Posts

Showing posts from October 7, 2021

ஆர் கே.பேட்டை தாண்டினா ஆந்திரா! ஆனால் ஆர் கே பேட்டையே தமிழாந்திரா!

Image
  ஆர் கே.பேட்டை தாண்டினா ஆந்திரா! ஆனால் ஆர் கே பேட்டையே தமிழாந்திரா! நிலத்தின் நலமறிய ஆவல் -2 கருத்தரங்கு சோளிங்கரில் நடந்தது அதன் அருகில் இருக்கின்ற ஊர் தான் ராமகிருஷ்ணராஜு பேட்டை தமிழகத்தின் பின் தங்கிய மக்கள் வசிக்கும் புகுதி சிறிய மலை கிராமங்கள் 10 இருக்கும் அதனைவிட்டால் இருபது கிராமங்கள் தான் இந்த ஆர் கே பேட் தாலுகாவில் !இப்பொழுதுதான் இதனை ஒரு தாலுகா தலைமை நகரம் ஆக்கி இருக்கிறார்கள். அப்படியே 2 கி மீட்டர் தாண்டினால் ஆந்திரா மாநிலம் வரவேற்கிறது. இந்த பகுதி தமிழ் சும்மா சொல்ல கூடாது டோன் இழுப்பு எல்லாம் வேறு ரகம்! இருக்கிறது எனபதை கீது என்கிறார்கள்! தமிழ் வன்னியகவுண்டர்கள் எல்லாம் ரெட்டி பட்டத்தோடு உலாவருகிறார்கள்! ஏற்கெனவே ஊத்துகோட்டை பக்கம் சென்ற பொழுது ஆற்காடு முதலியார் எல்லாம் ரெட்டி பட்டம் போட்டு இருந்ததை பார்த்தேன் மெட்ராஸ் பிரசிடென்சி காலத்தில் இந்த பகுதி கார்வெட்நகர் ஜமீன் பகுதியில் இருந்தது! நிலங்களை எல்லாம் பழைய பைமாஷ் முறைபடி ஜமீன் சர்வே செய்து வைத்து இருந்தார்கள்! பத்திரங்கள் எல்லாம் தெலுங்கில் தான் இருந்து இருக்கிறது! செட்டில்மெண்டு ஆவணங்கள் 1958 இல் இருந்து தொடங்குகிறத