Posts

பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!

Image
   பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!   அப்ரூவ்டு மேட்டர் தான் டிடிசிபி க்கு போயிடுச்சே இனி என்ன ஜோலி ரியல்எஸ்டேட் காரங்ககிட்ட வீட்டு மனை உருவாக்கும் தொழிலில் வட்டிக்கு முதல் திரட்டி மனைப்பிரிவுகள் விற்பனை செய்து நாலு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அயராது உழைக்கின்ற ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர்களின்வழிப்பறி செய்வது போல் செய்யலாமா! கடந்த 20 வருடமாக உங்களிடம் பஞ்சாயத்து தலைவர்கள் வார்டு மெம்பர்கள் என்று ஒவ்வொருவருக்கும் கப்பம் கட்டித் தானே பஞ்சாயத்து NOC மனைகளைப் போட்டோம் அப்பொழுது அங்கீகாரம் பற்றி அரசே ஒழுங்கா கொள்கை முடிவு எடுக்கவில்லை! அப்பொழுது உருவாக்கிய மனைகளை இன்று விதி மீறல்கள் ஏன் போர்டு வைக்கிறீர்கள்! இப்பொழுது டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் வாங்க ஓலை அனுப்பி இருக்கிறார்கள்!! அதற்கு அவர்களுக்கு கப்பம் கட்டத் தானே நாங்கள் கடன் வாங்கி பணம் பிரட்டிக் கொண்டு இருக்கிறோம். வேலை புராசாஸ்ல இருக்கும்பொழுதே நீங்கள் அறிவிப்பு போர்டு வைத்து பொதுமக்களை பயமுறுத்தலாமா!! டிடிசிபியில் அங்கீகாரம் அரசுக் கட்டணம் மட்டும் கட்டச் சொல்லி வேலையை ஒரு வருடம் இழுக்காமல் ...

புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!

Image
  புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!   ரியல்எஸ்டேட் களப் பணிக்காக பழைய வேட்டவலம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த ஆலம்பாடி கிராமத்திற்குச் சென்று இருந்தேன்.  விழுப்புரம் டூ திருக்கோயிலூர் சாலை டூ வீலர் பயணத்திற்கு ஏற்ற அழகான சாலை சாலையின் இருபக்கத்தில் பெரியப் பெரிய குடைப்போல் நிழல் விரித்து இருக்கும் புளியமரங்கள் மரங்கள், இப்படி மரங்கள் இருப்பதால் வெயில் தெரியாதப் பயணம் செய்தேன். இதுபோல 1970 களில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பல புளியமர சாலைகள் எல்லாம் இப்பொழுது சாலை விரிவாக்கத்தில் பிய்த்து எடுத்துவிட்டார்கள். இப்பொழுது அருகி போய் இருக்கும் புளியமர நிழற்சாலைகளில் விழுப்புரம் -திருக்கோயிலூர் சிறப்பான சாலை.இனிவருங்காலங்களில் சாலை விரிவாக்கம் செய்தால் புளியமரத்தில் கை வைக்காமல் இருக்க விழுப்புரம் மாவட்டத்தினர் காவலாக இருக்க வேண்டிகிறேன்   இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in   #jameen   #realstate   #field   #paranjothi_pandian   #viluppuram   #Tamarind_Tree

எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!!

Image
  என்னுடைய போதிமரம்! கடந்த 18 ஆண்டுகளின் தொழில்முனைவு பயணங்களில் எனக்குள் நடக்கின்ற பல்வேறு மன போராட்டங்களுக்கு விடைகளை இந்த கடல்தாயிடம் வந்து அமரந்து அதனுடன் பேசி முடிவு எடுத்துகொள்வேன். பல்வேறு நபர்களுக்கு நான் ஆறுதல், ஹீலர், உந்துசக்தி, ஆனல் எனக்கு வலி தொய்வு களைப்பு போன்றவை ஏற்படும் பொழுது எல்லாம் அழகான கடல்தான் இளைப்பாறுதல்! தெளிவற்று இருக்கும் பொழுது இந்தக் கடலின் இரைச்சல் அனைத்தையும் சீராக்கிவிடும். ஒன்றே ஒன்றுதான் எனக்குப் பாடம் அலைகள் ஓய்வதில்லை நீயும் ஓயாமல் உழைத்துக்கொண்டு இரு!! இந்த கடலில் உன் அஸ்தி கரைக்கும் வரை!! எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர்   #கடல்   #போதி   #அலைகள்   #ஆறுதல் #ரியல்எஸ்டேட்   #பிசினஸ்   #பிராப்தம்  

ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!!

Image
   ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!! பன்னாட்டு நிறுவனத்தில் இலட்சங்களில் ஊதியம் சென்னை பெங்களூர் என்று சம்பாத்தியம் வாழ்க்கை என்று இருந்த ஆடிட்டருக்கு சொந்த ஊரில் அவருடைய உணர்வின் வேர்கள் ஆழமாக ஊடுருவி இருந்ததால். ஊரில் தொழில் செய்யத் தன்னுடைய அலுவலகத்தை ஊத்தங்கரை ரவுண்டானாவில் லோகநாதன் சேகர் ஆடிட்டர் என்ற முத்திரையுடன் திறந்துவிட்டார். எனக்கு பல ஆண்டுகள் முகநூல் நண்பர்,ஒரு சில விஷயங்களில் எனது நிறுவனத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். ரியல்எஸ்டேட் களப்பணிக்காக பெங்களூர் சென்றப் பொழுது நன்றி நிமித்தமாக ஊத்தங்கரையில் ஆடிட்டரை சந்தித்துவிட முடிவுசெய்து அவரை சந்தித்தேன். நிறைய விஷயங்களில் எனக்கும் அவருக்கும் கருத்தொற்றுமை இருக்கிறது. வருங்காலங்களில் நம்முடன் அதிகம் பயணிக்கும் உறுதுணை ஆடிட்டர்.தொழில் முனைவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய மனிதர். நான் பயனடைந்து இருக்கிறேன் அதனால் பரிந்துரைக்கிறேன். பயன்படுத்திகொள்ளுங்கள்! தொழில் வாழ்வில் வெற்றிக் கொள்ளுங்கள்!!! இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் www.paranjothipandian.in 9841665836,9841665837 ...

புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!

Image
  புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!   ஓய்வு பெற்ற புதுச்சேரி காவல்துறை ஆய்வாளரால் உருவாக்கபட்டு புதுவை புலனாய்வு என்ற பெயரில் அரசின் இலஞ்ச ஊழல்களை வெளிகொணருகின்ற வேலைகளை செய்கின்றார்கள். நில சிக்கலில் அவர்களுக்கு பல்வேறு புதிர்கள் இருந்து இருக்கிறது. அத்தனை முடிச்சுகளையும் அவிழ்க்க ரூம் போட்டு பாண்டிசேரி வரவழைத்துவிட்டனர். நான்கு மணிநேர இடைவிடாத உரையாடல் அனைத்துக்கும் விடை கிடைத்து கிளம்பி சென்றனர் இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் www.paranjothipandian.in #bribery   #pondicherry   #meeting   #paranjothi_pandian   #consulting   #writer   #author   #trainer      

கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!!

Image
கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!! மக்களிடம் ஒப்படைக்கபடாத ஏழாயிரம் ஏக்கர் பூமிதான நிலங்களின் கிராமங்கள் அதன் சர்வே எண்கள் கேட்டு தகவல் பெறும் உரிமைசட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட பூமிதான பிரிவிற்கும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை சார்பாக தகவல்கள கேட்டு அனுப்பி உள்ளேன். முழு தகவல்கள் வந்த பிறகு விவசாயம் செய்ய விரும்பும் ஆயிரம் நபர்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் பூமி தானம் வேண்டி மொத்தமாக மனு செய்கிற முடிவில் இருக்கிறேன்.அரசிடம் இருக்கும் அனாதீனம் நிலங்களை கேட்பதை விட விவசாயத்திற்கு மட்டும் ஓதுக்கபட்டு இருக்கும் பூமிதான நிலங்களை பெற முயற்சிப்பது சீக்கிரம் பலித்துவிடும்.அந்த நிலங்களின் நோக்கமே நிலமற்றவர்களுக்கு பயிர் செய்ய நிலம் ஒப்படைப்பது ஆனால் அவை எங்கெங்கு இருக்கிறது என்ற தகவல்கள் தான் இல்லை அதற்கான முயற்சி தான் இந்த வேலை இந்த வேலைகளுக்கு எல்லாம் ஆகும் தபால் செலவுகள் மனு செலவுகள் எல்லாம் ஏற்றுகொண்டு உள்ள புருனே வாழ் அண்ணன் திலக்ராஜ் முன்னாள் இராணுவ வீரர் திரு ஆகியவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்...

வடக்கு பெங்களூர் தாலுகாவில் முதலீட்டிற்கான மனை விற்பனை!!

Image
 வடக்கு பெங்களூர் தாலுகாவில முதலீட்டிற்கான மனை விற்பனை!! முதலீட்டிற்கான மனை விற்பனைக்கு இருக்கிறது விற்பவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் ! விலை அந்த பகுதியில் என்ன போகிறதோ அதனை வியாபரம் பேசி வாங்கலாம். எனக்கு அங்கு என்ன விலைவாசி என்று தெரியவில்லை ! பெங்களூர் நட்புகள் உதவி செய்யவும் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர www.paranjothipandian.in 9841665836,9841665837,9962265834 #North. #banglore #plot #இலங்கா