1600 ஏக்கர் நிலங்களை போலி பத்திரம் மூலம் எஸ்டேட் ஓழிப்பு செட்டில்மெண்ட்டில் சமர்ப்பித்து நீதிமன்றம் மூலம் பட்டா கொடுக்கபட்டத்தை மக்கள் மன்றம் மூலம் ரத்து செய்ய பட்ட கதை!



 
1600 ஏக்கர் நிலங்களை போலி பத்திரம் மூலம் எஸ்டேட் ஓழிப்பு செட்டில்மெண்ட்டில் சமர்ப்பித்து நீதிமன்றம் மூலம் பட்டா கொடுக்கபட்டத்தை மக்கள் மன்றம் மூலம் ரத்து செய்ய பட்ட கதை!
1) எஸ்டேட் என்றால் ஜமீன் கிராமங்கள் என்று பெரும்பாலும் நாம் புரிந்து கொண்டிருப்போம் அதே போல் இனாம் எஸ்டேட் என்றால் இனாம்தாரர் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கிராமங்கள் என்பதையெல்லாம் கடந்த முகநூல் பதிவுகளிலும் என்னுடைய youtube இலும் என்னுடைய புத்தகங்களிலும் நீங்கள் வாசித்து புரிந்து கொண்டிருப்பீர்கள் இன்று நாம் ஒரு புதிய வகையான எஸ்டேட்டை பார்க்க போகிறோம்.(Tenure estate) டெனியூர் எஸ்டேட் என்ற பெயர்.
2) Tenure Estate என்றால் என்ன? ஜமீன் கிராமங்களில் ஒரு சில முக்கியமான பகுதிகள் அதாவது கடற்கரை ஓரங்கள், காடுகள், மலைகள் ஆகியவற்றை டெ னியூர் ஒரு எஸ்டேட்டாக அறிவிப்பார்கள். பிரிட்டிஷ் இந்தியா ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பதற்கு இடையில் ஜமீன் கிராமங்களில் இருந்தால் அவர்கள் உரிமையில் இருந்தால் பயணிப்பதற்கு தடை ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று கருதப்படும் நிகழ்வுகளிலும்
இந்த இடம் பிரிட்டிஷ் அரசுக்கு தேவை என்று நினைத்து அது ஜமீன் கிராமத்தில் இருந்தாலும் அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசில் கட்டுப்பாட்டில் அதனுடைய பதிவேட்டில் நிர்வாம் செய்யப்படும்
4) உதாரணமாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முன்னாள் தலைநகராக இருந்த பத்மநாபபுரம் அரண்மனை (கல்குளம் அரண்மனை) தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலைக்கு அருகில் அமைந்திருந்தாலும், இது கேரள அரசினால் பராமரிக்கப்பட்டு வருவதைப் போல் tenure எஸ்டேட் நிலப்பகுதிகள் ஜமீன் எஸ்டேட் க்குள் இருந்தாலும் அது பிரிட்டிஷ் அரசினுடைய நிர்வாகத்தில் இருக்கும்
5) அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் புத்தூர் நகரத்திற்கு அருகில் கல்யாண வெங்கடேஸ்வரபுரம்( கல்யாண வெங்கடேஷ்வரபுரம் அந்த காலத்தில் காவேட்டி ஜமீன்களின் தலைநகராக கூட இருந்திருக்கிறது ) மற்றும்
வித்வத் சதாசிவபுரம் ஒரு இரண்டு கிராமங்களுக்கு இடையில் 1600 ஏக்கருக்கு மேல் அடர்ந்த காடுகள் இருந்தன. இந்தப் பகுதி கார்வெட்டி நகர் ஜமீன் பகுதியில்தான் வருகிறது.
6)03.08.1952 அன்று ஆந்திர அரசு வெளியிடப்பட்டஅரசாணை எண் 351-ன் படி எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின் கீழ் மேற்படி நிலப் பகுதிகளை அரசு புறம்போக்கு நிலமாக்கி நிறைய காடுகள் இருந்ததால் வனச் சட்டப்படி காப்புக்காடுகள் ஆக்குவதற்கான வேலைகளை அரசு செய்தது.
7) இந்த 1600 ஏக்கரைஸ்ரீ சிங்கச்சாரி என்கின்ற பிராமணரின் வாரிசுகள் ஸ்ரீ சிங்கச்சாரி அவர்கள் 26.07.1880,02.08.1880
03.08.1880,04.08.1880 ஆகிய தேதிகளில் மேற்படி 1600 ஏக்கர் வனப்பகுதியை கிரையம் வாங்கியதாக சொல்லி விவசாய உரம் செய்வதற்காக காட்டில் உள்ள மரங்களின் இலைகளை தொடர்ந்து சேகரித்து வந்ததாகவும், வீட்டு பயன்பாட்டிற்கான விறகுகளை எடுத்து விற்பனை செய்து வந்ததாகவும், தேவையான பொழுது மரங்களை வெட்டிக்கொண்டும் ( மரம் வெட்டுவதற்கு அரசு கட்டுப்பாடு இல்லாத காலம் ) தொடர்ந்து அந்த காட்டை அனுபவித்து வருவதாகவும்
8)அதன் பிறகு 1947 ஆம் ஆண்டு O.S. No. 64 of 1947” என்ற பாகப்பிரிவினை வழக்கின் மூலம் வாரிசுகள் அனைவரும் ஒரு பாகப்பிரிவினை வழக்கினை தாக்கல் செய்து அதில் டிகிரியும் பெற்று வைத்திருக்கின்றார்கள். பாகப்பிரிவினை செய்து டிகிரி பெற்றாலும் அதனை இன்றுவரை கூட்டு சொத்தாகவே அனுபவித்து வருவதாக ஒரு புதிய வழக்கினை தாக்கல் செய்கிறார்கள்
9) மேற்படி வழக்கில்ஸ்ரீ சிங்காச்சாரி வாரிசுகள் இதனை தனியார் காடுகள் (private forest) என்று டைட்டிலை அறிவிக்க சொல்லியும் 1952 இல் அரசு வெளியிட்ட ஸ்டேட் ஒழிப்பு அ பாலிசன் சட்டத்தின் படி புறம்போக்கு என்ற அறிவிக்கப்பட்ட Notification ஐ ரத்து செய்யச் சொல்லி
1958 ம் ஆண்டு அந்த Notification-ஐ எதிர்த்த வழக்கு O.S. No.15 of 1958 – Declaration Suit தாக்கல் செய்கிறார்கள். மேற்படி வழக்கில் அரசுக்கு எதிராகவும் ஸ்ரீ சிங்கச்சாரி குடும்பத்தினருக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வருகிறது அதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்கிறது A.S. No.415 of 1959 – இந்த மேல்முறையீட்டிலும் அரசுக்கு ஆதரவாக அமையவில்லை
10) மேற் சொன்ன வழக்குகளில் தான் அரசு மேற்படி 1600 ஏக்கர் காட்டை tenure எஸ்டேட் என்று சொன்னது. ஆனால் அவற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுவே இறுதி தீர்ப்பாகி விட்டது அரசு இதே வாதத்தை மீண்டும் நீதிமன்றத்தில் வைப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. அதனால் ஸ்ரீ சிங்காச்சாரி வாரிசுகளுக்கு தாவா சொத்து பிரைவேட் ஃபாரஸ்ட் ஆக மாறிவிட்டது. இப்பொழுதும் நீங்கள் மேகமலை பக்கம், நீலகிரி மலைகளில் எல்லாம் பிரைவேட் ஃபாரஸ்ட் இருப்பதை பார்க்கலாம் அதுபோன்று இதுவும் ஒரு தனியார் கார்டு என்று அறிவிக்கப்பட்டது
11) அரசு நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தாலும் புதிய அரசாணைகள் மூலம் 1600 ஏக்கர் நிலத்தை அரசு வசம் கொண்டுவர முயற்சி செய்தது. 1952 அரசாணையின் அடிப்படை வாதம்
இந்தக் காடுகள் ஒரு Tenure Estate-ன் பகுதிகள்அதனால்:Estate Abolition Act பொருந்தும்அரசு கைப்பற்றலாம் என்று சொல்லியது ஆனால் தாவா சொத்து
Tenure Estate அல்ல. என்று சொல்லி விட்டது
12)1967 – ஆந்திர அரசு பிறப்பித்த புதிய அரசாணையில் அரசு நேரடியாக “Tenure Estate” என்று சொல்லவில்லை.
அதற்கு பதிலாக ஏற்கனவே நடந்த “High Court தீர்ப்பில் கிராமங்கள் Karvetinagar Zamindari-யுடன் தொடர்புடையவை என்ற observation இருக்கிறது.அதனால் மேற்படி
Karvetinagar Zamindari-யின் parent estate ஆன
Narayanavanam Estateஏற்கனவே takeover செய்யப்பட்டுள்ளதால்,இந்த தாவா சொத்து
15.08.1950 முதல்Narayanavanam Estate-க்கு
சேர்ந்ததாகவே கருதப்படும் (deemed to have been taken over).”என்று சொல்லி தாவா சொத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது
13) நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வந்துவிட்ட பிறகு அந்த தீர்ப்பிற்கு எதிராக புதிய அரசாணையை கொண்டு vanthalwஅது சொல்லுமா செல்லாது என்று ஒரு தரப்பினரும் செல்லும் என்று ஒரு தரப்பினரும் சட்ட குழப்பம் ஏற்பட்டு விட்டது
அதன் பிறகு சிங்காஆச்சாரி வாரிசுகள் நீதிமன்றம் சென்றார்கள் இதனிடையே
1970-ம் ஆண்டு A.M.புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, நிலமற்ற குடும்பங்களை அரசு நிலத்தில் குடியேறினார்கள்.புதர்கள் அகற்றினார்கள்
நிலத்தை சீரமைத்தார்கள் பயிர் செய்தார்கள் அவர்களுக்கு பட்டா கொடுக்க அரசும் ஏற்பாடு செய்தது.
14)மேற்படி அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து நீதிமன்றங்களில் தடை வாங்கினார்கள். இந்த பிரச்சனை மக்கள் மன்றத்திற்கு வந்துவிட்டது.சில நேரங்களில் நீதிமன்றங்கள் தவறான தீர்ப்பு அதனை மக்கள் மன்றங்கள் மாற்றி இருக்கின்றன தஞ்சை டெல்டாவில் கீழ்வெண்மணி 44 பேர் விவசாய தொழிலாளர்களை கொளுத்தி கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடு என்ற நிலசு வாந்தாரை நீதிமன்றம் விடுவித்து விட்டது ஆனால் மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள் படுகொலை செய்து விட்டதை வரலாற்றில் படிக்கிறோம்
15) அது போல 1600 ஏக்கர் காட்டினை இருக்கின்ற சுற்றி இருக்கின்ற 12 கிராம அனைத்து சமுதாய மக்களும் காடு எங்களுடையது என்று சொல்லி பெரும் போராட்டம் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் ஆவணங்களை ஆய்வு செய்தனர் அப்படி ஆய்வு செய்த பொழுதுதான் ஸ்ரீ சிங்கச்சாரி 1880 ம் ஆண்டுகளில் வாங்கப்பட்டதாக சொல்லப்பட்ட பத்திரங்கள் அனைத்தும் போலியாக வருவாய்துறை பதிவுத்துறை அதிகாரிகள் உதவியுடன் செய்ய பட்டதாக கண்டு பிடிக்க பட்டது. மேலும் எஸ்டேட் ஒழிப்பு சட்டம் 1948 ம் ஆண்டு வரும் முன்னே 1947 ம் ஆண்டே எப்படி சட்டம் வரப்போகிறது என்பதை எல்லாம் நன்கு கற்று தெரிந்த நபர்கள் தான் 1880 ம் ஆண்டு பத்திரங்களை உருவாக்கி ஒரு செட்டிங் பாகபிரிவினை வழக்கை தாக்கல் செய்து ஒரு டிகிரி வாங்கி இவர்கள் தான் அடுத்த என்ற ஆதாரத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் அரசை வழக்குகள் மூலம் வெளியேற்றி இருக்கிறார்கள் இதையெல்லாம் மக்கள் சார்பாக நீங்கள் கண்டுபிடித்தவர் டாக்டர் சுப்பாராமய்யா என்ற காந்திய வாத சமூக ஆர்வலர் ஆவர்
16) அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பிறகுதான் 1948 இல் நடந்த செட்டில்மெண்ட் போல புதிய செட்டில்மெண்ட் 1995 ம் ஆண்டு நடந்தது இந்த காடு ஆதிகாலத்தில் இருந்து Ryoti Land இல்லை. காடாக இருந்தாலும் அதனை அனுபவித்து வந்ததற்கான எந்த ஆவணமும் இல்லை. சமர்ப்பித்த 1880 பத்திரங்கள் அத்தனையும் மோசடி, அனுபவத்திலும் இல்லை எனவே Section 11(a) Claim முழுமையாக நிராகரிப்பு அதன் பிறகு 1600 ஏக்கரும் அரசு நிலமாகிவிட்டது
17) அதன் பிறகு Dr. Subbaramaiah மீது:
IPC 147, 148, 379, 427 உள்ளிட்ட7 பொய்யான வழக்குகள் அனைத்திலும் விடுதலை (Acquittal), வருவாய் சர்வே மற்றும் பதிவு துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள், சிங்காச்சாரி வாரிசுகள் &வாரிசுகளுக்கு பக்க பலமாக இருந்த பெரும்புள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை என்று இந்த வழக்கு முடிக்க பட்டது
18)நிலமற்றவர்களுக்கு நிலம் முதலில Lease Pattas அதன் பின்னர்
DKT Pattas பள்ளி, குடிநீர், சாலை, மின்சாரம்
மற்றும் 720 ஏக்கர் பாத்துக்காப்பாக அரசின் வசம் 570 ஏக்கர் சீரமைத்து 1.5 ஏக்கர் வீதம் நிலப் பகிர்வு என்று அரசுக்கும் மக்களுக்கும் சாதகமாக முடிந்தது.இப்படி மோசடி ஆவணங்களை உருவாக்கி நீதி மன்றத்தில் வெற்றி பெற்றாலும் மக்கள் மன்றத்தில் மோசடி நிலைச்சுவான்தார்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள்
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு+91 86100 6341

Comments