பதிவு - 1 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்


 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில். நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116 பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள் முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE, REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

அதனை தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.

இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836

பதிவு - 1

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்

1. 03.06.2023 அன்று டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர், பிறந்தநாளை முன்னிட்டு 16-இடங்களில், புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு 5098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் NOC Committee (Land Acquisition) TNHB under the Chairmanship of CLA (நில நிர்வாக ஆணையர்) மூலம் நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.

2. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 4 (1) Notice கொடுக்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக பொதுமக்கள் தடையின்மைச்சான்று கோரியும், நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் வந்தனர். மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி, முதற்கட்டமாக 04.10.2024-அன்று பல்வேறு மாவட்டங்களுக்குட்பட்ட 2002- 21 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணையிடப்பட்டது. அடுத்த கட்டமாக சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 499.85 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பில் இருந்து விலக்களித்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் கையப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பயன்படுத்தப்படாத சூழ்நிலையில் அவைகளையும் விடுவிப்பது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3. முதல்வரின் முன்னெடுப்பு திட்டத்தின்படி வாரியத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 16,753 எண்ணிக்கையில் நிலுவையிலுள்ள விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

4. தமிழ்மொழியில் 561-ஒதுக்கீடு ஆணை மற்றும் 6593 விற்பனை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

5. முதலில் வருவோருக்கு முன்னுரிமைத் திட்டம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 326 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

6. விற்காத வீடுகளை விற்பனைக்குக் கொண்டு வர ஏஜென்சி உருவாக்கப்பட்டு நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.

7. விற்காத வீடுகளை வாடகைக்கு கொண்டுவர நடவடிக்கைஎடுத்தல்.

8. Public Quota Guidelines - Committee formed under the Chairmanship Thiru.Govindarajan (Retd) Judge.

9. 60-இடங்களில் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளை இடித்து கட்டுதல்.

10. கே.கே.நகர்பிருந்தாவன் கார்டன் திட்டத்தில், 103 குடியிருப்புகளை பொது ஒதுக்கீட்டில் கொண்டு வந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

11. வீட்டு வசதி வாரியத்தில் 44-இளநிலை உதவியாளர்கள் TNPSC- மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாண்புமிகு முதல்வரின் உத்தரவின்படி பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

12. TNHB Allotment (Site, Individual House and Apartment) New Guideline உருவாக்குவதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.

13. தமிழ்நாட்டில் 9 இடங்களில் பழைய தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளின்மறுமேம்பாட்டு திட்டம் ( Redevelopment - 9 Places in Tamil Nadu).

14. மறு மேம்பாட்டு திட்டம் ( Redevelopment Act ) - 2022 கொண்டு வரப்பட்டுள்ளது.

15. அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமைச்சட்டம் (Apartment Ownership Act) 2022 மற்றும் அடுக்குமாடி குடியிருப்புச் சட்டவிதிகள் ஆணை வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த பதிவில் தொடரும்.....................

Comments