Posts

Showing posts from March, 2020

சர்வே கணிதம்

Image
சர்வேவுக்கு என்று அடிப்படையில் நல்ல கணித தேர்ச்சியும், கணிதத்தின் எளிமையான அடிப்படை உண்மைகளும் நமக்கு கட்டாயம் தெரிய வேண்டும் பெத்தவளே! அப்படி தெரியும்போது தான் களத்தில் நிலங்களை அளக்கும்போதும் அளந்த நிலங்களை அப்படியே வரைபடங்களாக உருவாக்கும்போதும், தவறில்லாமல் துல்லியமானதாக உருவாக்க முடியும்மா!! கணிதத்தில் பல்வேறு வகையான உண்மைகள் தான் இருக்கின்றன அந்த உண்மையின் அடிப்படையில் தான் நம்மால் கணக்கீடுகள் செய்ய முடியும், ஆக அந்த சர்வே கணிதத்தில் உள்ள உண்மைகளை நான் வரிசை கிரமமாக பட்டியலிடுகிறேன் பெத்தவளே!! முதலில் கோடுகளைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்வோம் ஒரு நேர்க்கோடு என்பது இரு புள்ளிகளுக்கு இடையே தூரமாகும். நேர்க்கோடுகள் படுக்கைக்கோடு செங்குத்துக்கோடு என்று மூன்று வகையாக உள்ளது. படுக்கைகோடு தரைமட்டமாகும், சாய்ப்புக்கோடு சாய்ந்த நிலையிலும் செங்குத்துக்கோடு நேராக மேல்நோக்கிய நிலையிலும் இருக்கும். அடுத்ததாக கோணங்களைப் பற்றிய உண்மைகள் தெரிந்து கொள்வோம் பெத்தவளே!  கோணங்கள் குருங்கோணம், விரிகோணம், நேர்க்கோணம் என மூன்று வகைகளாக இருக்கிறதும்மா! நேர்க்கோணம் என்பது 90 டிகிரி செங்குத்து

எந்தெந்த கோர்ட்டில் என்ன வழக்கு விசாரிக்கிறார்கள்

Image
இந்த 2020 மார்ச் மாதம் வளர்தொழில் இதழில் எந்தெந்த கோர்ட்டில் என்ன வழக்கு விசாரிக்கிறார்கள் என்ற கட்டுரை வெளியிடபட்டு இருக்கிறது. நண்பரகள் படித்து பயன்பெறுமாறு வேண்டுகிறேன் இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834

புதுசேரியில் நில அபகரிப்பு !!

Image
புதுசேரியில் நில அபகரிப்பு !!                  நில மோசடி, போலி ஆவணங்கள் எல்லாம் அதிகமாகவே நடக்கிறது. பிரெஞ்சு கட்டுபாட்டில் இருந்த போது நடந்த பிரெஞ்சு பத்திர பதிவு முறைகளும் அடுத்து தற்போது நாம் பயன்படுத்தும் ஆங்கிலேய பத்திர பதிவு முறைகளும் ஆவணங்களும் வேறு வேறு. இப்பொழுது பாண்டிசேரியில் வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் ஆங்கிலேய சட்டத்தை படித்துவிட்டு வருகிறார்கள். பழைய பத்திரங்களின் நடைமுறைகளும் பிரெஞ்சு மற்றும் இந்திய குடியுரிமை மரபுகளும் தற்பொழுது யாரும் பெரிய அளவில் புரிந்து இருப்பதாக தெரியவில்லை. இந்த வாய்ப்பை பயனபடுத்தி பல புதுசேரி சொத்துகளில் ஆவண குழப்பங்களை புதுவிதமான சிக்கல்களை உருவாக்கி நில அபகரிப்பு முயற்சிகள் நடக்கிறது. மேலும் பிரான்சில் இருப்பவர்கள் அடிக்கடி இங்கு வர வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுடைய சொத்துகள் எல்லாம் அதிக அளவில் நில அபகரிப்பு சரச்சைக்குள் வந்துவிடுகிறது. என்னால் பிரெஞ்சு ஆங்கிலோ ஆவண முறைகளின் உள்ள வேறுபாடுகளை கள நிலவரங்களை அனுபவங்களின் மூலம் உணர்ந்து இருக்கிறேன்.பிரான்சில் இருப்பவர்களின் ஒயிட் டவுன் மற்றும் இதர சொத்துகளில் சிக்கல் இருந்தால் அதனை சரிபடுத்தவும

தமிழகத்தில் நில நிர்வாக முறை இரண்டாக இருந்தது

Image
தமிழகத்தில் நில நிரவாக முறை இரண்டாக இருந்தது                           1) இருந்த நில உரிமை முறை அடுக்குமுறை உரிமையாளர்களாக இருந்தாரகள். நிலமே வைத்து இருக்க கூட உரிமை இல்லாத அடிமைகள். வயலில் வேலை மட்டும் செய்யலாம் கூலியாக விளைச்சலை பெற்றுகொள்வார்கள் . நிலத்தில் குத்தகை எடுத்து பயிர் செய்யும் உரிமை மட்டும் வைத்துள்ள குத்தகைதார்கள் விளைச்சலில் ஒரு பகுதியை வைத்துகொண்டு ஒரு பகுதியை நிலத்தின் பட்டாதாரருக்கு கொடுப்பர். நிலத்தின் பட்டாதாரர் வாங்கிய விளைச்சலை வெள்ளி பணமாக மாற்றி ஜமீன்கள் அல்லது இனாம் தாரர்களுக்கு தருவார்கள்.ஜமீன்கள் அதிலிருந்து ஒரு பகுதியை பகோடா தங்க நாணயங்களாக மாற்றி வெள்ளையர்களுக்கு கொடுப்பார்கள். இப்படி ஒரு துண்டு நிலத்தில் அடிமை முறை உரிமை, குத்தகை உரிமை, குடிவார உரிமை மேல்வார ஜமீன் உரிமை மேல்வார இனாம் உரிமை இறையாண்மை அரசு என்று நில உரிமை இருந்தது. இந்த முறையை அன்னை இந்திரா காந்தி அவர்களின் சுய முயற்சியால் தமிழகத்தில் காமராஜர் மிதமாக நடைமுறைபடுத்த ஆரம்பித்து கலைஞர் அவர்கள் 1970 களில் மிக தீவிரமாக மேற்கண்ட அனைத்து உரிமைகளையும் அடித்து நொறுக்கி அரசு மற்றும

லா பர்ச்சூன் ரியல்டி & கனசீல் நிறுவனத்தின் நிலம் சம்மந்தபட்ட கன்சல்டன்சி மற்றும் களபணி சேவைகள் விவரங்கள்

Image
La Fortune Reality & Consiel லா பர்ச்சூன் ரியல்டி & கனசீல் நிறுவனத்தின் நிலம் சம்மந்தபட்ட கன்சல்டன்சி மற்றும் களபணி சேவைகள் விவரங்கள் 1) ஜமீன், இனாம், கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை 2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை 3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை 4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள் 5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள் 6) மனைபிரிவுகளை உருவாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திறகான ஆலோசனைகள் 7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள் 8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்! 9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள் 10) நிலம் தொடரபான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் /ரியல்எஸ்டேட் ஆலோசகர் சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள:9841665836 #la #furtun

கோவில்பட்டி சங்கரன்கோவில் வியாபாரிகள் அதானி அம்பானிய விட மோசமானவர்கள்!!!

Image
கோவில்பட்டி சங்கரன்கோவில் வியாபாரிகள் அதானி அம்பானிய விட மோசமானவர்கள்!!! கோவில்பட்டி சங்கரன் கோவில் இந்த இரண்டு நகரத்திற்கும் அடிக்கடி பயணபடுவேன் அப்பொழுதெல்லாம் புதிதாக உருவாக்கபட்ட பஸ் ஸ்டாண்டுகளை பார்க்கும்போது மனது உறுத்தலாக இருக்கும்! பலகோடி ரூபாய்கள் மக்கள் வரிபணத்தை வாங்கி அதில் ஊருக்கு வெளியே ஊர் ஜனநெருக்கடியாக இருக்கிறது புதிய பஸ் ஸ்டாண்டுகளை கட்டுகின்றனர் வியாபாரிகளுக்கு தற்சமயம் வியாபாரம் போய் விடும் என்று பஸ் ஸ்டாண்டுகளை மாற்ற விடாமல் அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஒத்துழைப்போடு தொலை நோக்கோடு உருவாக்கபட்ட புதிய பேருந்து நிறுத்தங்களை வீணடித்து கொண்டு இருக்கின்றனர்.பொதுபணத்தை அநியாயத்திற்கு வீணடிக்கின்றனர் தங்களுடைய வியாபரத்திற்கு நாட்டு பணத்தை நஷ்டம் ஆக்குகிறார்கள். இந்த இரண்டு நகரங்களிலிலும் கம்யூனிஸ்டுகள் வேறு தங்கள் கம்பெனியை மக்களிடையே நடத்தி கொண்டு இருக்கின்றர். வெள்ளையன் அண்ணன் விக்கிரமராஜா அண்ணன் போன்றோர் தமிழ்நாட்டு வியாபாரிகள் உலக நிறுவனங்களால் பாதிக்கபடுகிறார்கள் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்!! கோவில்பட்டி சங்கரன் கோவில வியாபாரிகளே அரசு எந்திரத்தை வளைக்கிறார்

தின்பதும் வாயாலே வெளிக்குபோவதும் வாயாலே இருக்கும் வயதான வௌவால் ஆர்.எஸ்.பாரதிக்கு நவீன கால ஏக கலைவனின் எச்சரிக்கை!!!

Image
தின்பதும் வாயாலே வெளிக்குபோவதும் வாயாலே இருக்கும் வயதான வௌவால் ஆர்.எஸ்.பாரதிக்கு நவீன கால ஏக கலைவனின் எச்சரிக்கை!!!                                                           வரலாறு தெரியாதவன் எல்லாம் திமுகவில் குப்பைகொட்டிகொண்டு இருக்கிறான். 1925 க்கு முன்பே இந்தியாவில் உள்ள ஒடுக்கபட்ட மக்களுக்கு சாகூ மகராஜ் சமஸ்தானத்தில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகபடுத்தி சமூக நீதியை வகுத்தார். பாபா சாகிப் அவர்களும் அதனை செம்மைபடுத்தி 1925 களில் இட ஒதுக்கீடு பெற்றார். Sc பட்டியலில் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக தந்தை பெரியாரும் திமுகவும் பெற்றுதரவில்லை .உன்னை போன்ற இடை சாதியினருக்கு Sc யை போல இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார்கள்.உனக்கு சித்தாந்தம் வகுத்து தந்த தந்தை பெரியார் அவர்களே பாபா சாகிப்பை தன் தலைவர் என்று ஏற்றுகொண்டு விட்டார். உனக்கென்ன தெரியும் பச்சேரி,பறைசேரி, பற்றி !! காலையில் எழுந்தோமா திமுக ஆபிஸுக்கு போனிங்காளா பொறுக்கி தின்னோமா வந்தோமா ன்னு இருங்க!!! சமூக நீதியாகட்டும் மாநில உரிமையாகட்டும் சமத்துவமாகட்டும் பிற்படுத்தபட்டோர் நலன் ஆகட்டும் அனைத்தும் பாபாசாகிப்பின் மொழி

நல்ல டீம் அமைவதெல்லாம் நல்லோர் பெற்ற வரம்!!!

Image
நல்ல டீம் அமைவதெல்லாம் நல்லோர் பெற்ற வரம்!!! சைட்விசிட் என்று செலவில் buffer வைக்கும், கலெக்‌ஷனை ஒழுங்காக கட்டாமல் தன் கமிசனை தாண்டி எடுத்து சாப்பிடும், தான் செய்த மார்கெட்டிங் செலவுகளை கம்பெனிக்காக தான் செய்தேன் என்று தவறாமல் கணக்கு போட்டு வாங்கும் தன்மை, ஆனால் வந்து விழுந்த லீட்ஸ்கள் கம்பெனிக்கு தர மாட்டேன்  அது என் சொத்து என்று விவாதம், எந்த புரோமோஷன் ஸ்டால் போட்டாலும் எந்த பேப்பர் விளம்பரம் கோடுத்தாலும் அதன் விலை தெரியாத அதற்கு ஏற்ற உழைப்பு கொடுக்காத பிஸினஸுக்கு மெனகெடாத எந்தவித உடல்வேலைகள் செய்யாத இஸ்திரி கலையாமல் வந்து போகும் மார்கெட்டிங் டீம் .எதனையும் கற்று கொள்ளாமல் கொடுக்கின்ற நேரம் வெறும் டேபிள் தேய்ச்சிட்டு என் முன்னால் மட்டும் வேலை கடுமையாக செய்கின்ற பாவனை, சம்பளம் போனஸ் கடன் உதவி நல்லது கெட்டதுகளில் உறுதுணையாக இருந்தால் அலுவலக வேலை ஒழுங்காக செய்வார்கள் என்றால் என்று ஒபி வேலைகள் பாரத்துகிட்டு இருந்த அட்மின் டீம்!! ஆனால் நானோ தூக்கம் இழந்து ஆகாரம் ஸகிப் ஆகி கோவை சென்னை நெல்லை என்று அடிக்கடி பயணம் மார்கெட்டிங் டீம் தள்ளி போடுகின்ற வீண்டிக்கிற இடங்களில் எல்லாம் நான் இ

புயலில் கவிழந்த தவணை முறை ரியல்எஸ்டேட் கப்பலை நிமிர்த்து இருக்கிறேன்!!

Image
புயலில் கவிழந்த தவணை முறை ரியல்எஸ்டேட் கப்பலை நிமிர்த்து இருக்கிறேன்!!   1990 to 2000 களில் ஆண்டுகளில் முதன்முதலில் எல்.ஐ.சி.லைஃப் இன்சூரன்ஸ் முகவர்கள் பத்தாயிரம் போட்டா இருபதாயிரம் வரும் என்று யுலிப் திட்டங்களில் கேன்வாஸ் செய்து ஆள் சேர்த்தனர் பல பேருக்கு போட்ட முதலே வரவில்லை! வாரம் தோறும் வீட்டுக்கு இரண்டு கிலோ மட்டன் வரும் கொஞ்சம் நிலம் வரும் என்று Goat farm நிறுவனங்களில் வசூல் செய்தவர்களை பாரத்து விட்டேன், கலைமகள் சபா பெயரில் collective investment திரட்டி நிலங்கள் வாங்கி முதலீடு செய்தவர்களுக்கு திருப்புதொகை கொடுக்காத நிறுவனத்தையும் PACL  நிறுவனம் Sterling Tree magnum நிறுவனம், அனுபவ் பௌண்டேசன் என்று பல நிறுவனங்கள் மக்கள் பணத்தை திரட்டி நிலங்களில் முதலீடு செய்தார்கள்.மேற்படி நிறுவனங்களில் எனக்கு நேரடியாக நிறைய களபணி அனுபவங்கள் இருக்கிறது.(அவற்றை பற்றி எல்லாம் அடுத்து தனிபுத்தகமாக எழுதவிருக்கிறேன்) இந்த முதலாளிகள் எல்லாம் மிகவும் பத்திரமாக இருக்கிறார்கள். ஆனால்திருநெல்வேலி,கோவில்பட்டி,சாத்தூர்,தூத்துகுடி,சிவகாசி திருத்தங்கல் விருதுநகர் மதுரை பகுதிகளில் மாத தவணை சீட்டு திட்

புத்தகத்திற்கு பங்குதாரர் முதலீட்டாளர் தேவை

Image
நிலம் உங்கள் எதிர்காலம் என்ற என்னுடைய புத்தகம் 375 பக்கங்களில் மிகசிறப்பாக விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது.அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலம் சம்மந்தபட்ட விஷயங்களை எளிமையாக புரியும்படி சொல்லி இருக்கிறேன். இனிவருகின்ற மூன்றாவது பதிப்பில் இன்னும் 300 பக்கங்கள் கூட்டி 675 பக்கத்திற்கும் மேல் அதிக தகவல்களை கொடுக்க விருக்கிறேன்.அதே விலைக்கு கொடுக்க விருக்கிறேன்.ஏற்கனவே 3500 பக்கங்கள் ஆன்லைன் pdf மூலமாக அரசு ஆணைகள் உத்தரவுகள் இலவசமாக கொடுத்து இருக்கிறேன்.இந்த பதிப்பில் அதனை 5000 pdf பக்கங்களாக கொடுக்கவிருக்கறேன். புத்தகம் வெளிவர முதலீட்டாளர்கள் அல்லது பங்குதாரர்கள் தேவை Proof Reading,Editing,book layout work,book cover designing, printing and shipping போன்ற வேலைகளுக்கு தோராயமாக 2,10,000 இரண்டு. இலட்சத்து பத்தாயிரம் ஆகிறது. மேலும் புத்தகத்தின் பின் அட்டையிலும உள் அட்டை மற்றும் இடையில் உள்ள தாள்களில் நிலவணிக வீடு வணிக அது சார்ந்த தொழில் நிறுவனங்களின் நண்பர்கள் sponsor செய்தாலும் நன்றாக இருக்கும்.புத்தகம் அடக்க விலையிலே மக்களுக்கு சென்று சேரும்.ரூபாய் 5000 த்தில் இருந்து ரூபாய் 20000 வரை
Image
வியாபர உலகம் கடந்த 10 ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிட்டது என்பதை தினமும் அதில் பயணபட்டு கொண்டு இருக்கும் தொழில் முனைவர்களுக்கு நன்கு தெரியும். லீட் ஜெனரேசன், லீட் மேனேஜ்மெண்ட், சேம்பிள் மார்க்கெட்டிங்,பெர்சனல் பிராண்டிங், கன்டெண்ட் மார்க்கெட்டிங், தரமான ஆலோசனை மற்றும் தரமான சேவை விற்பனை, மனைகள் விற்பனை என்று அனைத்தும் இப்போது ஆன்லைனும் சமூக ஊடகங்களில் செய்து வருகிறேன்.ஆனால் இவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான சட்ட நடைமுறைகள் ஒவ்வொரு விதமான வரி விகிதங்கள் என்று இருப்பதால் தனி தனி நிறுவனங்களும் தனி தனி குழுவும் தேவைபடுகிறது. அதனால் ஒரே தொழிலில் சீரியல் தொழில் முனைவராக என்னை இப்பொழுது வளர்த்து எடுத்து கொண்டு இருக்கிறேன் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வகையில் எனக்கு உணர்வு ரீதியாக இருக்கின்றது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொன்றாக உருவாக்கி இருக்கிறேன்.நிறைய சவால்களுடன் இன்னும் நிறைய தூரம் பயணப்பட வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகம் தமிழகத்தில் ஒவ்வொரு இடத்தில் இருந்து என்னால் ஒருங்கிணைப்பதை விட இப்பொழுது அனைத்தையும் ஓரிடத்தில் இருந்து நிர்வாகம் செய்ய சென்னை மவுண்ட்ரோடு ஸ்பென்சர்
Image
மனதார மன்னித்து விடுகிறேன் சாமி அண்ணா!! 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஓமனாஜார்ஜ் என்ற கேரள பெண்மணி வாடிக்கையாளர் சிபிஐ காவல்துறையில் வேலை, அவரும் அவரின் கணவரும் மீஞ்சூர் அருகில் ஒரு மனை பிரிவை வாங்கி இருக்கிறார்கள். அது இரட்டை ஆவணம் சிக்கல் இருக்கிற மனை பிரிவு, வாடிக்கையாளர் வாங்கிய மனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யபட முடியவில்லை. காவல் துறையில் இருந்தாலும் நிலம் பற்றி அவர்களுக்கு விவரம் தெளிவாக தெரியாததால் என்னை அழைத்தனர். ஆவணங்களை பரிசோதித்தேன், பத்திரங்கள் சரியாக இருக்கிறது ஆனால் பட்டா மாறாமல் இருக்கிறது. பட்டாதாரரிடம் இருந்து பவர் பத்திரம் ஒன்று வாங்கி மேற்படி மனையை வேறு நபர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். நான் தனியாக என் ஆக்டிவா ஹோண்டா ஸ்கூட்டரில் இடத்தின் பத்திர நகலை எடுத்து கொண்டு இடத்தை பார்க்க சென்று இருந்தேன். அங்கு சென்றால் தான் தெரிகிறது இந்த மனை மட்டும் ஆக்கிரமிக்கிவல்லை, ஒட்டுமொத்த மனைபிரிவில் ஆக்கிரமிப்பு உள்ளது வேறு பெரிய பஞ்சாயத்து நடக்கின்ற சூழல் 50 பேர்களுக்கு மேல் இளைஞர்கள் மாஸ் காட்டி நின்று கொண்டு இருந்தார்கள். நான் நேராக அங்கு நிற்கும் இளைஞர்களிடம் சென்று வரைபடத