பதிவு – 2 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் ( CMDA ) செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள்!
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில். நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116 பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள் முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE, REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
அதனை தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836
பதிவு – 2
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் ( CMDA ) செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள்!
1. சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியச் சாலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தளப்பரப்பு குறீயிடு (Floor Space Index) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் இளநிலை திட்டமிடல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரமைப்பு இயக்ககம் மூலம் 10 கோடி ரூபாய் நிதி வழங்கி இந்த ஆண்டு முதல் 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
3. CMDA-இல் 288-பணியிடங்கள் அதாவது 37 சதவீதம் காலியாக இருந்தது. அதில் Assistant Planner, Planning Asistant மற்றும் Driver ஆகிய பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பணியாற்றி வருகின்றனர். மற்ற காலியிடங்கள் நிரப்ப, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
4. திருமிழிசை, மீஞ்சூர், திருவள்ளுர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களுக்கு புதுநகர் வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
5. வண்டலூர் ( கிளாம்பாக்கம் ) பேருந்து நிலையம் ரூ.315-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. கூடுதலாக பல்வேறு வகையில் அருகில் உள்ள 6-ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அளவில் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது.
6. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிலையத்திற்கு முன் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
7. பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் உள்ள இரயில்வே லைனில் புதிதாக ஒரு இரயில் நிலையம் அமையவும், கூடுதல் ட்ராக் அமைக்க இரயில்வே துறையிடம் பேசப்பட்டு வருகிறது.
8. அந்த இரயில் நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையைத் தாண்டி, பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதி செய்யும் வகையில் நடைமேம்பாலம் ( SKY Walk ) அமைக்கப்பட உள்ளது. 7 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள்.
9. மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10.புதிய பேருந்து முனையம் செங்கல்பட்டில் அமைக்க உத்தேசம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
11. சென்னை பெருநகர வளர்ச்சி எல்லையை 1,189 சதுர கி.மீ லிருந்து 5,904 சதுர கி.மீ விரிவுப்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
12.நகர்ப்புற போக்குவரத்து அமைப்பின் ஒருங்கிணைந்த திட்டமிடுதல் சென்னை மாநகராட்சி மெட்ரோ இரயில், நெடுஞ்சாலை போக்குவரத்து அனைத்து அமைப்புகளையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கின்ற பணியை செய்யும் அமைப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையில் CUMTA அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
13.வெளிவட்டச் சாலை ( ORR ) மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62.31 கிலோமீட்டர் வரை தூரம் உள்ள சாலையின் இரு புறத்திலும் 50 மீட்டருக்கு மேல் 2 கிலோ மீட்டர் வரை Land Pooling முறைப்படி அபிவிருத்தி செயல்படுத்துதல்.
14. ஒற்றை சாளர முறையில் ( Single Window System ) விரைவில் திட்ட அனுமதி வழங்குதல்.
15. 2027-2046 ஆண்டிற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
16.கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் ( CRZ ) வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு கட்ட தளப்பரப்பு குறியீடு ( Floor Space Index ) அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசால் மத்திய அரசின் அனுமதிக்கு, கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
17.சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மெரினா முதல் கோவளம் இடையேயான சுமார் 30 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை ரூ.100-கோடி மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட்டுப் புத்தாக்கம் செய்யப்படும்.
18.சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் நீர்முனை மற்றும் ஏரிக்கரை மேம்பாடு பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், மற்றும் புழல் ஆகிய பகுதிகளில் ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
19. பழைய மகாபலிபுரம் சாலையையும் கிழக்கு கடற்கரைச் சாலையையும் இணைக்க ரூ.180 -கோடி செலவில் உயர்மட்ட சுழற்சாலை வகை மேம்பாலம் கட்டப்படும்.
அடுத்த பதிவில் தொடரும்......................

Comments
Post a Comment