பதிவு – 3 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் (DTCP) செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள்!


 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15-வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில். நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116 பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள் முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE, REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

அதனை தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.

இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836

பதிவு – 3

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் (DTCP) செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள்!

1. மாநிலம் முழுவதும் அனுமதிகளை பெறுவதற்கு உரிய திட்டம் / பிளான் தயாரித்து விண்ணப்பிக்கக் கூடிய வகையில் அனுமதி பெற்ற, கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் ( REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LICENSED BUILDING SURVEYOR) போன்ற தொழில் நுட்ப வல்லுநர்கள் தங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA), நகர் ஊரமைப்பு இயக்கம் (DTCP), மாநகராட்சி (CORPORATION) மற்றும் நகராட்சி (MUNICIPALITY) என தனித்தனியே பதிவு செய்ய வேண்டிய நிலையின் காரணமாக பொறியாளர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கால தாமதம் மற்றும் நேர விரையம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை (அரசாணை எண்: 79. நாள்: 27.05.2025) ஆக வெளியிட்டு CMDA/ DTCP/ CORPORATION/ MUNICIPALITY ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பொறியாளர்கள் உள்பட தொழில் நுட்ப வல்லுநர்கள் பதிவு செய்திருந்தாலும் DTCP துறையில் செயல்பட அனுமதிக்கும் வகையில் தகுந்த தீர்வினை ஏற்படுத்தி தந்தமைக்கு எமது FAIRA கூட்டமைப்பின் சார்பாக மனம் திறந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றிகளையும், தெரிவித்துக் கொள்கின்றோம்.

2. தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில், அரசாணை எண் 185/2024, நாள்: 09.10.2024, வெளியிட்டு, நகர்ப்புற வளர்ச்சி CMDA திட்ட அனுமதி விண்ணப்ப செயலாக்கம் மற்றும் இணையதளம் வாயிலாக 24 துறைகளை ஒருங்கிணைத்து, திட்டங்கள் சம்பந்தமான தடையின்மை சான்று வழங்குவதற்கான காலக்கெடுவினை நிர்ணயித்து, ஆன்லைன் திட்டமிடல் மற்றும் அனுமதி ஆணைகள் வழங்குவது சம்பந்தமாக இ-கவர்னன்ஸ் இணையம் மூலம் செயலாக்கத்திற்கு கொண்டு வருவதற்கான நடைமுறை சம்பந்தமான மேற்கண்ட அரசாணையை, எமது FAIRA கூட்டமைப்பு மனதார பாராட்டி வரவேற்கிறது.

3. தமிழ்நாட்டில் அனுமதியற்ற, திட்டமில்லாத பகுதிகள் மற்றும் (HACA) மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் எல்லைக்குட்பட்ட சுமார் 24 மாவட்டங்களில் மலைப்பகுதிகளின் எல்லைக்கு அருகில் கடந்த 01.01.2011 ஆம் ஆண்டிற்கு முன்பாக கட்டப்பட்ட கல்வி நிறுவனம் சம்பந்தமான கட்டிடங்களை வரன்முறை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வரன்முறை செய்து கட்டிட திட்ட அனுமதி பெற்றுக்கொள்ளும் வகையில், ஒரு வருட காலம் கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணை (அரசாணை எண்:092, நாள்:26.06.2025) மேற்கண்ட பகுதிகளில் அமைந்துள்ள கல்விநிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இச்சிறப்பான வாய்ப்பினை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கி அரசாணையாக வெளியிட்ட தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு FAIRA கூட்டமைப்பின் சார்பாக பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

4. கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் கோவை முழுமை திட்டம் வகுக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 04.07.2025 அன்று கோவை இரண்டாவது முழுமை திட்டம் (மாஸ்டர் பிளான்) 2041 ஐ தாங்கள் வெளியிட்டதற்கு FAIRA கூட்டமைப்பு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

5. சுயச்சான்று அடிப்படையில் ( Self Certifcation ) 2500-சதுரடி அடி மனைப்பிரிவில் 3500-சதுர அடி கட்டிடம் கட்ட அனுமதி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

6. மூன்று குடியிருப்புக்கு மிகாத 750-சதுர மீட்டர் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட முடிவுச் சான்று பெறுவதிலிருந்து விலக்களிக்கபட்டு இருந்தை 8 குடியிருப்பாக மாறியது குறித்த அரசாணை எண்.70, வீ.வ.ந.வ.து ( 1 ), நாள்.11.03.2024-இல் வெளியிடப்பட்டது.

7. அதிக உயரம் இல்லாத கட்டிடங்களில் 12 மீட்டர் உயரக் கட்டுப்பாட்டினை 14 மீட்டராக மாற்ற அரசாணை எண்.69, வீ.வ.ந.வ.து(1), நாள்.11.03.2024-ல் வெளியிடப்பட்டது.

8. 300-சதுர மீட்டருக்குள் கட்டடப் பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிகக் கட்டங்களுக்கும் கட்டட முடிவுச் சான்று (Completion Certificate) பெறுவதிலிருந்து, விலக்களிக்க அரசாணை எண்.123, நாள்:- 28.06.2023 வெளியிடப்பட்டுள்ளது.

9. கட்டட முடிவுச் சான்று கொடுக்கும்போதே பிணையைத் திரும்ப வழங்க சுற்றிக்கை ந.க.எண்.19093/22/TCPS நாள்:- 20.04.2023-கடிதம் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.

10.அனுமதி அளிக்கப்பட்ட மனைப்பிரிவில் கட்டிடம் கட்ட, தாய்ப்பத்திரம் வழங்குமாறு மனுதாரரை கோர வேண்டிய அவசியம் இல்லை என சுற்றறிக்கை ந.க.எண்.19093/22/TCPS நாள்:- 20.04.2023-கடிதம் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.

11. சாலையின் அகலங்கள் ஏற்கனவே அடிக்கணக்கில் 30-அடி, 40அடி, 60-அடி, 80அடி என்ற வகையில் கணக்கிடப்பட்டது. தற்போது மெட்ரிக் முறையில் 9மீ, 12மீ, 18மீ, 24மீ என்ற வகையில் கணக்கிடப்படுகிறது. எனவே, அடிக்கணக்கை மாற்றம் செய்யும் வகையில் மெட்ரிக் அளவுகள் கருத்தில் கொள்ளலாம் என அரசு அறிவுரையின்படி சுற்றிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

12. தொடர் கட்டிட பகுதி அறிவிப்பு (Continous Buildup Area) காரைக்குடி, நாகர்கோவில், ராஜபாளையம், கோயம்புத்தூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து நகரங்களுக்கு வரையறுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

13. OSR பரப்பு 10சமீ கணக்கீட்டின் படி மட்டுமே ( 100 ச.மீக்கு பதிலாக )வழிகாட்டு மதிப்பீட்டின் படி வசூலிக்க சுற்றறிக்கை ந.எண்.9611/2023/TCPS, 25.04.2023 அனுப்பட்டுள்ளது.

14. மனை அளவீடுகள் FMB மற்றும் உண்மையான அளவீடுகளுக்கு மாறுபடும்பட்சத்தில் பக்கத்திறவிடம் (Set Back) அனுமதிக்குக் குறைவாக இருப்பினும் அது விதிகளுக்கு பாதிப்பின்றிஅமையுமாயின் கட்டிட முடிவுச் சான்று வழங்க வழிவகை உள்ளது என சுற்றறிக்கை ந.க.எண்.19093/22/TCP5, நாள் : 20.04.2023 கடிதம் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.

15. நத்தம் நிலத்திற்கு வழங்கப்படும் தோராய பட்டா மற்றும் நிரந்தர பட்டாவை சமமாகக் கருதி கட்டிட அனுமதி வழங்கச்சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

16. மனைப்பிரிவிற்கான குறைந்தபட்ச அணுகு சாலை (Approach Road) குறித்த அரசாணை எண்.58, வீ.வ.ந.வ.து (1), நாள்:- 05.03.2024 வெளியிடப்பட்டது.

சாலையின் அகலம்

மாநகராட்சி, நகராட்சி மற்றும் Perl Urban area - 7 மீட்டர்
Town Panchayat - 6.5 மீட்டர்
Village Panchayat - 6 மீட்டர்

அடுத்த பதிவில் தொடரும்......................

#thanksof #resolutions #DTCP #projects #implement #projectimplement #Housing #Urban #Development #faira2026


Comments