கள் சில நேரங்களில் சோறும் கிடையாது அப்படியே விட்டு விடுவார்கள்   ஆனால் இப்பொழுது எல்லா வாடிக்கையாளரிடமும் கள பணிக்கு வந்தால் நமக்கு சோறுதான் முக்கியம் என்று சொல்லிவிடுவேன்! அதிலும் ஹோட்டலில் வாங்கி கொடுப்பார்கள் அதனை நான் மதிக்கிறேன்! ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில் ஒரு சுகாதாரம் இருக்கிறது அது எப்பொழுதாவது கிடைக்கும்   இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டிய ஆள் ஒருவர் இருக்கிறார் திரு .ரமணன் -நாகர் கோவில் அவர் வீட்டில் வாழை இலை விரித்து சோறு போட்டார். அதேபோல் இராமநாதபுரம் அடுத்த திருப்பாலைகுடி...

வேம்பார் அருகில் மனை பிரிவு அமைப்பதற்கான களபணி!!!

Image
   வேம்பார் அருகில் மனை பிரிவு அமைப்பதற்கான களபணி!!! சொத்தை உயர் மதிப்பாக்குவது அதனை பாதுகாப்பது அதன் ஆவணங்களை பாதுகாப்பது எல்லாம் Creative ஆன வேலை! பலர் பிரச்சனை வந்தவுடன் அதனை சரி செய்வார்கள் (Survival mode) ஆனால் என் முன்னே இருக்கிற சகோதரர்கள் super creative ஆக இருப்பவர்கள்!இது போல் எல்லா நடுத்தர மக்களும் ஆக வேண்டும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #issue #document #creatvie #survival #mode #field #solve #asset

சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல!கள்ளக்குறிச்சி முகாம்

Image
 சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல!கள்ளக்குறிச்சி முகாம் நிலம் உங்கள் எதிர் காலம் மக்கள் நல அறகட்டளை மாதந்தோறும் இரண்டாம் நகரங்களில் நில சிக்கல்களில் திக்கு தெரியாமல் நிற்பவர்களுக்கு வழி காட்டுதல் முகாமை குறைந்த கட்டணத்தில் நடத்துகிறது! கள்ளகுறிச்சி,சோளிங்கர் ஆகிய இரு இடங்களிலும் நடத்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நபர்கள் நிதிகொடை அளித்து ஊக்கபடுத்தி் இருக்கிறார்கள்!அவற்றின் வரவு செலவு கணக்குகளை நாங்கள் ஏற்கனவே நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை டெலிகிராம் குழுவிலும் www.paranjothipandian.in இணையத்திலும் வெளியிட்டு இருக்கிறோம். மேற்படி உறுதுணையாக நின்ற தோழர்களுக்கு நன்றி கடிதங்கள் அனுப்பவிருக்கிறோம்.அந்த கடிதங்களை ஆன்லைனிலும் வெளியிடுகிறோம் நீங்கள் கூட நிற்கிறீர்கள் என்ற ஆதரவு அதிகமாக உழைக்க தெம்பை தரும் நிலத்தின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடயை வேண்டும் என்ற இலட்சிய பயணத்தில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 / 9962265834