பதிவு – 6 தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள்!
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில்தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில். நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116 பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள் முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE, REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
அதனை தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836
பதிவு – 6
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானங்கள்!
1. புதியதாக உருவாக்கப்படும் மனைப் பிரிவுகளுக்கு பட்டாமாஸ் சப்-டிவிஷன் (Patta Mass Subdivision) என்ற மனைப் பிரிவில் உள்ள ஒவ்வொரு மனையையும் தனித்தனியாக உட்பிரிவு செய்து கொடுக்கின்ற திட்டத்தை சுற்றறிக்கையாக வெளியிட்டு நடைமுறைப்படுத்தியமைக்கும்,
2. பல ஆண்டுகளாக கைமுறை கணக்குகளாகவே பாரமரித்து வந்த நத்தம் கணக்குகளை ஆன்லைன் முறையில் மாற்றி அமைத்து அதனை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வழிவகைசெய்தமைக்கும்,
3. தமிழக முழுவதும் உள்ளதங்கள் நிலங்களை பட்டாபெயர்மாற்றுவதற்கு ஆன்லைன் முறையில் எங்கிருந்தும், எந்த நேரத்திலும், தானியங்கி பட்டா பெயர் மாற்றம் திட்டம் மூலம் கட்டணம் செலுத்தி பட்டா பெறும் முறையைஅறிமுகப்படுத்தியமைக்கும்,
4. ஆன்லைன் முறையில் நிலஅளவை செய்வதற்கு விண்ணப்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியதற்கும், ஆன்லைன் மூலமாகவே அ-பதிவேடு, புலப்படம் ஆகியவை QR Code-யை பயன்படுத்தி எடுக்கும் வகையிலும், மேலும், இந்த ஆவணங்களை (Legally Valid Land Record’s) வருவாய்த்துறை அலுவலர்கள் சான்று ஆவணமாக அங்கீகரிக்கும் வகையில் செய்தமைக்கும்,
5. தமிழகம் முழுவதும் நூறு இடங்களுக்கு மேல் முகாம் அமைத்து பட்டா மாற்றம், பட்டா பிழைதிருத்தம், ஒப்படைபட்டா வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள, தொடர்ந்து 37 மாவட்டங்களில் முகாம்கள் நடத்தி தீர்வு கண்டமைக்கும்,
6. கிராம வரைபடங்களின் நிலஅளவை மற்றும் நில ஆவணங்களையும் பிளாக் வரைபடங்களையும் புலப்படங்கள் தொடர்பு விளக்கபட்டியலையும் (Co-Relation Statement) பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இணையதளச்சேவையை அறிமுகப்படுத்தியமைக்கும், 21 மாநாட்டில் – நிறைவேற்றப்பட்டக் கோரிக்கை மற்றும் தீர்மானங்கள்.
7. தமிழகத்தில் உள்ளகிராமங்களில் கிராமநத்தம், நத்தம் புறம்போக்கு, அரசு நத்தம், அரசு கிராமப் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டநிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதை நடைமுறைப்படுத்தியமைக்கும்,
8. தமிழகம் முழுவதும் புதிய மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களை உருவாக்கி வருவாய்த் துறையைமக்கள் எளிதாக அணுகி பயனடையும் வகையில் செய்தமைக்கும்,
9. தமிழகம் முழுவதும் நிலவரித் திட்டம் நடக்காத பகுதிகளுக்கெல்லாம் நகர நிலவரித்திட்டம், அசல் நிலவரித் திட்டம் மற்றும் மறு நில அளவையையும் செயல்படுத்தி வருதல் உள்ளிட்டபல்வேறு திட்டங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினருக்கு FAIRA கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
#thanksof #resoulutions #expressing #gratitude #implemented #Tamilnadu #Revenue #Disaster #Management #Department #faira2026

Comments
Post a Comment