Posts

Showing posts from December 27, 2020

பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!

Image
   பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!   அப்ரூவ்டு மேட்டர் தான் டிடிசிபி க்கு போயிடுச்சே இனி என்ன ஜோலி ரியல்எஸ்டேட் காரங்ககிட்ட வீட்டு மனை உருவாக்கும் தொழிலில் வட்டிக்கு முதல் திரட்டி மனைப்பிரிவுகள் விற்பனை செய்து நாலு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அயராது உழைக்கின்ற ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர்களின்வழிப்பறி செய்வது போல் செய்யலாமா! கடந்த 20 வருடமாக உங்களிடம் பஞ்சாயத்து தலைவர்கள் வார்டு மெம்பர்கள் என்று ஒவ்வொருவருக்கும் கப்பம் கட்டித் தானே பஞ்சாயத்து NOC மனைகளைப் போட்டோம் அப்பொழுது அங்கீகாரம் பற்றி அரசே ஒழுங்கா கொள்கை முடிவு எடுக்கவில்லை! அப்பொழுது உருவாக்கிய மனைகளை இன்று விதி மீறல்கள் ஏன் போர்டு வைக்கிறீர்கள்! இப்பொழுது டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் வாங்க ஓலை அனுப்பி இருக்கிறார்கள்!! அதற்கு அவர்களுக்கு கப்பம் கட்டத் தானே நாங்கள் கடன் வாங்கி பணம் பிரட்டிக் கொண்டு இருக்கிறோம். வேலை புராசாஸ்ல இருக்கும்பொழுதே நீங்கள் அறிவிப்பு போர்டு வைத்து பொதுமக்களை பயமுறுத்தலாமா!! டிடிசிபியில் அங்கீகாரம் அரசுக் கட்டணம் மட்டும் கட்டச் சொல்லி வேலையை ஒரு வருடம் இழுக்காமல் இருந்தால் தான்

புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!

Image
  புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!   ரியல்எஸ்டேட் களப் பணிக்காக பழைய வேட்டவலம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த ஆலம்பாடி கிராமத்திற்குச் சென்று இருந்தேன்.  விழுப்புரம் டூ திருக்கோயிலூர் சாலை டூ வீலர் பயணத்திற்கு ஏற்ற அழகான சாலை சாலையின் இருபக்கத்தில் பெரியப் பெரிய குடைப்போல் நிழல் விரித்து இருக்கும் புளியமரங்கள் மரங்கள், இப்படி மரங்கள் இருப்பதால் வெயில் தெரியாதப் பயணம் செய்தேன். இதுபோல 1970 களில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பல புளியமர சாலைகள் எல்லாம் இப்பொழுது சாலை விரிவாக்கத்தில் பிய்த்து எடுத்துவிட்டார்கள். இப்பொழுது அருகி போய் இருக்கும் புளியமர நிழற்சாலைகளில் விழுப்புரம் -திருக்கோயிலூர் சிறப்பான சாலை.இனிவருங்காலங்களில் சாலை விரிவாக்கம் செய்தால் புளியமரத்தில் கை வைக்காமல் இருக்க விழுப்புரம் மாவட்டத்தினர் காவலாக இருக்க வேண்டிகிறேன்   இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in   #jameen   #realstate   #field   #paranjothi_pandian   #viluppuram   #Tamarind_Tree

எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!!

Image
  என்னுடைய போதிமரம்! கடந்த 18 ஆண்டுகளின் தொழில்முனைவு பயணங்களில் எனக்குள் நடக்கின்ற பல்வேறு மன போராட்டங்களுக்கு விடைகளை இந்த கடல்தாயிடம் வந்து அமரந்து அதனுடன் பேசி முடிவு எடுத்துகொள்வேன். பல்வேறு நபர்களுக்கு நான் ஆறுதல், ஹீலர், உந்துசக்தி, ஆனல் எனக்கு வலி தொய்வு களைப்பு போன்றவை ஏற்படும் பொழுது எல்லாம் அழகான கடல்தான் இளைப்பாறுதல்! தெளிவற்று இருக்கும் பொழுது இந்தக் கடலின் இரைச்சல் அனைத்தையும் சீராக்கிவிடும். ஒன்றே ஒன்றுதான் எனக்குப் பாடம் அலைகள் ஓய்வதில்லை நீயும் ஓயாமல் உழைத்துக்கொண்டு இரு!! இந்த கடலில் உன் அஸ்தி கரைக்கும் வரை!! எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர்   #கடல்   #போதி   #அலைகள்   #ஆறுதல் #ரியல்எஸ்டேட்   #பிசினஸ்   #பிராப்தம்