ஹக்கீம் அண்ணன் ஒரு தகவல் மருத்துவர்!
ஹக்கீம் அண்ணன் ஒரு தகவல் மருத்துவர்! அண்ணன் ஹக்கீமை சில ஆண்டுகாளாக நேரடியாக சந்தித்த பொழுது அவரின் பெயரை Google இல் தேடினேன் அதற்கு அர்த்தம் என்னவென்று!! கற்று தேர்ந்த மனிதன் உடல் சார்ந்த மருத்துவர் என்றெல்லாம் வந்தது! உண்மையில் பெயருக்கு ஏற்றார் போல் அண்ணன் கற்றறிந்தவர் தான் நான் ஆவண எழுத்தர்கள் சொத்து சிக்கலை தீர்க்க ஆர்டிஐ எப்படி பயன்படுத்தலாம் என்று வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறேன்.அதேபோல் அண்ணன் ஹக்கீம் அவர்கள் எப்படி ஆர்டிஐ ஆர்வலர் களுக்கு வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறார் அவரின் பல ஆர்டிஐ மனுக்கள் மதுரை கார்ப்ரேசன் முதல் டெல்லி பாராளுமன்றம் வரை பட்டைய கிளப்பி இருக்கிறது.மதுரை எயிம்ஸ் அடிகல் நாட்டல் அண்ணனின் ஆர்டிஐ யின் பயன்! அண்ணன்னும் நானும் கடந்த ஒரு வருடமாக சேர்ந்து மேடை ஏறுகிறோம் !பல்வேறு செய்திகளை மக்களிடையே கொண்டு செல்கிறோம் அண்ணனும் தன்னுடைய மேடைகளை பரஞ்சோதி தம்பிக்கு கொடுக்க வேண்டும் என்று உறுதுணை செய்கிறார் அன்னாருக்கு என் அன்பும் நன்றியும்!!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9...