எட்டயபுரம் ஜமீன்தார் வெங்கடேஸ்வரா நாயக்கர் கட்டாலங்குளம் இனாம்தார் அழகுமுத்து கோனார் வம்சத்தை சேர்ந்த அழகுமுத்து சேவுகர் அவர்களை பத்திரம் வைத்து நில உரிமையிலிருந்து வெளியேற்ற முயற்சித்த வழக்கின் கதை!
எட்டயபுரம் ஜமீன்தார் வெங்கடேஸ்வரா நாயக்கர் கட்டாலங்குளம் இனாம்தார் அழகுமுத்து கோனார் வம்சத்தை சேர்ந்த அழகுமுத்து சேவுகர் அவர்களை பத்திரம் வைத்து நில உரிமையிலிருந்து வெளியேற்ற முயற்சித்த வழக்கின் கதை!
1) எட்டயபுரம் சமஸ்தானம் தமிழ்நாட்டின் தென் பகுதியான தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருந்த ஒரு முக்கியமான பாளைய–ஜமீன் அரசாட்சியாகும். இந்த சமஸ்தானத்தின் வரலாறு கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலிருந்து (சுமார் கி.பி. 803) தொடங்குகிறது. ஆரம்பத்தில் இந்த அரச வம்சம் நாயக்கர் மரபைச் சேர்ந்ததாகவும், சந்திரகிரி பகுதியை மையமாகக் கொண்டு ஆட்சி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
2) ஆரம்ப அரசர்கள் “நாயக்கர்” என்ற பட்டப்பெயருடன் ஆட்சி செய்தனர். கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இவர்களுக்கு “எட்டப்பன்” என்ற அடைமொழி வழங்கப்பட்டு, அரச வம்சத்தின் பெயரே எட்டப்ப நாயக்கர் மரபாக நிலைபெற்றது. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் எட்டப்ப நாயக்கர் அய்யன் காலத்தில் எட்டயபுரம் என்ற நகரம் உருவாக்கப்பட்டு, சிவன் கோயில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் “அய்யன்” என்ற பட்டப்பெயரும் அரசர்களின் பெயருடன் இணைந்தது.
3) 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில், எட்டயபுரம் சமஸ்தானம் பாஞ்சாலங்குறிச்சி போர் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் சம்பவங்களுடன் காட்டிக் கொடுத்த எட்டப்பன் என்று வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. பின்னர் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் எட்டயபுரம் ஜமீன்தாரியாக மாற்றப்பட்டு, சமஸ்தானத்தின் அரசியல் அதிகாரம் குறைக்கப்பட்டது.
4) பிரிட்டிஷ் காலத்தில் எட்டயபுரம் சமஸ்தானம் ஆங்கிலேயர்களுக்கு உட்பட்ட ஜமீன்தாரி அமைப்பாக இருந்தது. எட்டப்ப நாயக்கர் வீரபாண்டிய கட்டபொம்மனை போல் சுயேச்சை அரசு போராளி அல்ல; அவர் ஒரு கட்டுப்பட்ட அரசியல் அதிகாரம் கொண்ட ஜமீன்தாரே. இந்நிலையில் அவர் ஆங்கிலேய அரசை எதிர்த்து செயல்பட மாட்டார் என்பது உண்மை அதே போல் வெள்ளையர்கள் எட்டயபுரத்து சமஸ்தானத்து படைகளை அனுப்பி கட்டபொம்மனை தேடச் சொன்னால் கண்டிப்பாக தேடித்தான் ஆக வேண்டும். ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தார் காட்டிக் கொடுத்ததாலே அவர்களுக்கு எட்டப்பன் என்ற பெயர் இன்று வரை நிலைத்து விட்டது ஆனால் அவற்றிற்கெல்லாம் ஆதாரம் இல்லை என்று தற்பொழுது எட்டையபுரம் சமஸ்தானத்திற்கு ஆதரவாக வரலாற்று பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள்
வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
5) வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் 1960 களில் வந்திருக்கிறது இந்தப் படத்தை எதிர்த்து அப்பொழுதே அவதூறு வழக்கு போடப்பட்டு இருக்க வேண்டும். சட்டரீதியாக எதிர்கொண்டிருக்க வேண்டும் ஆனால் அதனை எட்டயபுரம் சமஸ்தானத்து குடும்பஸ்தர்கள் செய்யவில்லை! தமிழகத்தில் உள்ள சமஸ்தானங்களிலேயே பழம்பெருமை பாரம்பரியம் நீண்ட அரச மரபு கொண்ட சமஸ்தானம் எட்டயபுரம் ஆனால் அதனை சுதந்திர இந்தியாவில் பெயரை பாதுகாக்க தவறி விட்டார்கள்.
6) இந்த சமஸ்தானத்தில் எட்டப்ப ஜமீன்தாருக்கும் அவருக்கு கீழே உள்ள சேவுகர் பதவியில் இருக்கின்ற அழகுமுத்து சேவுகரன் நபருக்கும் இருக்கின்ற பிரச்சனை தான் இந்த வழக்கில் சொல்லப் போகிறேன்
Sevugar (சேவுகர்) என்ற பதவியை வகித்தவர். இந்த பதவி ஒரு சாதாரண வேலை அல்ல. அது நூறு பேர் வரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட இராணுவ–நிர்வாகப் பொறுப்பு. ஜமீன்தாரின் பாதுகாப்பு, உள்நாட்டு ஒழுங்கு, எல்லை காவல், வரி வசூல் உதவி போன்ற முக்கிய பணிகள் இந்த சேவுகர் குடும்பத்தின் பொறுப்பு. இது தலைமுறை தலைமுறையாக இந்த பதவியில் ஒரு குடும்பத்தினரை தொடர்வார்கள்.
7) இந்த அழகுமுத்து சேவுகரன் அவர்களுக்கு கட்டாலங்குளம்(Cuttalangoolam) கிராமத்தை தலைமையாகக் கொண்டு கீழ் 15 கிராமங்கள் கட்டுக்குத்தகை இனாமாக பரம்பரை பரம்பரையாய் நிரந்தரமாய் அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்று எட்டயபுர சமஸ்தானம் கி பி 1700 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்திருக்கிறது. ஆனால் அதில் சேவை கண்டிஷன் இருக்கிறது மேற்படி 15 கிராமங்களில் (பிரிவு கவுன்சில் தீர்ப்பில் fifteen Cuttoogootagay villages attached to the Cuttalangoolam division என்று குறிப்பிடப்படுகிறது) மேல் வார உரிமை வரியை அழகுமுத்து சேவகர் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக எட்டயபுரம் சமஸ்தானத்திற்கு ராணுவப்பணி செய்ய வேண்டும் இப்படியாக எட்டப்பன் ஜமீன்தார் குடும்பத்திற்கும் அழகு முத்து சேவுகர் குடும்பத்திற்கும் தலைமுறை தலைமுறையாக வாழையடி வாழையாக ஜமீன்தார்களுக்கு கீழ் கட்டுப்பட்ட இனாம்தார் உறவு இருந்தது.
9) 1848 ம் ஆண்டு எட்டயபுரம் ஜமீன்தார் அவர்கள் அழகுமுத்து சேவுகர் குடும்பத்திற்கு இருக்கின்ற கட்டுக்குத்தகை சேவை இனாம் என்பதை மறுத்தார் (Denial of Title) மேலும் அழகு முத்து சேவகர் குடும்பம் குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்கு (renter) வந்ததாக இஜரா லீஸ் (ஒன்றை ஆவணமாக தயாரிக்கிறார் மேற்படி காலக்கெடு கொண்ட வாடகை ஒப்பந்தங்களை(Ijara lease ) சமர்ப்பித்து,
சேவுகர் குடும்பத்தின் நிரந்தர உரிமையை
சட்ட ரீதியாக அழிக்க முயன்றார். பலவந்தமாக அழகுமுத்து சேவுகரை 15 கட்டுக்குத்தகை கிராமங்களில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்.
10) இதற்காக எட்டயபுரம் ஜமீன்தார் இந்த வழக்கு திருநெல்வேலி சிவில் நீதிமன்றத்தில் (Civil Court of Tirunelveli) தொடங்கினார்“இந்த 15 கிராமங்கள் எங்களுடைய நிரந்தர உரிமை” என்று அசல் வழக்கு (Original Suit) இங்கே தாக்கல் செய்யப்பட்டது. இந்த நீதிமன்றம் சேவுகர் குடும்பத்தின் உரிமையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதற்குப் பிறகு, எட்டயபுரம் ஜமீன்தார் அந்த தீர்ப்பை எதிர்த்து Madras Sudder Dewanny Adawlut-க்கு அதாவது அன்றைய சென்னை உயர்நீதிமன்றம் மேல் முறையீடு செய்தார்.
இங்கேயும் சிவில் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. அதாவது, இரண்டாவது நீதிமன்றமும் சேவுகர் குடும்பத்திற்கே ஆதரவாக தீர்ப்பளித்தது.
11) இதற்குப் பிறகே, ஜமீன்தார்
Privy Council, London-க்கு (Her Majesty in Council) மேல்முறையீடு செய்தார்.
அங்கே வழக்கு விசாரணை 1861-ல் எடுத்துக்கொள்ளப்பட்டு,12 ஜூலை 1864-ல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. Privy Council கூட
“ஜமீன்தாரின் வழக்கு fraud & perjury அடிப்படையில் உள்ளது”
என்று கூறி, கீழ் இரு நீதிமன்றங்களின் தீர்ப்பையும் முழுமையாக உறுதி செய்தது.
எட்டயபுரம் ஜமீன்தார் செய்ததாக Privy Council “fraud & perjury”என்பது IPC-யில் முழுமையாக
Sections 420, 467, 471, 191–193 மற்றும் 120B
என்ற குற்றங்களுக்கு இணையானது. அதன் பிறகு எட்டயபுரம் ஜமீன்தார் சத்தம் காட்டாமல் திரும்பி வந்து விட்டார். கட்டாரங்குளம் இனாம் கிராமங்கள் அழகுமுத்து குடும்பத்தாருக்கு நிரந்தர இனமாக நீதிமன்றம் உறுதி செய்தது
12) எந்த ஆவணங்களின் அடிப்படையில் எட்டயபுரம் ஜமீன்தார் கள்ள ஆவணமும் பொய்சாட்சியும் உருவாக்கி இருக்கிறார் என்று பிரிவி கவுன்சில் கண்டுபிடித்தது பின்வருமாறு பட்டியலிடுகிறேன்.
அ) ஜமீன்தார் தனது முழு வழக்கையும் ஒரு விஷயத்தின் மீது வைத்தார். அதாவது, அழகுமுத்து சேவுகர் குடும்பம் 1814-ல் தான் இந்த நிலத்திற்கு வந்தார்கள் அதுவும் Ijara lease என்ற சாதாரண காலக்கெடு கொண்ட வாடகை ஒப்பந்தத்தின் கீழ் வந்தார்கள் அந்த lease முடிந்தபின் 1848-ல் வெளியேற்றியது சட்டப்பூர்வம் என்று வாதாடினார்.
ஆ) இதை நிரூபிக்க அவர் நீதிமன்றத்தில் சில Ijara lease ஆவணங்களை தாக்கல் செய்தார். Privy Council முதலில் கேட்ட கேள்வி இதுதான்: “இந்த கதை உண்மையா? இந்த ஆவணங்கள் நம்பகமானதா?” என்று அழகுமுத்து சேவகர் அவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் தங்களிடமிருந்த , 1811–12 mortgage deed. ஒன்றை ஆதாரமாக சமர்ப்பித்தார்கள் அதாவது அந்த கிராமத்தின் ஒரு பகுதியை 1811–12-லேயே mortgage வைத்து இருந்தார்கள் அதனை நீதிமன்றம் ஒன்று சமர்ப்பித்தார்கள்.
இ) இதனைப் பார்த்த நீதி அரசர்கள் 1814-ல் தான் இஜ்ரா லீசுக்கு எட்டயபுரம் ஜமீன்தார் அழகு முத்து சேவுகர் அவர்களுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் எப்படி, அதற்கு முன்பே mortgage செய்து இருப்பார்கள் அது சட்டத்திலும் நடைமுறையிலும் சாத்தியமில்லை. இதுவே ஜமீன்தார் கதையை அடிப்படையில் பொய்யாக்கியது.
ஈ) 1822-ல் ம் ஆண்டு இந்த வழக்கு எல்லாம் தாக்கல் செய்வதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தாரே Collector-க்கு கொடுத்த ஒரு Urzee (மனு). அந்த மனுவில் ஜமீன்தார் தானே எழுதியிருந்தார்: “இந்த கிராமங்களை என் தந்தை அழகுமுத்து சேவுகருக்கு அவருடைய வாழ்வாதாரத்திற்காக நிரந்தர ஜம்மாவில் கொடுத்தார்; அவர் மற்றும் அவரது மகன் 1816 வரை முறையாக ஜம்மா செலுத்தினர் என்று எழுத்து மூலமாக குறிப்பிட்டு இருந்தார்கள் இந்த கலெக்டர் ஆபீஸ் ஆவணத்தை அழகுமுத்து சேவுகர் Privy Council இல் சமர்ப்பித்து விட்டார். இதனால் எட்டயபுரம் ஜமீன் உடைய பொய் கதை நீதிமன்றத்திற்கு தெரிந்து விட்டது.
உ) “1814-ல் தான் இஜ்ரா லீசில் அழகு முத்து சேவுகர் வந்தார், என்றால்; ஆனால் கலெக்டர் ஆபீஸ் பதிவேடுகளில் எட்டயபுரம் ஜமீன்தார் கொடுத்த அறிக்கையில் “1816 வரை தொடர்ந்து ஜம்மா (வரி) செலுத்தினார், என்ற விவரம் இருக்கின்றது.
ஊ) இதற்கெல்லாம் மேலாக, பழைய ஆவணங்கள் 1712 முதல் 1802 வரை பிரிட்டிஷ் அரசு பொறுப்பு ஏற்கும் வரை அவர்கள் 15 கிராமங்களுக்கு கற்றுக் குத்தகை தொகையாக எட்டயபுரம் சமஸ்தானத்திற்கு கொடுத்த ஜம்மாவை ரசீதுகளை முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டனர்.
எ) 1802 இல் எட்டயபுரம் சமஸ்தானத்தை வெள்ளையர்கள் எட்டையபுரம் ஜமீன்தாரியாக தரம் குறைக்கும் பொழுது அவர்கள் ஜமீனுள் என்னென்ன கிராமங்கள் இருக்கிறது. என்ன வகையான இனாம்கள் இருக்கிறது என்பதை எல்லாம் தெளிவாக பதிவு செய்வார்கள் எந்த பதிவேட்டில் மேற்படி 15 கிராமங்களும் Cuttoogootagay confirmation, Alagoo Moottoo Savykaran என்று குறிப்பிடப்பட்டு இருந்தது மேலும் அழகுமுத்து சேவுகர்களின் நீண்ட கால possession, பல subsequent zamindars-ன் அங்கீகார ஆவணங்கள் அனைத்தும் சேவுகர் குடும்பத்தின் நிரந்தர உரிமையை நாட்டியது “இந்த நிலங்கள் Cuttoogootagay tenure-இல் இருக்கிறது என்பது உறுதியானது.
ஐ) இவ்வளவு எதிரான ஆதாரங்கள் இருக்கும்போது, ஜமீன்தார் நீதிமன்றத்தில் சொன்ன கதை உண்மையாக இருக்க முடியாது என்பதே நீதிமன்றத்தின் முடிவு.அதனால் தான் Privy Council தங்களது தீர்ப்பில் மிகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியது. அவர்கள் சொன்னது சாரம் இதுதான்: “Appellant set up a case based in fraud and perjury.” அதாவது, ஜமீன்தார் முன்வைத்த வழக்கு உண்மையை மறைத்து, கள்ள ஆவணங்களை நம்ப வைத்து, நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற ஒரு வழக்கு., இந்த வழக்கில் எட்டயபுரம் ஜமீன்தார் “fraud and perjury” செய்தார் என்பது Privy Council-ல் நிரூபிக்கப்பட்ட உண்மை. இது இறுதி தீர்ப்பும் கூட என்பதை இங்கு பதிவு செய்கிறேன்
ஒ) சாமானிய மக்கள் நிலத்தின் மீது கவனம் எடுப்பதில்லை ஆனால் அந்த காலத்தில் இருந்த சமஸ்தானங்கள் ஜமீன்தார்கள் இனாம்தார்கள் அனைவரும் நிலத்தை ஆளுவதற்கு ஆவணங்களை உருவாக்குவதும் வெளியேற்ற முயற்சிப்பதும் என்று இருந்திருக்கிறார்கள்.
(Vencataswara Naicker, Zemindar of Ettayapuram v. Alagoo Moottoo Savykaran,
Privy Council, Judgment dated 12 July 1864
(Arguments heard on 13 March 1861),
reported in Privy Council Judgments (India).)
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு+91 86100 63410
#Ettayapuram_Zamindar #Venkateswara_Nayakkar #Kattalangulam
#Inamdar #Alagumuthu_Konar #Dynasty #Document #Right #Story #Thoothukudi #History #Nayakkar #Epithet #Jagaveeraramakumarar #Panchalankurichi_War
#Warrior #Veerapandiya_Kattabomman
#Servant #Zamindar_security #Internal_order
#Borderpatroll #Tax_collection #Inam #Village
#Denial_of_Title #Renter #Ijara_lease #Civil_Court__of_Tirunelveli #Original_Suit
#Madras_Sudder_Dewanny_Adawlut #High_Court_Appeal #Privy_Council #London #Her_Majesty_in_Council #fraud_perjury #mortgage_deed #Cuttoogootagay_confirmation #Alagoo_Moottoo #Savykaran #Possession
#Subsequent #zamindars #Reported #Judgments

Comments
Post a Comment