காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும்

பராசக்தி
என்ற உயர் நடுத்தர
மக்களை பிரதிபலித்தார்
பாரதியார்!
காணி நிலம் வைத்து விட்டு
சென்றவர்களின் வாரிசுகள்
விரல்துண்டு நிலத்தையும்
மிச்சம் வைப்பதில்லை
ஆறடி நிலம் தான்
என்றார்
டால்ஸ்டாய்!
அதுவும்
தேவையில்லை
நவீன யுகத்தில்
அரைகலச சாம்பலாக்கி
கையில் கொடுத்து விடுகிறார்கள்..
மரியாதைக்குரிய விருந்தாளி நீ,
இந்த உலகின் அற்ப நிலத்துண்டொன்றை
ஒரு பிச்சைக்காரனைப்போல
யாசித்துக் கொண்டிருக்காதே..
என்று ஒரே போடாக போட்டால்
ஜலாலுதீன் ரூமீ
ஆனால் 18 சதுரமீட்டர்
நத்தம் நிலத்திற்கு யுத்தமே
செய்து கொண்டு இருக்கிறார்கள்.



இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836

Comments

Popular posts from this blog

சார்பதிவகத்தின் 5 புத்தகமும் 4 அனுபந்தமும்