Posts

Showing posts from October 8, 2019

உங்கள் வீட்டுமனை பார்க் ஒதுக்கபட்ட இடத்தில் வருகிறது என்ற குழப்பமா?

Image
1) ஒராண்டாக பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகளை டிடிசிபி அப்ரூவ்டு மனைகளாக வரன்முறைபடுத்துதல் செய்ய அரசு உத்தரவிட்டு இருந்தது.அந்த வரன்முறைபடுத்துதலுக்கு பொதுமக்கள் செல்லும் பொழுதுதான் பலருக்கு இந்த பார்க் சிக்கல் குழப்பம் தெரிந்தது. 2)  பலருடைய வீட்டுமனைகள் உங்கள் இடம்  பூங்காவில் அதாவது பார்க்குக்கு ஒதுக்கபட்ட இடத்தில் வருகிறது. அதனால் டிடிசிபி வரன்முறைபடுத்துதல் செய்ய முடியாது என்று அங்கீகாரம் கேட்ட மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யபட்டன. 3) தனது சேமிப்பை போட்டு மனையை வாங்கிய மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் டிடிசிபி ஆபிஸ்கிற்கும் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.அரசு நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இதற்கு மாற்று என்ன செய்வது என்று தெரியாமல் சென்னை டிடிசிபி அலுவலகத்திற்கு சென்று சரி செய்துகொள்ள சொல்லி திருப்பி அனுப்பி கொண்டு இருக்கிறார்கள். 4) மேலும் வீட்டுமனைகளை வாங்கி போட்டுவிட்டு பல வருடங்கள் கழித்து இப்பொழுது அதில் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து அதற்கு கட்டிட அனுமதி (Building Plan)வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வாசகர்களின் ஆயுத பூஜை படையலிள்..!!

Image
திருநெல்வேலியில் திரு.இராமகிருஷ்ணன் என்பவர் ரியல்எஸ்டேட் தொழில் வெற்றிகரமாக செய்து வருகிறார். சென்ற வாரம் நிலம் உங்கள் எதிர்காலம் என்ற என்னுடைய புத்தகத்தை மதுராந்தகம் அலுவலகத்தில் இருந்து தபாலில் பெற்று இருந்தார், இன்று அவர் வாட்ஸ்அப்பில் இந்த படத்தை அனுப்பி இருந்தார். கூடவே மெசேஜும் அனுப்பி இருந்தார்.அவர்கள் வீட்டில் சரஸ்வதி பூஜையில் படைக்கும்போது நிலம் உங்கள் புத்தகத்தையும் வைத்து படைத்து இருப்பதாக சொன்னார். திரு. வெங்கடேஷ்பிரபு அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் தபாலில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தைப் பெற்று படிக்க ஆரம்பித்த உடன் தொடங்கிவிட்டேன் என்று புத்தகம் படிப்பது போல தன்னூடைய முகநூலில் பதிவு செய்திருந்தார் அவரும் ஆயுத பூஜை படையலில் தனது புத்தகத்தை வைத்திருப்பதாக படத்தை அனுப்பியிருந்தார். உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைந்தேன் வாசகர்களின் அன்பை பெற்றதற்கு மிகவும் நன்றியுணர்வுடன் திகழ்கிறேன். உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைந்தேன் வார்களின் அன்பை பெற்றதற்கு மிகவும் நன்றியுணர்வுடன் திகழ்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர். 984166