Posts

புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்குவது சம்மந்தமாக என்னுடைய கருத்தை தினமலர் நாளிதழில்

Image
புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்குவது சம்மந்தமாக என்னுடைய கருத்தை தினமலர் நாளிதழின் வேலூர்,திருச்சி,சேலம்,ஈரோடு,திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய எடிசன்களில் இன்று வந்து இருக்கிறது நன்றி தினமலர்

காலதாமதம் ஆகும் டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம்!!

Image
     1.DTCP வரன்முறை  படுத்துதலுக்கு 7 இலட்சத்திற்கு மேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற பட்டு இருக்கிறது. சிஎம்டிஏ வரன்முறை படுத்துதலுக்கு 2 இலட்சம் மேல் மனுக்கள் பெறபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2.இன்னும் மனு செய்யபடாமல் அடுத்து எப்பொழுது ஆன்லைன் ஓபன் ஆகும். எப்பொழுது  வரன்முறைபடுத்துதலுக்கு மனு செய்யலாம் என்று  இன்னும் பல இலட்சம் மனுக்கள் மக்களிடையே காத்து இருக்கின்றன. 3.மனு செய்யபட்ட வரன்முறைபடுத்துதலில் ஒரு இலட்சத்திற்கும் குறைவாக தான் வரன்முறைபடுத்தபட்டு இருக்கிறது அதுவும் லேஅவுட் பிரமோட்டரகளின் வரன்முறைபடுத்துதல்தான் அதிக அளவில் டிடிசிபி அதிகாரிகள் செய்து முடித்து இருக்கிறார்கள். 4.பல வரன்முறை படுத்துதல் மனுக்கள்  அதிகாரிகளை நேரடியாக சந்தித்தால் மட்டுமே நடக்கிறது, இயல்பாகவே சராசரியாக  மூன்று மாவட்டத்திற்கு ஒரு டிடிசிபி அலுவலகம் போட்டு குறைவான ஊழியர்கள் போட்டு அதிகபடியான வேலைகளை செய்ய  முடியாமலும்  தவிக்கின்றன டிடிசிபி அலுவலகம். 5.கடந்த 20 ஆண்டுகளாக நடந்த பஞ்சாயத்து அங்கீகார மனைபிரிவுகளை மனைகளை ஒர...

தமிழ் இந்து நாளிதழில் வில்லங்கச் சான்றிதழ் (EC) பற்றிய எனது கட்டுரை வெளியாகி இருக்கிறது.

Image
தமிழ் இந்து நாளிதழின் புத்தக மதிப்புரை: நான் எழுதி நல்ல வரவேற்பை பெற்றுள்ள “நிலம் உங்கள் எதிர்காலம்” என்ற புத்தகத்தை தமிழ் இந்து நாளிதழ் மதிப்பீடு செய்தும், அதில் உள்ள ஒரு தலைப்பான வில்லங்கச் சான்றிதழ் பற்றியும்  வெளியிட்டு உள்ளது. நன்றி தமிழ் இந்து நாளிதழ்..! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன். எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834. (குறிப்பு) :சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) #இந்து #நாளிதழ் #வில்லங்கச்சான்றிதழ் #கட்டுரை #ec #paranjithipandian

கூட்டுறவு மூலம் வீட்டுமனை புரட்சியில் கரம் கோர்ப்பீர்!!

Image
நடுத்தர அடிதட்டு மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் ரியல் எஸ்டேட் விலைவாசியில் ஒரு வீட்டு தேவைக்காக உங்களுடைய பொருளாதார வாழக்கையை இழக்க வேண்டிய நிலைதான் எதிர்காலத்தில் வரும் . பல பன்னாட்டு நிறுவனங்கள் ரியல் எஸ்டேட்டில் வீடுகள் சந்தையில் இறங்கி விட்டன . அவர்களுக்கு வங்கிகளும் ஏன் அரசே கூட உதவிகள் செய்யும் . அப்படி பன்னாட்டு ரியல் எஸ்டேட் வியாபரிகள் விரிக்கிற மாயவலையில் சிக்கி உங்கள் சேமிப்பை இழக்காமல் இருக்கவும் ( பெங்களூரு சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த போலி விலைஉயர்வால் பலர் இன்னும் கடன் கட்டி கொண்டு இருக்கிறார்கள் ) விலை உயரும் என்ற நீர்குமிழிகளில் பல முதலீடுகள் உங்கள் மீது திணிக்கப்பட்டு விற்கப்பட்டு இருக்கின்றன . இவற்றை எல்லாம் சரி செய்ய முடியாது . ஆனால் விவரம் தெரிந்தவர்கள் இதில் இருந்து எதிர்காலத்தில் தப்பித்து கொள்ளலாம் என்னாலும் என் அனுபவத்தினாலும் இதற்கு வழிகாட்டலாம் . அதற்கான life boat தான் நாம் உருவாக்க போகும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் . மேலும் தற்சார்புடைய நமக்...