கடலூர் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக நடந்தது!

  கடலூர் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக நடந்தது!



27.11.2021 அன்று கடலூர் புதுப்பாளையம் ஆருத்ரா அரங்கில் வழிகாட்டுதல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யபட்டு அறிவிக்கபட்டு விட்டது!இந்த நிலையில் தொடர் மழை அறிவிப்பு உள்ளபடியே பயனாளிகள் வருவார்களா என்ற லேசான தயக்கத்தை உருவாக்கி விட்டு இருந்தது
ஆனால் நிகழ்ச்சி தொடர் மழை இருந்தாலும் வெற்றிகரமாக நடந்து விட்டது! இந்த நிகழ்வு காலையில் சிறிது தாமதமாக ஆரம்பித்து மதியம் ஒரு மணி வரை நில சிக்கல் என்று வருபவர்களுக்கு அவர்களின் சிக்கலை ஆவணப்படுத்துகிற வேலை நடந்தது அண்ணன் பாபநாசம் ஜெயகுமார் சோளிங்கர் மோகன் கிருஷ்ணகிரி முத்து ஒமலூர் தமிழ் ஆகியோர் முழு மூச்சாக ஆவணப்படுத்துகின்ற வேலையை செய்தார்கள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தம்பி அருண்குமார் அனைவருக்கும் தேனீர் மதிய உணவு ,முட்டை பிரியாணி தன் செலவிலேயே அனைவருக்கும் விருந்து வழங்கினார். அதன் பிறகு மதியம் மேடை மரியாதை நிகழ்ச்சி செய்ப்பட்டது நிதிகொடுத்தோர் உடல் உழைத்தோர் அனைவருக்கும் நன்றி நவிலபட்டது நினைவு கேடயம் வழங்கபட்டது பொன்னாடை போர்த்தபட்டது விருந்தினர்கள் திரு.பரமகுரு ,வளவனூர் ஜெயபாலன் மற்றும் பாபநாசம் ஜெயகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்
அதன்பிறகு மதியம் 2மணி யில் இருந்து இரவு 8மணிவரை வந்து இருந்த அனைவருக்கும் தனிதனியாக சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் நேரடி கலந்தாய்வு செய்து லீகல் சிக்கலையும் அதில் பின்னபட்டு இருக்கும் உணர்ச்சி சிக்கலையும் பிரித்து கையாளுவது சம்மந்தமாக உரையாற்றினார்
அண்ணன் நமது நிகழ்வுக்கான முன் முயற்சியாளர் ஊரப்பாக்கம் சுப்பிரமணியம் ,அண்ணன் சுவிக்னேசுராஜா,அண்ணன் வேலுர் சாமி,அண்ணன் பாலாஜி,அண்ணன் மகேஷ் பிரபு ,அண்ணன் அருண் பிரசாத்,அண்ணன் பொன் செல்வின் ஆகியோர் ஒவ்வொரு மூலையில் இருந்து கொண்டு நிகழ்சிக்கு நிதிகொடை அனுப்பி இருந்தார்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அண்ணன் சத்யராஜன் திருநின்றவூர் அவர்கள் நோட்டு பேனா அமேசான் மூலமாக ஆர்டர் செய்ய ஒருங்கிணைப்பாளர் அருண்குமாரிடம் பேசி இருக்கிறார். அதன்பிறகு கூடுதலாக ஹைலைட்டர் வாங்கி அனுப்ப சொல்லி இருந்தோம் அதனையும் சேர்த்து வாங்கி அனுப்பி இருக்கிறார் அதேபோல் கடந்த முறை விழுப்புரம் நிகழ்ச்சியில் பயனாளியாக இருந்தவர் பாண்டிசேரி செந்தில் முருகன் அண்ணன் அவர்கள் இந்த நிகழ்சி்சக்கு தேவையான சால்வைகள் நன்கொடையாக அளித்தார் அதே போல் அவர் நேரடியகா கலந்து கொண்டு இரசீது போடுதல் கணக்கு எழுதுதல் போன்ற பணிகளை செய்தார்
சோளிங்கர் மோகன் அவர்கள் நேரடியாக வந்து ஆவணபடுத்துதல் வேலைகளை செய்து கொடுத்து அந்த ஆவணபடுத்தும் பொழுது ஒவ்வொருவரின் ஆவணங்களையும் தனி தனி கோப்பாக்கிட ஐம்பது பைல்களுடன் நன்கொடையாக வாங்கி எடுத்து வந்துவிட்டார் .பாபநாசம் ஜெயகுமார் அண்ணன் ,கிருஷ்ணகிரி முத்து அண்ணன்,ஓமலூர் தமிழ் ஆகியோர் தொலைபயணம் வந்து நிலசிக்கல்களை ஆவணபடுத்தும் பணிகளை செய்து கொடுத்தார்கள்!அண்ணன் சிவகங்கை இராமநாதன் தன் கேமிராவால் அனைத்து நிகழ்வுகளையும் படமெடுத்து முடித்தார்
இப்படிகளபணி,நிதிகொடை,அன்பு,உறுதுணை என்று பலர் ஒத்துழைப்பால் தொடர்ந்து நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சி நடைபெறுகிறது! தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடப்பதற்கு இதேபோல் உங்களின் தொடர் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை
9962265834/9841665836

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்