Posts

Showing posts from January 20, 2020

காலதாமதம் ஆகும் டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம்!!

Image
     1.DTCP வரன்முறை  படுத்துதலுக்கு 7 இலட்சத்திற்கு மேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற பட்டு இருக்கிறது. சிஎம்டிஏ வரன்முறை படுத்துதலுக்கு 2 இலட்சம் மேல் மனுக்கள் பெறபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2.இன்னும் மனு செய்யபடாமல் அடுத்து எப்பொழுது ஆன்லைன் ஓபன் ஆகும். எப்பொழுது  வரன்முறைபடுத்துதலுக்கு மனு செய்யலாம் என்று  இன்னும் பல இலட்சம் மனுக்கள் மக்களிடையே காத்து இருக்கின்றன. 3.மனு செய்யபட்ட வரன்முறைபடுத்துதலில் ஒரு இலட்சத்திற்கும் குறைவாக தான் வரன்முறைபடுத்தபட்டு இருக்கிறது அதுவும் லேஅவுட் பிரமோட்டரகளின் வரன்முறைபடுத்துதல்தான் அதிக அளவில் டிடிசிபி அதிகாரிகள் செய்து முடித்து இருக்கிறார்கள். 4.பல வரன்முறை படுத்துதல் மனுக்கள்  அதிகாரிகளை நேரடியாக சந்தித்தால் மட்டுமே நடக்கிறது, இயல்பாகவே சராசரியாக  மூன்று மாவட்டத்திற்கு ஒரு டிடிசிபி அலுவலகம் போட்டு குறைவான ஊழியர்கள் போட்டு அதிகபடியான வேலைகளை செய்ய  முடியாமலும்  தவிக்கின்றன டிடிசிபி அலுவலகம். 5.கடந்த 20 ஆண்டுகளாக நடந்த பஞ்சாயத்து அங்கீகார மனைபிரிவுகளை மனைகளை ஒரு ஆறுமாதத்திற்குள் மனுசெய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏன்