Posts

Showing posts from February, 2020

பாண்டிச்சேரியில் பிரஞ்சு காரர்களின் நில வரி வாங்கும் வரலாறு! தெரிந்து கொள்ள வேண்டிய 29 செய்திகள்!

Image
பாண்டிச்சேரி ,காரைக்கால்,மாகே (கேரளா) ஏனாம் ( ஆந்திரா) சந்திரநாகூர் (மேற்கு வங்காளம்) ஆகிய பிரஞ்சு இந்திய பகுதிகளுக்கு தலைநகரமாகவும் பாண்டிச்சேரியை வைத்து ஒட்டு மொத்த பிரெஞ்சு இந்தியாவை நிர்வாகம் செய்தனர் பிரெஞ்சுகாரர்கள் ஆங்கிலேயரை போல் காலனி ஆதிக்க வல்லாரசாக இந்தியாவில் ஆக வேண்டும் என்று பிரான்சுவா மார்ட்டின் காலம் முதல் டூப்ளக்ஸ் காலம் வரை பிரெஞ்சுகாரர்கள் முட்டி மோதி பார்த்தனர். இரண்டு கர்நாடாக போரும் பல்வேறு இராஜ தந்திர நடவடிக்கைகளை பிரெஞ்சு காரர்கள் செய்து பார்த்துவிட்டு ஏன் ஒரு வாட்டி சென்னை -செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றியும் பார்த்துவிட்டு பிறகு ஆங்கிலேயர்களிடம் மோதாமல் இருக்கின்ற பகுதிகளை பிஸினஸ் சென்டர்களாக வைத்து நாட்டை நிர்வாகம் செய்தனர். அப்படி இந்தியா முழுவதும் வியாபாரம் செய்ததால் பாண்டிசேரியை வியாபார தலைநகராக வைத்து தங்களுடைய வணிகத்துக்கு ஆதாரமாக பாண்டிச்சேரியை பெரிய வியாபார மையமாக மாற்ற பாண்டிசேரியை சுற்றியுள்ள நிலங்களையும் தோட்டங்களையும் நூறு ஏக்கர் இருநூறு ஏக்கர் என்று வாங்கி நிலபரப்பினை அதிக படுத்தினர். கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி நிலத்தையும் அதில் வாழ்ந்த

புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்குவது சம்மந்தமாக என்னுடைய கருத்தை தினமலர் நாளிதழில்

Image
புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்குவது சம்மந்தமாக என்னுடைய கருத்தை தினமலர் நாளிதழின் வேலூர்,திருச்சி,சேலம்,ஈரோடு,திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய எடிசன்களில் இன்று வந்து இருக்கிறது நன்றி தினமலர்

. நடைமுறையில் இல்லாத ஆனால் இப்பொழுதும் தேவைபடுகிற யுடிஆருக்கு முந்நைய 6 ஆவணங்கள்

Image
நடைமுறையில் இல்லாத ஆனால் இப்பொழுதும்  தேவைபடுகிற யுடிஆருக்கு முந்நைய 6 ஆவணங்கள் 1)S.L.R  எஸ் .எல்.ஆர் ஆவணம் செட்டில் மெண்டு லேண்டு ரிக்கார்டு என்பதன் சுருக்க சொல் தான் SLR ஆகும். வருவாய்துறையில் 1920 க்கு முன் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் செட்டில்மெண்டு சர்வே முடிந்த பிறகு உருவாக்கபட்ட நில உரிமையாளர் பெயர் பட்டியல் நிலத்தின் வகை மண்வயணம் விதிக்கபட்ட வரி அதன் பரப்பு உட்பட அனைத்து விவரங்களும் அதில் இருக்கும். அதன் பரப்பின் அலகுகள் பிரிட்டிஷ் இம்பாரியல் சிஸ்டம் என்பதால் ஏக்கர் செண்டு கணக்குகளில் பரப்பு இருக்கும். இது தமிழகத்தில் 1920 என்று ஒரே ஆண்டில் உருவாக்கபட்ட கணக்கு அல்ல!! சில ஊரில் 1913, சில ஊரில் 1905, சில ஊரில் 1911 என்று   வேறு வேறு ஆண்டுகளில் செட்டில்மெண்டு ரிக்கார்டு உருவாக்கபட்டு இருக்கும். ஒரே ஆண்டில் தமிழ்நாட்டை முழுவதும் செட்டில்மெண்டு சர்வே செய்து பெயர் பட்டியல் தயாரிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம். இதனை பைசலாதி ரிஜிஸ்டர் என்றும் சொல்லுவார்கள். 2) RSLR ரீ செட்டில்மெண்டு லேண்ட் ரிக்கார்டு: எஸ்.எல்.ஆரில் நில உரிமை முறையில் ஜமீன் இனாம் நிலங்கள் என்ற மேலவாரி

திருநெல்வேலிகாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கேரளா-பாராசாலா பத்திரங்கள் !!

Image
திருநெல்வேலிகாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கேரளா-பாராசாலா பத்திரங்கள் !! பதிவுசட்டத்தில் இரண்டு சார்பதிவக எல்லையில் ஒரே நேரத்தில் சொத்து வாங்கும் போது ஏதாவது ஒரு சார்பதிவக எல்லையில் பதியலாம் என்ற விதி இருக்கிறது . அதனை பயன்படுத்தி பெரும்பாலும் திருநெல்வேலியில் நில வியாபாரம் செய்பவர்கள் நிலம் வாங்குபவர்கள் இருப்பவர்கள் கேரளா மாநிலத்தில் களியகாவிளை அருகில் உள்ள பாராசாலை என்ற ஊரில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் இரண்டு செண்டோ ஒரு செண்டொ வாங்கி அதோடு திருநெல்வேலியில் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி இரண்டையும் சேர்த்து கேரளாவில் பாரசாலையில் பதிந்துவிடுவர். எதற்காக என்றால் தமிழ்நாட்டு முத்திரை தீரவை வழிகாட்டி மதிப்பு என அனைத்தும் கேரளாவை விட அதிகமாக இருக்கும். அதனால் பலர் ரயில் ஏறி பாராசாலையில் பதிவு செய்வார்கள். இப்படி கேரளாவில் பதிவது மிக பிரபலாமான நடைமுறையாக அப்பொழுது இருந்தது. 1997 ஆம் ஆண்டு தான் இதனை தமிழ்நாடு அரசு தடை செய்தது அதன்பிறகு யாரும் ரயிலேறி அடுத்த மாநிலம் சென்று பதிவது இல்லை. ஆனால் இன்றும் பல தாய் பத்திரங்களில் பாராசாலையில் பதிந்த பத்திரங்கள் திருநெல்வேலி மாவட்ட சொத்

செட்டில்மெண்டு ஆவணங்கள், கதாஸ்ட்ரல் ஆவணங்கள், யுடிஆர் ஆவணங்களிடையே உள்ள 28 வேறுபாடுகள் என்னென்ன?

Image
1) தமழ்நாட்டின் நில வருவாய் ஆவணங்களை பொறுத்தவரை அதனை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் அ)செட்டில்மெண்ட் கால ஆவணங்கள் ஆ)நில உடைமை மேம்பாட்டு திட்ட கால ஆவணங்கள் 2) பாண்டிசேரியை பொறுத்தவரை நில வருவாய் ஆவணங்களை இரண்டாக பிரிக்கலாம் அ)கதாஸ்ட்ரல் ஆவணங்கள் ஆ) நில உடைமை மேம்பாட்டு திட்ட ஆவணங்கள் ஆகும் 3) தற்பொழுது நாம் தமிழ்நாடு பாண்டிசேரியில் பயன்படுத்தி கொண்டு இருக்கும் பட்டா சிட்டா அ-பதிவேடு புலப்படம் என அனைத்தும் நில உடைமை மேம்பாட்டு திட்ட ஆவணங்கள் அதாவது யுடிஆர் ஆவணங்கள் ஆகும் 4) ஒரு நிலம் வாங்கும் போது இப்பொழுதெல்லாம் யுடிஆர் ஆவணங்கள் மட்டும் பார்த்தால் போதாது. 5) பட்டா சரியா இருக்கு அ-பதிவேடு சரியா இருந்தது என்று  சொத்து வாங்கினா திடீர் என்று அது கோவில் சொத்து, இது அறநிலைய சொத்து, இது பஞ்சமநிலம், நில உச்சவரம்பு, பூமிதானநில சிக்கல் மற்றும் இதுல குடிவார உரிமை, குத்தகை உரிமை  எங்களுக்கு இருக்கிறது என்ற புது புது பிரச்சினைகள் எல்லாம் வர ஆரம்பித்துவிடும். 6) அதனால் தமிழ் நாட்டில் செட்டில்மெண்டு ஆவணங்களையும் பாண்டிசேரியில் கதாஸ்ட்ரல் ஆவணங்களையும் ஆழமாக பார்த்தபிறகு சொத்து வாங்க வே

வழக்கறிஞர் காதலிக்கு சர்வே பற்றி ஒரு ரியல்எஸ்டேட் ஏஜென்டின் கடிதம் 2

Image
கடிதம் 2 சர்வே என்றால் என்ன?சர்வேக்கள் பல வகை !! சர்வே (Survey)என்பது ஒரு அற்புதமான கலை  நிலத்தையோ வானத்தையோ கடலையோ படுக்கையான நீளத்தை அகலத்தை பலவிதமான கணிதமுறையில் பலவிதமான உபகரணங்கள் கொண்டு அளப்பது ஆகும். அதுவே செங்குத்தளவு உயரங்களை பல்வேறுவிதமான உபகரணங்களை கொண்டு பல்வேறுவிதமான கணிதமுறையில் அளப்பதும் சர்வே தான் ஆனால் அதற்கு வேறு தொழிலநுட்ப பெயர் லெவலிங் (Levelling) என்று சொல்வார்கள் பெத்தவளே! மேற்படி சர்வே மற்றும் லெவல்லிங் முறையில் அளப்பதை ஒரு கைக்கு அடக்கமான தாளில் வரைபடம் ஆக உருவாக்கி தருவதே சர்வேவின் குறிகோள் பெத்தவளே! மேற்படி வரைபடத்தை பிளான் என்றும் மேப் என்றும் நாம் அழைக்கிறோம் மிகச்சிறிய அலகுகளில் (அளவுகளில்) மினியேச்சர் செஞ்சு வரைபடம் வரைந்தா அதற்கு பெயர் மேப் (Map). கொஞ்சம் பெரிய அலகுகளில் (அளவுகளில்) வரைபடம் உருவாக்கினால் அதற்கு பெயர் பிளான். மேப்பிக்கு நம்ம இந்திய வரைபடத்தையும் பிளானிற்கு நமது டிடிசிபி அப்ரூவடு பிளானையும் சொல்லலாம் என்ன யோசிக்கறாய் இப்பொழுதுதான் மேப்பிற்கும் பிளான்ற்கும் வித்தியாசம் தெரிந்து கொண்டாயா? நல்லது சரி பெத்தவளே!! சர்வே உண

வழக்கறிஞர் காதலிக்கு சர்வே பற்றி ஒரு ரியல்எஸ்டேட் ஏஜென்டின் கடிதம் !!!

Image
கடிதம் 1 (காதலிக்கு நில அளவை சர்வே பற்றி கடிதம் மூலம் ஒரு ரியல்எஸ்டேட் ஏஜெண்டின் ஒரு பாடம்)  என் அன்பு பெத்தவளே! வணக்கங்களும் வாழ்த்துக்களும், உன்னுடைய கோர்ட் வேலை,வழக்குகள்,விடுதி வாழ்க்கை , உன் நட்பு வட்டம் அனைத்தையும் கான்சியசாக தேர்வு செய்து வாழ்க்கையை பயணிப்பாய் என்று நம்புகிறேன். இங்கு நான் வழக்கம் போல் இரு சக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் சுற்றி கொண்டிருக்கிறேன். என்னுடைய MISSION காக அனுதினமும் உழைத்து கொண்டிருக்கிறேன். தினமும் காலையில் மட்டும் அதிகபடியாக முதுகு வலி இருக்கிறது. அந்த நேரத்தில் உன்னுடைய படங்களும் , உன்னுடைய கண்களும் எனக்கு மருந்தாய் இருக்கின்றன. கடந்த முறை நாம் இருவரும் லாங் ட்ரைவ் ECR இல் பைக்கில் சென்ற போது நீ சொல்லி இருந்த இந்த நில வழக்குகளில் சர்வே பற்றிய செய்திகளும் அதன் உள்ள நுட்பங்கள் பற்றிய குறைவான அறிதலும் அதில் இருக்கின்ற கஷ்டங்களும் நீ மண்டையை போட்டு குழப்பி கொண்டு இருக்கின்றாய் என்று சொன்னதும் மேலும் நீ வழக்கறிஞராக இருந்து கொண்டு நிலதாவாக்களில் சர்வே விஷயங்கள் பாடம் சவாலாக இருப்பதாக நீ பீல் செய்வதும் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இ