Posts

Showing posts from September, 2019

சார்பதிவகத்தில் தடை மனு எப்படி வழங்க வேண்டும்!!

Image
1)உங்களுக்கு உரிமை இருக்கிற அல்லது உரிமை பட்டம் இருக்கிற அல்லது உரிமையில் ஒரு கூறு இருக்கிற பங்கு இருக்கிற  ஒரு சொத்தை வேறு யாரோ போலி ஆவணங்கள் அல்லது தவறான ஆவணங்கள் மூலமோ ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமோ நீதிமன்றம் வங்கி வருவாய்துறை போன்ற வேறு ஏதாவது அமைப்பகள் மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் மூலமோ புதிதாய் பத்திரங்கள் உருவாக்கி மேலும் சட்ட குழப்பங்கள் உருவாக்கும் நோக்கில் பத்திரப்பதிவு செய்ய தாக்கல் செய்வார்கள் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் அதனை தடுத்து நிறுத்த  சார் பதிவாளருக்கு உங்கள் தரப்பு நியாயத்தை எழுதி தடை மனு என்று எழுதிக் கொடுக்கலாம். 2)தடை மனுவில் சொத்து விவரங்களை தெளிவாக எழுதி அதற்கான உங்கள் தரப்பு உரிமைக்கான ஆவணங்களை இணைத்து எதிர்தரப்பினர் பத்திரப்பதிவு தாக்கல் செய்வதை ஆட்சேபித்து மனு எழுதி அதனை நேரில் கொடுக்க வேண்டும்.சார்பதிவாளரை சந்தித்து நேரடியாக முறையிட வேண்டும். 3)பிறகு அன்றைக்கு மாலையே பதிவு தபாலில் அதே மனுவை சார்பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். நேற்று நேரடியாக வந்து பேசி மனு கொடுத்த நபர் இன்று பதிவு தபால் அனுப்பி இருக்கிறார் என்று சார்பதிவாளர் மனசில் பத

ஆழமாக சர்வே பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 29 செய்திகள்..

Image
1)சர்வேக்கள் பல வகைபடும் அவை பூமியின் கீழடுக்கில் உள்ள (lower crust) இல் இருக்கிற பலவிதமான பொருட்களை ஆய்வு செய்வதற்கும்(geological survey )கனிமவளங்கள் தாதுக்கள் நிலக்கரி எரிவாயு போன்றவற்றை ஆய்வு செய்வதற்கும்(mine survey )          2)இராணுவத்திற்காக தாக்குதல் எதிர்தாக்குதல் பாதுகாத்தல் புள்ளிகளை குறித்தல் சர்வே செய்வதும்,தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பழங்கால நினைவு சின்னங்களை கண்டுபிடிக்கவும் சர்வேக்கள் உதவிகரமாக இருக்கிறது. 3)மேற்கண்ட சர்வேக்கள் எல்லாம் மிக முக்கியமானது ஆனால் நிபுணர்களுக்கு மட்டும் புரிய கூடியது சாரதாரண மக்களுக்கு இவ்வளவு பின்புலம் இந்த சர்வேக்களில் இருக்கிறதா என்று தெரியாது. 4)நம்ம மக்களுக்கு தெரிந்ததைல்லாம் நம்ம வயற்காட்டை நிலத்தை அளக்க வரும் சர்வேயர் மற்றும் சர்வே தான்.அந்த சர்வேக்கு பெயர் வருவாய்துறை நிலதீர்வைக்கான சர்வே என்று பெயர். 5)சர்வே (Survey)என்பது ஒரு அற்புதமான கலைஅவை நிலத்தையோ வானத்தையோ கடலையோ படுக்கையான நீளத்தை அகலத்தை பலவிதமான கணிதமுறையில் பலவிதாமான உபகரணங்கள் கொண்டு அளப்பது ஆகும். 6)அதுவே செங்குத்தளவு உயரங்களை பல்வேறுவிதமான

சொத்து பதிவுகளில் உள்ள விதிவிலக்குகளும் பதிவு செய்யவில்லை என்றாலும் மாறும் உரிமை மாற்றங்களும்!! தெரிந்துகொள்ள வேண்டிய 25 செய்திகள்!!

Image
1)  நம் பதிவு சட்டத்தில் சொத்துக்கள் கைமாறும் பொழுதோ அல்லது சொத்து சம்பந்தமாக வேறு ஏதாவது பரிவர்த்தனைகள் நடக்கும் பொழுது கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் .வாங்குபவர் விற்பவர் இருவரும் சார்பதிவாளர் முன்பு  தோன்றி பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று பதிவு சட்டம் சொல்கிறது. 2)அதில் சில நபர்களுக்கு சார்பதிவாளர் அவர்கள் வீடுகளுக்கு சென்று பதிவு நடவடிக்கையில் ஈடுபடலாம்.சில நபர்களுக்கு சார்பதிவகத்தில் நேரடியாக தோன்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. 3) சில சொத்துகளுக்கு  பதிவு செய்வதில் இருந்தே விலக்கு அளிக்கபட்டு இருக்கிறது அவற்றை பற்றி எல்லாம் கீழ்வருவைகளில் விரிவாக  காண்போம். 4) ஒரு நிலத்தையோ வீட்டையோ அரசாங்கத்திடமும்  அரசாங்க சார்ந்த  நிறுவனத்திடமும் விலை கொடுத்து வாங்கும் பொழுதும் அல்லது இலவசமாக பெரும்பொழுதும் அல்லது அரசின் தவணை திட்டங்களின் மூலமாக  வாங்கும் பொழுது அதனை பயனாளிக்கு  எழுதி கொடுப்பதற்கு அரசாங்கத்தின் சார்பாக இருக்கும் அதிகாரிகள் சார் பதிவகத்தில் தோன்றி நேரடியாக பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமில்லை . 5) அவர்கள் கிரைய பத்

பிராப்தம் ரியல்டர்ஸ்ன் நிலம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள்….!

Image
கடந்த ஒரு வருட காலமாக நிறைய நிலம் சம்பந்தமான களப்பணி வேலைகளை செய்திருக்கிறோம். மேற்படி வேலைகளை எங்களது குழுவினரை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், DTCP அலுவலகம் என எங்களது குழுவினர் அலைந்து திரிந்து செயல்பட்டாலும் அரசு எந்திரத்தில் இருக்கின்ற கும்பரகரன தூக்கத்தினாலும் அதனுடைய தாமதபடுத்துதலாலும் வாடிக்கையாளரிடம் அதிருப்திகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. மேலும் கள பணி ஆற்றுவதற்கு ஏற்றவாறான பிரதிபலன் எங்களுக்கும் கிடைக்கவில்லை என்பதால், தமிழகம் முழுவதும் சென்று களப்பணி ஆற்றும் சேவைகளை நிறுத்தி கொள்கிறோம். இனி கீழ்க்கண்டவற்றிற்க்கு மட்டும் ஆலோசனைகள் தேவைபட்டால் மனு செய்தல்களும் செய்து தரப்படும் , 1. MANUAL / ONLINE EC போடுதல். கிரைய பத்திரம் முதலான ஆவணங்களை சார்பதிவகத்தில் ஆய்வு செய்தல், ஆவணங்களை சரிபார்த்தல், மற்றும் ஆலோசனை கொடுத்தல். 2. உயில் எழுதுதல், உயிலை பதிவு செய்தல், உயிலை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தல், ரகசிய உயில் எழுதுவதற்கு துணை இருத்தல், இதற்கான ஆலோசனை மற்றும் சேவைகளை அளித்தல். 3. அரசு நில ஆர்ஜிதம் சம்பந்தமா

வாருங்கள்!! உங்கள் கிராமத்தை முழுசா மெகா சர்வே செய்யலாம்!!!(தொடர் கட்டுரை-1)

Image
1)எப்படி உங்கள் கிராமத்தை அல்லது நீங்கள் நிலங்கள் வைத்து இருக்கும் கிராமத்தை முழுவதும சர்வே செய்து புல எண் வாரியாக பிரித்து இருப்பார்கள் எப்படி கிராமத்தில் உள்ள ஏரி,குளம்,மலை எல்லாம் எங்கே எங்கே இருக்கிறது என்று குறித்து இருப்பார்கள் எப்படி கிராமத்தை அளந்து கண்டங்களாக அதனைப் பிரித்து இருப்பார்கள்? 2)போன்ற விவரங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? இவையெல்லாம் புரிந்தால் சர்வே பற்றிய விவரங்களும் உங்கள் நிலங்களில் உள்ள சர்வே சிக்கல்களும் இருந்தால் அதை எப்படி தீர்க்கலாம் என்ற ஐடியாவும் சர்வேயர் உங்களுடன் பேசும் பொழுது அல்லது வருவாய் துறையினருடன் பேசும்பொழுது எளிமையாக நிலசிக்கல்களை விளங்கி கொள்வதற்கும் அது சம்மந்தமாக மனு எழுதுவதற்கும் அந்தச் சிக்கல்களை தீர்ப்பதற்கும் மிகவும உதவிகரமாக இருக்கும் 3)எனவே கற்றுகொள்ள கூடாது என்று மறைக்கபட்டு கற்று கொடுத்தாலும் புரியகூடாது என்ற படி அதிக தொழில்நுட்ப வாரத்தைகளை பயன்படுத்தி எழுத பட்டு இருக்கும் சர்வே பற்றிய செய்திகளை நான் உங்களுக்கு எளிமையாக புரிகின்ற மொழியில் புரிகின்ற எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக உங்களுக்கு விளக்க முயற்சிக

ஒரகடத்தில் ஒரு மலரும் நினைவுகள்….

Image
2009 களில் சென்னைOMR சோழங்கநல்லூரில் இருந்து ஒரு TVS XL வைத்து கொண்டு காலையில் 5மணிக்கு கிளம்புவேன். தாம்பரம் படப்பை வழியாக ஒரகடம் கூட் ரோட்டில் 6 மணிக்கெல்லாம் வந்துவிடுவன் மதியம் 3மணிவரை ஒரகடம் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மனைபிரிவுகள் எல்லாம் கள ஆய்வு செய்வேன் அன்று 15 ஆயிரத்திற்கும் 25 ஆயிரத்திற்கும் நான் வாங்கி கொடுத்த மனைகள் எல்லாம் பலரை இலட்சாதிபதி ஆக்கிவிட்டது அப்படி ஒரு மனைபிரிவுதான் இது மேட்டுபாளையம் கிராம்ம் ஓரகடம் அருகில் சில நாட்களுக்கு முன்பு எங்கள் குடும்ப வாடிக வாடிக்கையாளர் செல்லா-குமார் இல்ல திருமணத்திற்கு ஶ்ரீபெரும்புதூர் சென்று விட்டு திரும்பும் வழியில் மனையினை பார்வையிட்டு இரவியிடம் மலரும் நினைவுகளை சொன்ன பொழுது(அப்பொழுது இரவியையும் இங்கு மனை வாங்கும் வாடிக்கையாளராக கூட்டி வந்து இருக்கறேன் ஆனால் மனுஷன் அப்பொழுது மனையை வாங்கவில்லை Ravindran Pothiyamalai…….   சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இப்படிக்கு : பிராப்தம் குழு. இதோ உங்களுக்காக சா.

மோசடி பத்திரங்களை தடுக்க வருவாய் பதிவுத்துறை தவறான பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.

Image
ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலோ - இந்திய பதிவு சட்டத்தில் கீழ் நடந்த அனைத்து கிரயபத்திரங்களும் மற்றும் பிற பத்திரங்களும் அந்தந்த சட்ட எல்லைக்குள்ள நீதிமன்றத்தின்   திவான் இ அதாலத் ( தற்போது பதிவாளர் ) கீழ்தான் நடந்தது . அதன் பிறகு அதிக வேலை பளு சீரன பதிவு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்திலிருந்து அதனைப் பிரித்து பதிவுத்துறை என்று தனியாக ஒரு துறை   உருவாக்கி அதில் பதிவு நடவடிக்கைகள் எல்லாம் செய்யபட்டது பதிவு செய்யும் நடவடிக்கைகள் மட்டும்தான் செய்யவேண்டும் . பதிவிற்கு வரும் ஆவணங்களில் எழுதி கொடுப்பவருக்கு நில உரிமை இருக்கிறதா என்று ஆய்வெல்லாம் செய்ய சார்பதிவாளருக்கு உரிமை இல்லை மற்றும்   மோசடியாக பத்திரங்கள் செய்து விட்டால் அதனை இரத்து செய்கின்ற அதிகாரம் பதிவுதுறைக்கு கிடையாது என்ற இந்த இரண்டு கட்டபாடுகளை விதித்து பதிவு துறையை பதிவு வேலைகளை மட்டும் செய்யும் இயங்குதல் நடவடிக்கை மட்டுமே செய்ய வேண்டும் தீர்மானிக்கின்ற உரிமை எல்லாம் நீதிமன்றமே வைத்து இருந்தது அதற்கு காரணமும் இருந்து அ