Posts

Showing posts from October, 2020

தேடிவந்து மனை வாங்கும் வாடிக்கையாளர்!!

Image
 தேடிவந்து மனை வாங்கும் வாடிக்கையாளர்!! திரு .பக்ருதீன் -சென்னை என்னை தேடி வந்து உங்கள் எழுத்துக்கள் வீடியோக்கள் எல்லாம் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். உங்களிடம் தான் முதலீட்டிற்கான மனை வாங்க வேண்டும் என்று ஆறு இலக்க அளவில் தொகையை கட்டிவிட்டு சென்று இருக்கிறார். அன்னாரின் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு அதிக ஊக்கத்தை அளிக்கன்றன மேலும் இவை போன்ற நிகழ்ச்சிகள் என்னுடைய கடந்த கால பிஸினஸ் காயங்களை ஆற்றிவிடும் நன்றி வாடிக்கையாளர்களே!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் /தொழில்முனைவர் www.paranjothipandian.in 9962265834

நிலசீர்திருத்தம் -முழுமையடையாத திட்டம்

Image
   நிலசீர்திருத்தம் -முழுமையடையாத திட்டம் நிலசீர்திருத்த துறையில் மூலம் அரசு உச்சவரம்பு தரிசாக்கி அதனை நிலமற்றவர்களுக்கு ஒப்படைக்கின்ற F பத்திர ஆணை நிலமற்ற மக்களுக்கு அரசு வழங்கியது. தமிழகத்தில் பலர் F பத்திர ஆணையை வைத்து இருக்கிறார்கள் தவிர நிலத்தை சுவாதீனம் எடுத்து கொள்ள முடியவில்லை. இப்படி பல இடங்களில் unfinished Task ஆக நில சீர்திருத்த துறை செயல்பாடுகள் இருந்து இருக்கின்றன.இப்படி நில ஒப்படையாக பேப்பரை மட்டும் பெற்று நிலத்தை பெறாத பயனாளிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நிலங்களை பெறுவதற்கான வேலையை நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையினர் மூலமாக செய்வோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் www.paranjothipandian.in

பழைய சிலபஸ் - தொழில் அலுவலகமும் அதன் பயனும்

Image
    பழைய சிலபஸ் தொழில் அலுவலகமும் அதன் பயனும் குடும்பம் வேறு வணிகம் வேறு இல்லாத காலத்தில் வீட்டோடு ஒட்டிய அலுவலகம் வீடு வியாபரம் குடும்பம் என்று அனைவரும் சேர்ந்து பங்களிக்கின்ற பாரக்கின்ற வாழ்க்கை அமைப்பு.இப்படி பழைய சிலபஸ் இல் இன்றும் வியாபாரத்தை பலர் நடத்திகொண்டு்இருக்கின்றார்கள். முன்பக்கம் வராந்தா அதில் நுழைந்தவுடன் பாய் விரிந்து வைத்து இருக்கும் அலுவலகம் அதன் உட்புரம் ஒரு அறையில் சரக்கு இருக்கும ஒரு குடோன்,அதன் பிறகு வீட்டிற்கான வரவேற்பரை அதன் பிறகு இல்வாழ்க்கைகான வீடு என்று ஒரு கட்டமைப்பு வியாபரத்தில் அதிக புற நெருக்கடிகள் திடீர் எதிரிகள் அந்த வியாபர தலைவரை ஆட்டும் பொழுது குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் எடுக்கின்ற முடிவுகளுக்கு அந்த வியாபார தலைவனின் உணர்ச்சிகள் (Emotion) மிக முக்கிய பங்கு வகிக்கிறது நல்ல தூக்கம், நல்ல உணவு, நல்ல செக்ஸ் தரமான அன்பு சூழ் குடும்பம் இருந்தால் வியாபார தலைவன் வெற்றி மேல் வெற்றி அடைவார்கள். மேற்சொன்ன பழைய சிலபஸில் இவையெல்லாம் இயல்பாகவே அமைந்து விடும். இப்பொழுது இருக்கின்ற பிஸ்னஸ் சூழல் அப்படி இருப்பது இல்லை! தொழி

ரியல்எஸ்டேட் தொழில்முனைவோருக்கு பாடபுத்தமாக நிலம் உங்கள் எதிர்காலம்

Image
  ரியல்எஸ்டேட் தொழில்முனைவோருக்கு பாடபுத்தமாக நிலம் உங்கள் எதிர்காலம் நன்றி வாசகர்களே! நண்பர்களே! சென்ற வருடம் நிலம் உங்கள் எதிர்காலம் இண்டாவது பதிப்பு வெளியிட்டு இருந்தேன். முழுதும் உங்கள் அன்பால் விற்று தீர்ந்தது. என்னை போல ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்ற முகவர்களுக்கு ஒரு கோனார் விளக்க உரை போல பலருக்கு உதவி இருக்கிறது. புத்தகம் மூலம் தெளிவு கிடைத்து இருக்கிறது. நிறைய நிலம் சம்மந்தபட்ட முடிவுகள் உருப்படியாக எடுத்து இருக்கிறோம். அக்கறை எடுக்காமல் வைத்து இருந்த நிலங்களுக்கு இப்பொழுது தான் பட்டா வாங்கினேன் என்றெல்லாம் பின்னூட்டம் வரும்பொழுது ஒரு நல்ல வேலையை தொழிலில் செய்து கொண்டு இருக்கின்றோம் என்ற மனநிறைவு வந்துவிட்டது. இந்த ஆயுத பூஜையில் பாடபுத்தகங்களோடு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தையும் படைத்து இருக்கும்.திருநெல்வேலி ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் இப்படிக்கு சா.மு.பஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in

புத்தக விற்பனை முன் பதிவு திட்டம் ஆரம்பம்!!!

Image
    புத்தக விற்பனை முன் பதிவு திட்டம் ஆரம்பம் நிலத்தின் பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் போய் சேர வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் 17 ஆண்டுகால இலட்சிய பயணத்தில் கிடைத்த அனுபவங்களை பாமர நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கின்ற சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் 3 ஆம் பதிப்பிற்கான முன் பதிவு திட்டம் இரண்டு பாகங்கள் 12 தொகுதிகள் 196 கட்டுரைகள் 1100 பக்கங்கள் 5000 பக்கங்கள் உள்ள அரசு உத்தரவுகள் ஆவணங்கள் பற்றிய free pdf தரமான தாள்கள் நல்ல கெட்டி அட்டை பைண்டிங் முன்பதிவு செய்யும் ஆரம்ப நாள்:01.11.2020 புத்தகம் வெளிவரும் நாள் 07.12.2020 முன்பதிவு செய்வோருக்கான சிறப்பு சலுகை 1.புத்தகத்தின் விலை ரூ.1099 முன்பதிவோருக்கு ரூ.549 மட்டும் 2)10 புத்தகம் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு நூலாசிரியரின் தமிழகம் பாண்டிசேரி நில நிரவாக வரலாறு 7.30 மணி நேர zoom மூலாமன நேரடி பயிற்சி இலவசம் 3)25 புத்தகங்கள் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு நூலாசிரியரின் பத்திர எழுத்தர் ஆவது எப்படி?தமிழகம் பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்ற இரண்டு ஆன்லைன் 14 மணிநேர பய

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

Image
    1)அழகான பெயரகள் நிலவியல் சாலை அல்லது நிலவியல் ஓடை நிலவியல் கால்பாதை, நிலவியல் வண்டி பாட்டை, போன்ற பெயரகள் எல்லாம் கிராம அ-பதிவேட்டில் பார்க்கலாம். இதனை அந்த கால செட்டில்மெண்ட் கணக்கில் பூஸ்துதி ரோடு, பூஸ்துதி பாட்டை,பூஸ்துதிஓடை என்றும் குறிப்பிடபட்டு இருக்கும் 2) சில ஊரில் பேச்சு வழக்கில் பூஸ்டர் ஓடை பூஸ்டர் ரோடு என்றும் சொல்லிகொண்டு இருப்பார்கள். இப்படிபட்ட வார்த்தைகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்றால் பட்டா நிலத்திதல் இருக்கிற ஓடை,பட்டா நிலத்தில் இருக்கிற சாலை என்று அர்த்தம் 3) பட்டா ஓடை, பட்டா சாலை இரண்டுக்கும் தனி சர்வே எண் உட்பிரிவ கொடுத்து புலப்படத்தில் கூர் செய்து (தனியாக பிரித்து காட்டி இருப்பார்கள்) அபதிவேட்டிலும் நிலவியல் பாதை என்று குறிப்பிட்டு இருப்பார்கள் 4) போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலங்களில் நிலவு வெளிச்சத்தில் அந்த நடைபாதை வண்டி பாதை ஓடைஒரமாக நடத்து முக்கிய சாலையை அடைவார்கள் அதனை நிலவியல் சாலை என்பார்கள் 5) இயற்கையாகவே தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உருவாகி ஓடும் ஓடைகள் ,நீர்வழிபாதைகள், மக்கள் நடைபாதைகளை அவர்கள் வசதிக்கு ஏற்ப பட்டா நிலங்களில் நடந்து பாதையாக மா

தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு மக்களின் நிலம் சம்பந்தபட்ட கோரிக்கை மனு:

Image
   தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு மக்களின் நிலம் சம்பந்தபட்ட கோரிக்கை மனு: தமிழகம் முழுவதும் மீண்டும் யுடிஆர் சர்வே செய்யபட வேண்டும்,தமிழகம் முழுவதும் உள்ள கிராம நத்த நிலங்களை நிலவரி திட்ட சர்வே செய்து ஆன்லைன் ஆக்க வேண்டும் ,இந்து அறநிலையதுறை வக்பு போர்டு கீழ்வார உரிமையில் இருந்து ரெவின்யு பட்டா பெற்றவர்களின் சிக்கல்களை சரி செய்ய வேண்டும் வழங்கபடாமல் இருக்கின்ற பூமிதான நிலங்களை விநியோகிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அனைத்து கட்சி தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்காக  நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் சார்பாக கோரிக்கை மனுக்கள் அனுப்ப உள்ளோம் .முதலில் தி.மு.க சார்பாக உருவாக்கபட்டுள்ள தேர்தல் வாக்குறுதி அறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு பதிவு தபாலில் அனுப்பியுள்ளேன். விரைவில் அனைத்து கட்சியினருக்கும் தபாலிலும் நேரிலும் இமெயில் மூலமும் மேற்படி நிலம் சம்மந்தபட்ட மக்களின் பிரச்சனைகளை நானும் எனது குழுவினர்களும் எடுத்து செல்ல ஆரம்பித்து இருக்கிறோம் .ஏற்கனவே சில ஆண்டுகளாக இவையெல்லாம் நான் எழுதிகொண்டும் பேசிகொண்டும் இருக்கின்ற செய்திகள்தான்.மேற்படி விஷயங்களில் அரசியல் தலைவர்களுக்க

திருநாகேசுவரத்தில் சிரமண நாக நாதர்

Image
    திருநாகேசுவரத்தில் சிரமண நாக நாதர் கள்!! ஒரு காலத்தில் சுத்தமான பருத்தி கைத்தறி வேட்டிக்கு புகழ் பெற்ற திருநாகேசுவரம் ஊர் கும்பகோணத்தின் அருகில் இருக்கின்ற அழகான பேருராட்சி ஆகும். இன்றும் ஐயங்கார்கள் திருநாகேசுவரம் எட்டு முழ வேஷ்டி விரும்பி அணிகிறார்கள் என்பதை கேள்விபட்டு இருக்கிறேன் அந்த ஊரில் இருக்கின்ற சிறப்பான கோயில் தான் நாகநாதசுவாமி திருக்கோவில் ரியல்எஸ்டேட் களப்பணிக்காக சமீபத்தில் திருநாகேசுவரம் செல்லும் பொழுது அந்த கோவிலையும் பார்த்தேன். கும்பகோணம் டூ காரைகால் செல்லும் சாலையில் பத்து ஏக்கருக்கு மேல் பரப்பளவு இருக்கிற பெரிய சமய நிறுவனம் தான் நாகநாதசுவாமி திருக்கோயில். சமூக இடைவெளி சோப்பு நீரால் கைகழுவுதல் காய்ச்சல் சோதித்தல் என்று சோதித்த பிறகு தான் உள் அனுப்பினார்கள். இராகு தோஷம் நிவர்த்தி அடைகின்ற கோயில் என்று சந்தைபடுத்தபடுகிறது. அதனால் நிறைய பேர் வருகிறார்கள். பெரிய குளம், கோட்டை போல் மதில் சுவர்கள் ,சிறப்பான கோபுரம் என்று நல்ல அமைப்பான கோயில்.நாகநாதர் பெரிய சிவலிங்கம் வடிவில் இருந்தார். கார்த்திகை மாதம் நிலவின் ஒளி அம்மன் சந்நிதியில் விழுமாறு பிறையணி நுதலாள் இருக்கிறார்
Image
என்னை அரசர்கள் வரலாறுகளில் இருந்து அடிமைகள் வரலாற்றை பார்க்க வைத்த சீகன் பால்கு !! 1830 ற்கு முன்பு தமிழகத்தில் நடைமுறையில் இருந்த சாதிய விவசாய பண்ணைய தோட்ட தொ ழிலாள அடிமைமுறையின் தமிழக அடிமைகளை பற்றி ஒரு கட்டுரையை தமிழநாடு பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்று நான் எழுதி கொண்டு இருக்கும் புத்தகத்தில் சேர்க்க விருக்கிறேன்.வெளிநாடுகளான கரீபியன் தீவு பிஜி தீவு, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் கரும்பு தோட்டங்கள்,கஞ்சா தோட்டங்களில் கொத்தடிமைகாளக வேலை பார்க்க தமிழகத்தின் கடைநிலை மக்கள் பலர் அடிமைகளாக டச்சு போர்ச்சுகீயர்,டேனிஷ் கார்ர்களால் விற்கபட்டு கப்பலில் பண்டங்கள் போல ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தார்கள்.அந்த அடிமை வியாபாரத்தை பற்றி பற்றி இந்தியாவிற்கு வந்த முதல் புராட்டஸ்டாண்டு சாமியார் பார்த்தலோமியு சீகன்பால்கு தன் கப்பல் பயணத்தில் பார்த்த அடிமை வியாபரத்தையும் அடிமைகள் கொல்லபடுதலையும் பற்றி அகடமி ஆஃப் டெத் என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் .அந்த புத்தகத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு ஏதேட்சையாக வாசித்தேன் .அதன்பிறகு தமிழகத்தின் அடிமை முறை ,கூலி முறை ,படியாள் முறை, கொத்தடிமை
Image
  உளமாற நன்றி IOV புதுச்சேரி !! அக்டோபர் 2 -சொத்து மதிப்பீட்டாளர்கள் தினத்தில் இன்ஸ்டியூசன் ஆப் வாலயுவர்ஸ்(IOV) -புதுச்சேரி உறுப்பினர்களிளிடையே zoom மூலமாக நடந்த விழாவில் சிறப்பு பேச்சாளாராக நிலம் சம்மந்தபட்ட தலைப்பில் நீண்ட உரையாற்றினேன்.பங்கேற்பாளர்கள் அனைவரும் தொழில்முறையில் அனுபவமும் பக்குவமும் உடையவர்கள்.அறிவுஜீவிகள் சிந்தனையாளர்கள் அவரகள் மத்தியில் பேசியது எனக்கான அங்கீகாரமாகவே நான் நினைக்கிறேன்.மறுநாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அண்ணன் அன்பழகன் அவர்கள் பங்கேற்பாளர்கள் அனைவ ரும் நல்ல feedback கொடுத்தார்கள் என்று என்னை மீண்டும் ஊக்கபடுத்தினார் இன்று IOV பாண்டிசேரியில் இருந்து இளமுருகன் அண்ணன் பரிசுகேடயமும் என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை வாங்கி கொள்வதற்காகவும் சிறு தோகை காசோலையும் அனுப்பி வைக்கிறோம் என்று சொன்னார்.(அடடா அங்கீகாரமும் பாராட்டும் எவ்வளவு உள்ள ஊக்கத்தை தருகிறது)அதற்கு நான் அனுப்பி வைக்க வேண்டாம் என் குழுவினரை பாண்டிசேரியல் வந்து வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி என் நண்பர் பாரதிதாசன் அவர்களை அனுப்பி பரிசு கேடயம் மற்றும் காசோலையை பெற்று கொண்டேன். இப்படி ஒரு வாய்
Image
  அதிராம்பட்டினத்தின் நெய்தல் அழகு!! வாடிக்கையாளரின் மிகவும் சிக்கலான நில சிக்கலை புரிந்து கொள்வதற்காக தஞ்சை பள்ளதாக்கின் வங்க கடலோரம் இருக்கின்ற அதிராம்பட்டினத்திற்கு மதுராந்தகத்தில் இருந்து பைக்கிலேயே இருந்தேன். வாடிக்கையாளர் மீன்பிடிதொழிலாளர் என்பதால் அவரின் நில சிக்கலுக்கான ஆய்வெல்லாம் முடித்துவிட்டு படகில் கடலுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கேட்டு கொண்டேன்.மிக மகிழச்சியாக ஒத்து கொண்டு வாடிக்கையாளர் தன்னுடைய ஃபைபர் படகில் ஏற்றி கொண்டார். மீனவர் குப்பத்திற்கும் கடலுக்கும் இரண்டு கிமீட்டர் தூரம் இருக்கிறது கடலில் இருந்து குப்பத்திற்கு வாய்க்கால் வெட்டி அந்த வாய்க்காலில் இருந்து கடலுக்கு செல்கிறார்கள்.கடலில் அதன் கடற்கரை மண்ணாகதான் இருக்கும் அதாவது சென்னை மெரினா அல்லது பிற கடற்கனர போல மணற்பாங்காக இருக்கும் என்று நினைத்தால் நிச்சயம் அது தவறு. இந்த கடற்கரை டிசைனே வேறு இங்கு பீச்சோ வெள்ளை மணலோ கிடையாது முழுதும் களி சேறுதான்.கடலை ஒட்டி பூரா இடமும் மாங்குரோவ் காடுகள்தான்.அதன் இடையில் வாய்கால் வெட்டி அந்த நீரில் இரண்டு கிமீ பயணம் அதன் பிறகு தான் வங்காள கடல் !மாங்குரோவ் காடுகள் பற்றி நாம் நிற